Election bannerElection banner
Published:Updated:

தெரிந்ததைத் தெளிந்து செய்!

அட்வைஸ் அனிருத்

ரே பாடலில் உயரம் தொட்ட இசையமைப்பாளர் அனிருத்தின் 'கொல வெறி’ மதுரையில் அன்று முகாம் கொண்டு இருந்தது. 'யங் வேர்ல்டு ஸ்கூல் பெஸ்ட்-2012’ என்ற பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கலை நிகழ்ச்சிப் போட்டிகள், மதுரை வேலம்மாள் பள்ளியில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்குச்  சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் அனிருத். மதுரை, காரைக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் எனப் பல மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டார்கள்.

தெரிந்ததைத் தெளிந்து செய்!
##~##

பல வகையான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கிய அனிருத், இறுதியாக மைக்கைப் பிடித்தார். ''எல்லாரும் என்னை 'சார்’ன்னு கூப்பிடுறீங்க. ஒரு படத்துக்கு மியூஸிக் போட்டது தப்பா? எனக்கு 21 வயசுதான் ஆகுது.  அண்ணான்னு கூப்பிடுங்க!'' என்று கூடியிருந்த மாணவர்களுக்கு வேண்டுகோள் வைத்தவர், ''நான் ஸ்கூல் படிக்கும்போது நிறையப் போட்டிகளில் கலந்துகொண்டு இருக்கேன். ஆனா, ஒண்ணுல கூட ஜெயிச்சது இல்லை. ரொம்பக் கஷ்டமா, அவமானமா இருந்தது. 'உனக்குத் தெரியாத விஷயத்தைப் பண்றதைவிட, தெரிஞ்ச விஷயத்தை பெட்டரா பண்ணு’னு என் டீச்சர் அட்வைஸ் பண்ணாங்க. 'எது நமக்கு வரும்?’னு தேடித் தேடி, 'அது மியூஸிக்தான்’னு கண்டுபிடிச்சேன். தோல்வி அடைஞ்சவங்க மனசைத் தளர விட்றாதீங்க. நாம சரியான இடத்துல இருக்கோமானு யோசிச்சுப் பாருங்க. நாம அந்த விஷயத்தைச் சரியாத்தான் பண்றோமானு நினைச்சுப் பாருங்க. ரெண்டுக்கும் நெகட்டிவ் ஆன பதில் வந்தா, நீங்க உங்களுக்கு ஆர்வமான துறையில் இல்லைனு அர்த்தம். உங்களுக்கு எது நல்லா வரும்னு தேடிப் பாருங்க. அதில் எது பண்ணி னாலும் அதில் பெஸ்ட்னு பேர் எடுக்கப் பாருங்க. நீங்களும் 10 வருஷம் கழிச்சு, ஏதாவது ஸ்கூல் மேடையில் மைக்கைப் பிடிச்சு இப்படிப் பேசலாம். ஜெயிச்சவங்களுக்கு வாழ்த்துக்கள். ஜெயிக்கப் போறவங்களுக்கும் வாழ்த்துக்கள்!'' என்று அழகாகப் பேசி அப்ளாஸ் அள்ளினார். மேடையில் இருந்து இறங்கப் போன அனிருத்தி டம் 'அவ்வளவு சீக்கிரம் உங்களை விட்ரு வோமா?  'கொல வெறி’ப் பாட்டைப் பாடிட்டுப் போங்க!'' என்று அன்பு வேண்டுகோள் வைத்தார்கள் மாணவர்கள். ''நான் பாடணும்னா நீங்க எல்லாம் எந்திருச்சு நின்னு ஆடணும்!'' என்று மொத்த ஆடிட்டோரியத்தையும் எழுந்து நின்று ஆடவைத்தார் அனிருத்.

- மோ.கிஷோர்குமார்
படங்கள்: பா.காளிமுத்து, ச.லெட்சுமிகாந்த்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு