Published:Updated:

மொறு மொறு தட்டுவடை செட் வெறும் பத்து ரூபாய்தான்! - சேலத்தைக் கலக்கும் ஆரோக்கிய உணவு #MyVikatan

வீ கே.ரமேஷ்
மொறு மொறு தட்டுவடை செட் வெறும் பத்து ரூபாய்தான்! - சேலத்தைக் கலக்கும் ஆரோக்கிய உணவு #MyVikatan
மொறு மொறு தட்டுவடை செட் வெறும் பத்து ரூபாய்தான்! - சேலத்தைக் கலக்கும் ஆரோக்கிய உணவு #MyVikatan

திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கைப் போல சேலத்தின் ஸ்பெஷல் மொறு மொறு தட்டுவடை செட். பொரிகடலை, பச்சரிசிமாவில் தயாரிக்கப்பட்ட தட்டுவடையின் மீது புதினா சட்னியைத் தடவி அதன் மீது கேரட் துருவல், பீட்ரூட் துருவல், பெரிய வெங்காயத் துருவல் ஆகியவற்றோடு சிறிதாக நறுக்கப்பட்ட கொத்தமல்லி தழை சேர்த்து கலக்கிய துருவல்களை வைக்க வேண்டும். அதன் மீது தக்காளிச் சட்னி தடவிய மற்றொரு தட்டுவடையை வைக்க வேண்டும். இதுவே ஒரு தட்டுவடை செட் ஆகும்.

மொறு மொறு தட்டுவடை செட் வெறும் பத்து ரூபாய்தான்! - சேலத்தைக் கலக்கும் ஆரோக்கிய உணவு #MyVikatan

தட்டுவடை செட் மொறு மொறுப்பாகவும், சுவையாகவும், பச்சையான கேரட், பீட்ரூட் காய்கள் சேர்ப்பதால் சத்துள்ளதாகவும் இருக்கும். நான்கு தட்டுவடை செட் 10 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இந்தத் தட்டுவடை செட் சேலத்தில் அம்மாப்பேட்டை, பொன்னம்மாபேட்டை, பழைய பேருந்து நிலையம், செவ்வாய்ப்பேட்டை என சேலம் மாநகராட்சி முழுவதிலும் தெருவோரத் தள்ளுவண்டிக் கடைகளில் கிடைக்கும். பணக்காரர்கள் முதல் ஏழைகள் க்யூவில் நின்று காத்திருந்து சாப்பிடுவார்கள். கல்லூரி இளைஞர்கள் இதை விரும்பிச் சாப்பிடும் தின்பண்டமாக இருக்கிறது.   

மொறு மொறு தட்டுவடை செட் வெறும் பத்து ரூபாய்தான்! - சேலத்தைக் கலக்கும் ஆரோக்கிய உணவு #MyVikatan

இது சேலத்திலும் சேலத்தையொட்டி சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். சேலத்திலிருந்து சென்றவர்கள் சில மாவட்டங்களில் வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கத்து.