Published:Updated:

வறுமை, நேர்காணலில் தோல்வி, ஹோட்டல் பணிப்பெண்... ஸ்மிருதி இரானியின் தெரியாத பக்கங்கள்!

வறுமை, நேர்காணலில் தோல்வி, ஹோட்டல் பணிப்பெண்... ஸ்மிருதி இரானியின் தெரியாத பக்கங்கள்!
வறுமை, நேர்காணலில் தோல்வி, ஹோட்டல் பணிப்பெண்... ஸ்மிருதி இரானியின் தெரியாத பக்கங்கள்!

கணவர் பெயர் ஸூபின் இரானி. இருவரும் குழந்தைப்பருவ நண்பர்கள். சின்ன வயதில் ஸ்மிருதியை எப்போதும் கிண்டலடித்துக்கொண்டும் பின்னலை இழுத்து வம்பு செய்துகொண்டும் இருப்பாராம் ஸூபின்.

ராகுல் காந்தியை அமேதியில் தோற்கடித்த ஸ்மிருதி இரானியை முன்னாள் தொலைக்காட்சி நடிகையாக, நாடாளுமன்ற உறுப்பினராக, மோடியின் அமைச்சரவையில் குறைந்த வயது அமைச்சராகப் பலருக்கும் தெரியும். இவற்றைத்தாண்டி, ஸ்மிருதி இரானியின் பர்சனல் பக்கங்களைக் கொஞ்சம் புரட்டலாமா...

* ஸ்மிருதியின் குடும்பம் வறுமைக்குப் பெயர் பெற்றது. அவரின் பெற்றோருக்கு மூன்று பெண் குழந்தைகள். எனவே, தன் பிள்ளைகளை 'நல்லவன் கைகளில் பிடிச்சுக் கொடுக்கணும்' என்ற மனப்பான்மையில்தான் அவர்கள் இருந்திருக்கிறார்கள். 

வறுமை, நேர்காணலில் தோல்வி, ஹோட்டல் பணிப்பெண்... ஸ்மிருதி இரானியின் தெரியாத பக்கங்கள்!

* குடும்ப பாரத்தை பத்தாவது படிக்கும்போதிலிருந்தே சுமக்க ஆரம்பித்தார் ஸ்மிருதி இரானி. அப்போதே, அழகு சாதனப் பொருள்களை புரொமோட் செய்கிற வேலைபார்த்திருக்கிறார்.

* சொன்னால் நம்பமாட்டீர்கள். மாடலிங், சீரியல், சினிமா என்று அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற துறைகளில் ஜொலித்த ஸ்மிருதியின் ஆரம்பக்கால கனவு ஒரு பத்திரிகையாளர் ஆவதுதான். அந்த வேலை சம்பந்தமான ஒரு நேர்காணலுக்குச் சென்றும் அங்கே தோற்றிருக்கிறார் ஸ்மிருதி. 

* மிஸ்.இந்தியா அழகிப் போட்டியில் 1998 வருடம் கலந்து கொண்டார். ஆனால். டாப் 9-ல் அவரால் இடம்பெற முடியவில்லை. 

வறுமை, நேர்காணலில் தோல்வி, ஹோட்டல் பணிப்பெண்... ஸ்மிருதி இரானியின் தெரியாத பக்கங்கள்!

* சீரியல் வெளிச்சத்துக்கு வருவதற்கு முன்னால் பொருளாதார ரீதியாக வாடும் தன் குடும்பத்துக்கு உதவ, புகழ்பெற்ற ஹோட்டல் ஒன்றில் டேபிள் மற்றும் தரை துடைக்கிற பணிப்பெண்ணாகவும் வேலைபார்த்திருக்கிறார் ஸ்மிருதி. அந்த ஹோட்டலுக்கு வருபவர்களை வெல்கம் செய்கிற பணிக்கு உயர வேண்டும் என்பதுதான் அவரின் அப்போதைய உயர் லட்சியமாக இருந்திருக்கிறது.

* 2000-ல்  Kyunki Saas Bhi Kabhi Bahu Thi என்ற சீரியலில் இவர் நடித்த துளசி என்கிற மருமகள் கேரக்டர் மூலம் மக்களின் மனங்களில் இடம்பிடித்தார். 2001-ல் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ராமாயண்' தொடரில் சீதை இவர்தான்.  

* கணவர் பெயர் ஸூபின் இரானி. இருவரும் குழந்தைப்பருவ நண்பர்கள். சின்ன வயதில் ஸ்மிருதியை எப்போதும் கிண்டலடித்துக்கொண்டும் பின்னலை இழுத்து வம்பு செய்துகொண்டும் இருப்பாராம் ஸூபின். திருமணத்துக்குப் பின்னும் இது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை ஒரு பேட்டியில் ஆனந்தமாக சொல்லியிருக்கிறார் ஸ்மிருதி. இந்தக் காதல் தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். கூடவே கணவர் இரானியின் முதல் திருமணத்தில் பிறந்த மகளையும் பார்த்துக்கொள்கிறார் ஸ்மிருதி. 

வறுமை, நேர்காணலில் தோல்வி, ஹோட்டல் பணிப்பெண்... ஸ்மிருதி இரானியின் தெரியாத பக்கங்கள்!

* தாத்தா ஆர்.எஸ்.எஸ்ஸில் ஈடுபாடு கொண்டவர் என்பதுதான், இவரின் பிரவேசத்துக்கு காரணம். பாரதிய ஜனதா கட்சியில் 2003-ல் இணைந்தார். 2004-ல் மகாராஷ்டிராவின் இளைஞர்கள் பிரிவில் வைஸ் பிரசிடென்ட் ஆனார். 

* ஒரே கட்சியில் இருந்தபோதும் மோடிக்கும் இவருக்கு அவ்வளவு பெரிய ஒற்றுமையெல்லாம் இருந்ததில்லையாம். மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, ஒரு தடவை பா.ஜ.க-வில் பின்னடைவுக்கு பொறுப்பேற்று மோடி முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும். இல்லையென்றால் நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று மோடிக்கே பயங்காட்டியிருக்கிறார். 

* தன்னுடைய கட்சி பேரணிகளில் எல்லாம் ஆரஞ்சு வண்ண புடவை உடுத்துகிற பழக்கம் கொண்டவர். 

* ஐந்து வருடங்கள் தொடர்ந்து சிறந்த நடிகைக்கான இந்தியன் டெலிவிஷன் அகாடமி விருதைப் பெற்றிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு