Published:Updated:

தோனி வாங்கிய 2019 டிவிஎஸ் அப்பாச்சி RR 310... என்ன ஸ்பெஷல்?

தோனி வாங்கிய 2019 டிவிஎஸ் அப்பாச்சி RR 310... என்ன ஸ்பெஷல்?
தோனி வாங்கிய 2019 டிவிஎஸ் அப்பாச்சி RR 310... என்ன ஸ்பெஷல்?

இந்த பைக்கின் முதல் ஓனர் யார் தெரியுமா? இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் CSK அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனிதான்! 12 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தின் பிராண்டு அம்பாஸிடராக இருக்கும் MSD, பைக் ஆர்வலர் என்பது தெரிந்ததே. இளசுகள் மத்தியில் அப்பாச்சி RR 310 பைக்கை எளிதாகக் கொண்டு சேர்ப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

பஜாஜுக்கு டொமினார் D 400, மஹிந்திராவுக்கு மோஜோ XT 300, ராயல் என்ஃபீல்டுக்கு கான்டினென்டல் GT 650 பைக்குகள் எப்படியோ, டிவிஎஸ்ஸுக்கு அப்பாச்சி RR 310 அப்படி. இதில் டொமினார், பேஸ்லிஃப்ட் அவதாரத்தில் அதிரடிக்காரனாக மாறிவிட்டது; `மோஜோவின் விலை அதிகம்' எனக் கருதியவர்களுக்கான பதிலாக UT300 வந்துவிட்டது. `ஸ்போர்ட்டியான RE' என்ற பெருமையை, கான்டினென்டல் GT 535 பைக்கிடமிருந்து தட்டிப் பறித்திருக்கிறது கான்டினென்டல் GT 650. இப்படி மற்ற இந்திய பைக் நிறுவனங்கள் எல்லாம் அசத்திக்கொண்டிருக்கும்போது, டிவிஎஸ் மட்டும் சும்மா இருக்குமா என்ன? அதன் வெளிப்பாடாக 2.27 லட்சம் ரூபாயில் (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) வெளிவந்திருக்கும் அப்பாச்சி RR 310 பைக்கின் பேஸ்லிஃப்ட் மாடலில் என்னவெல்லாம் மாறியிருக்கின்றன... குறைகள் களையப்பட்டிருக்கின்றனவா?

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்

தோனி வாங்கிய 2019 டிவிஎஸ் அப்பாச்சி RR 310... என்ன ஸ்பெஷல்?

பைக் விற்பனைக்கு வந்து ஒன்றரை ஆண்டு ஆகியிருந்தாலும், பார்ப்பதற்கு ஃபிரெஷ்ஷாகவே காட்சியளிக்கிறது அப்பாச்சி RR 310. எனவே, பைக்கின் `Shark Inspired' டிசைனை மாற்றுவதில் பெரிதும் மெனக்கெடவில்லை டிவிஎஸ். ஆனால், பேஸ்லிஃப்ட் மாடலை உற்று நோக்கும்போது, சில மாற்றங்கள் தென்படுகின்றன. USD ஃபோர்க் கொண்டிருக்கும் தங்க நிற ஃபினிஷிங் அடர்த்தி முன்பைவிட அதிகரித்திருக்கிறது. விண்டு ஷீல்டில் Tri-Colour வேலைப்பாடு தொடர்வதுடன், அதற்குப் பின்னே இருக்கும் பாடி பேனலில் RR 310 பிராண்டிங் புதிதாக இடம்பெற்றுள்ளது. ஃபுல் பேரிங்கின் வலதுபுறத்தில் இன்ஜின் கேஸுக்கு அருகே `RT Slipper Clutch' எனும் ஸ்டிக்கர் புதிது.

தோனி வாங்கிய 2019 டிவிஎஸ் அப்பாச்சி RR 310... என்ன ஸ்பெஷல்?

முந்தைய மாடலில் Matt ஃபினிஷுடன்கூடிய `Racing Black' கலர் வழங்கப்பட்ட நிலையில், அதற்குப் பதிலாக Gloss ஃபினிஷ்கொண்ட `Phantom Black' கலர் வழங்கப்பட்டுள்ளது. இது, சிலருக்கு வருத்தத்தைத் தரலாம். இந்த கலரில், வெள்ளை மற்றும் சிவப்பு கலந்த Racing Strip, பைக்கின் நடுவே பயணிக்கிறது. `Racing Red' கலரில் இதுபோல எந்த மாற்றமும் கிடையாது. பின்பக்க சீட்டில் முன்பிருந்த `35 Years of TVS Racing'-க்குப் பதிலாக, RR 310 ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மற்றபடி மிஷ்லின் Pilot Street ரேடியல் டயர்கள், Bybre பெட்டல் டிஸ்க் பிரேக்ஸ், டூயல் சேனல் ஏபிஎஸ், Race Spec டிரெல்லிஸ் ஃபிரேம், அலுமினிய ஸ்விங்ஆர்ம், பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய Vertical பாணியிலான டிஜிட்டல் மீட்டர், Reverse Inclined இன்ஜின், 2 பீஸ் ஹேண்டில்பார் - சீட்கள், KYB மோனோஷாக் ஆகியவை தொடர்கின்றன. பழைய மாடலைப்போலவே இதன் ஃபிட் அண்டு ஃபினிஷிங் மற்றும் கட்டுமானத்தரம் செம.

இன்ஜின் மற்றும் ரைடிங்

தோனி வாங்கிய 2019 டிவிஎஸ் அப்பாச்சி RR 310... என்ன ஸ்பெஷல்?

கடந்த மார்ச் மாதத்தில், தனது அப்பாச்சி RR 310 வாடிக்கையாளர்களுக்கு `Complimentary Update' என்ற ரீதியில், சில அப்டேட்களை இலவசமாக வழங்கியது டிவிஎஸ். அதன்படி இன்ஜினின் செயல்திறனை (சீரான பவர் டெலிவரி) முன்னெற்றக்கூடிய ECU Remap, ஹேண்டில்பாரில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் பெரிய Bar End Weights, செயின் ஸ்ப்ராக்கெட்டின் Tension சீர்படுத்தி அதன் சத்தமில்லா இயக்கத்துக்கு வழிவகுக்கும் Chain Roller, விண்டு ஸ்க்ரீனுக்கு Rubber Beading ஆகியவை வழங்கப்பட்டிருந்தன. அவை இந்த பேஸ்லிஃப்ட் மாடலில் ஸ்டாண்டர்டாக இருக்கின்றன. தவிர, இன்ஜினில் புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் ஸ்லிப்பர் கிளட்ச் காரணமாக, கிளட்ச் பயன்படுத்துவதற்குக் கொடுக்கும் அழுத்தம் 20% குறையும் என்கிறது டிவிஎஸ்.

தோனி வாங்கிய 2019 டிவிஎஸ் அப்பாச்சி RR 310... என்ன ஸ்பெஷல்?

இதனால் எந்த வேகத்தில் சென்றாலும், திடீரென கியரைக் குறைக்க நேர்ந்தாலும் அது பைக்கின் நிலைத்தன்மையை பாதிக்காத விதத்தில் ஸ்மூத்தாக நடக்கும். எனவே, இவையெல்லாம் ஒன்றுசேரும்போது முன்பைவிட Refined ஆன ஓட்டுதல் அனுபவம் கிடைத்திருக்கிறது எனச் சொல்லலாம். ஆனால், பைக்கின் அளவுகள் மற்றும் மெக்கானிக்கல் பாகங்கள் (ஸ்லிப்பர் கிளட்ச் தவிர) ஆகியவை அதேதான் என்பதால், பர்ஃபாமன்ஸ் மற்றும் கையாளுமையில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. இந்த மாற்றங்கள், நெரிசல் மிக்க நகரச் சாலைகள் அல்லது நீண்ட நெடுஞ்சாலையில் அப்பாச்சி RR 310 பேஸ்லிஃப்ட் மாடலை ஓட்டும்போது உணர முடியும்.

முதல் தீர்ப்பு

தோனி வாங்கிய 2019 டிவிஎஸ் அப்பாச்சி RR 310... என்ன ஸ்பெஷல்?

அப்பாச்சி RR 310 பைக்கின் பலங்களான டிசைன், சிறப்பம்சங்கள், பர்ஃபாமன்ஸ், கையாளுமை ஆகியவை பேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்கின்றன. ஏற்கெனவே இந்தப் பைக்கை வைத்திருப்பவர்களுக்கு ஸ்லிப்பர் கிளட்ச் வசதி வேண்டும் என்றால், அதற்கு 3,950 ரூபாய் செலுத்தினால் போதும்! இது நிச்சயம் பெரிய ப்ளஸ்தான்.

மேலும் தனது ப்ரீமியம் பைக்கை விற்பனை செய்யக்கூடிய டீலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது டிவிஎஸ். இது அப்பாச்சி RR 310 பைக்கின் After Sales & Service அனுபவத்தை நைஸ் ஆக்கலாம். ஆனால், பைக்கில் இடம்பெற்றிருக்கும் மிஷ்லின் டயர்களுக்குப் பதிலாக, கேடிஎம் டியூக் 390 பைக்கில் இருக்கும் Metzeler Sportec டயர்கள் இடம்பெற்றிருக்கலாம். இது பைக்கின் ஹேண்ட்லிங் மற்றும் பிரேக்கிங்கில் கூடுதல் செயல்திறனைத் தந்திருக்கும் எனத் தோன்றுகிறது. 

தோனி வாங்கிய 2019 டிவிஎஸ் அப்பாச்சி RR 310... என்ன ஸ்பெஷல்?

இந்த பைக் அறிமுகமான காலத்தையும் தற்போதைய காலத்தையும் ஒப்பிட்டால், 300 - 400சிசி பைக் செக்மென்ட் தலைகீழாக மாறியிருக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்களைக்கொண்டு தயாரிக்கப்படும் கவாஸாகி நின்ஜா 300, பெனெல்லி TNT 300 பைக்கின் மறு அறிமுகம், முற்றிலும் புதிய கவாஸாகி நின்ஜா 400, Neo Sports Cafe பைக்காக பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் ஹோண்டா CB 300 R, பிஎம்டபிள்யூவின் G 310 R/G 310 GS, ஜாவா சீரிஸ், டூயல் சேனல் ஏபிஎஸ் உடனான யமஹா YZF-R3 எனப் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது. இப்படி பைக் ஆர்வலர்களுக்கு பல ஆப்ஷன்கள் ஒருபுறம் கிடைத்திருக்கிறது என்றாலும், Price to Performance & Features விஷயத்தில் ஸ்கோர் செய்யும் பைக்கே விற்பனையில் அசத்துகிறது. முந்தைய மாடலைவிட 3,000 ரூபாய் அதிக விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் அப்பாச்சி RR 310, அந்த ஏரியாவில் டிஸ்டிங்ஷன் அடித்துவிடுகிறது.

தோனி வாங்கிய 2019 டிவிஎஸ் அப்பாச்சி RR 310... என்ன ஸ்பெஷல்?

இருப்பினும் பேஸ்லிஃப்ட் பெற்றிருக்கும் பவர் க்ரூஸரான பஜாஜ் டொமினார் D 400 பைக்கை வைத்துப் பார்த்தால், இதன் விலை அதிகமோ என்ற எண்ணம் ஏழாமல் இல்லை. ஆனால், இந்த பைக்குகளை வாங்கப்போகும் வாடிக்கையாளரின் தேவைகள் மாறுபடும் என்பதால், அது டிவிஎஸ்ஸுக்குக் கவலை அளிக்காது என்றே சொல்லலாம்.

இந்த பைக்கின் முதல் ஓனர் யார் தெரியுமா? இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் CSK அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனிதான்! 12 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தின் பிராண்டு அம்பாஸிடராக இருக்கும் MSD, பைக் ஆர்வலர் என்பது தெரிந்ததே. இளசுகள் மத்தியில் அப்பாச்சி RR 310 பைக்கை எளிதாகக் கொண்டு சேர்ப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு