Published:Updated:

`ஊட்டியில் அனுமதியின்றி அத்துமீறும் கர்நாடகா!'- நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கர்நாடகா பூங்காவில் உரிய அனுமதி இன்றி தொங்கு பாலம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

`ஊட்டியில் அனுமதியின்றி அத்துமீறும் கர்நாடகா!'- நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

சுற்றுலாத் தலங்கள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலாத் தலங்கள் தமிழக அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தேயிலை பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்டவை தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது. படகு இல்லம், தொட்டபெட்டா போன்ற இடங்கள் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதம் உள்ள சுற்றுலாத் தலங்கள் வனத்துறை பராமரிப்பில் இயக்கப்படுகிறது. இவற்றின் மூலம் ஆண்டு முழுவதும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`ஊட்டியில் அனுமதியின்றி அத்துமீறும் கர்நாடகா!'- நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஊட்டியில் கர்நாடக அரசு சார்பில் தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருவாய் ஈட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, கர்நாடக பூங்காவில் இரு மலை முகடுகளை இணைக்கும் வகையில் 300 அடி உயரத்துக்குத் தொங்கும் பாலம்  அமைக்கப்பட்டுவருகிறது. நீலகிரி மலை மாவட்டம் என்பதால், கட்டடங்கள் கட்டுவதற்கு பல்வேறு வரைமுறைகள் உள்ளன.

`ஊட்டியில் அனுமதியின்றி அத்துமீறும் கர்நாடகா!'- நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

மாஸ்டர் பிளான் சட்டத்தின்படி, ஒரு கட்டடம் அல்லது கட்டுமானப் பணிகளைத் துவக்க பல்வேறு துறைகளிடமிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும். ஆனால், ஊட்டியில் உள்ள கர்நாடகா பூங்காவில் எந்தவித அனுமதியும் பெறாமல் தடை செய்யப்பட்ட பொக்லைன் இயந்திரங்களைக்கொண்டு சரிவுப் பகுதிகளில் மண் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

`ஊட்டியில் அனுமதியின்றி அத்துமீறும் கர்நாடகா!'- நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

மேலும், சதுப்பு பகுதிகளில் கான்கிரீட்கள் போடப்பட்டுத் தடுப்புகள் அமைக்கப்பட்டுவருகின்றன. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பது மட்டுமின்றி, பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நீர்த் தேக்கத்தின் மேல் சுமார் 300 அடி உயரத்தில் பிரமாண்டமான தொங்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தொங்கும் பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் செல்லவும் அனுமதிக்கப்படவுள்ளதாகக் கூறுகின்றனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, `நீலகிரி மாவட்ட நிர்வாகத்திடம் எந்த அனுமதியும் பெறவில்லை' எனத் தெரிவிக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism