Published:Updated:

உலகின் முதல் பறக்கும் கார்; 644 கி.மீ வரை பயணிக்கலாம்

உலகின் முதல் பறக்கும் கார்; 644 கி.மீ வரை பயணிக்கலாம்
உலகின் முதல் பறக்கும் கார்; 644 கி.மீ வரை பயணிக்கலாம்

உலகின் முதல் பறக்கும் கார்; 644 கி.மீ வரை பயணிக்கலாம்

உலகின் முதல் பறக்கும் கார்; 644 கி.மீ வரை பயணிக்கலாம்

லிபோர்னியா ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஒன்றான அலகா ஐ டெக்னாலெஜிஸ் நிறுவனம், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் திறன்கொண்ட பறக்கும் கார் ஒன்றை அண்மையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த கார், உலக அளவில் ஹைட்ரஜன் எரிபொருள் கொண்டு பறக்கும் முதல் கார் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாக, அதே வேளையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் காரை அறிமுகப்படுத்தியிருக்கிறோம் என அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 

ஸ்கை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கார், 5 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 644 கி.மீட்டர் வரை பயணம் செய்யலாம். ஒரு மணி நேரத்துக்கு 150 கி.மீ. வேகத்தில் பயணிக்க முடியும். ஹெலிகாப்டர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கார் தயாரிக்கப்பட்டிருக்கிறது. முதலில் விமானி இயக்கும்படியான மாடல் அறிமுகமாகியிருக்கிறது. முழுமையான  ஆட்டோமேஷன் கொண்ட மாடல் பிறகு அறிவிக்கப்படும் என அலைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மொத்த எடை 454 கிலோ.

இந்த ஸ்கை காரின் வடிவமைப்பை பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் டிசைன் ஸ்டூடியோ, மிகவும் பாதுகாப்பான முறையில் வடிமைத்திருக்கிறது. ஹைட்ரஜன் எரிபொருள் மாசு ஏற்படுத்தாது என்பதால், ஸ்கை காருக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை வாடகை காராகவும், ஆம்புலன்ஸாகவும் மற்றும் அவசரக்கால பயன்பாட்டுக்கும் இதைப் பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவிலேயே ஸ்கை கார் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு