Published:Updated:

`பாட நோட்டில் வெரி குட்'க்குப் பதில் ஐஸ்கிரீம்' அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை! #CelebrateGovtSchool

`பாட நோட்டில் வெரி குட்'க்குப் பதில் ஐஸ்கிரீம்' அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை! #CelebrateGovtSchool
`பாட நோட்டில் வெரி குட்'க்குப் பதில் ஐஸ்கிரீம்' அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை! #CelebrateGovtSchool

`பாட நோட்டில் வெரி குட்'க்குப் பதில் ஐஸ்கிரீம்' அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை! #CelebrateGovtSchool

பாராட்டு என்பது ஓர் ஊக்கச் சக்தி போன்றது. அது ஒருவரை இன்னும் வேகமாக ஓடச் செய்யும்; இயங்கச் செய்யும். பள்ளி மாணவர்கள் என்றால் அவர்களின் ஓட்டத்தை அதிகரிப்பதுடன் தன்னம்பிக்கையை அளிக்கும். அதுவே அந்தப் பாராட்டை அளிப்பவர் தனக்குப் பாடம் நடத்தும் ஆசிரியரிடம் என்றால்... கேட்கவா வேண்டும். அந்தப் பாராட்டு மாணவருக்குத் தன்னம்பிக்கை அளிப்பதோடு, மிகப் பிடித்தமான ஆசிரியராக அவரை மாற்றிவிடும். தொடக்கப்பள்ளி வகுப்பு மாணவர்கள் எனும்போது சின்னச் சின்ன விஷயத்தையும் ஆசிரியர்களிடம் காட்டி, `எப்படி இருக்கு?'' என்று கேட்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள். இப்படியான மாணவர்களுக்கு இன்னும் சுவாரஸ்யமான பாராட்டுகளை அளிக்க புதிய ஐடியாவோடு, பள்ளித் திறப்பதற்காகக் காத்திருக்கிறார் ஆசிரியை ரேகா ஜெயக்குமார். 

`பாட நோட்டில் வெரி குட்'க்குப் பதில் ஐஸ்கிரீம்' அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை! #CelebrateGovtSchool

திருவண்ணாமலை மாவட்டம், பழையனூர் ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார் ரேகா ஜெயக்குமார். பாடப் புத்தகங்களைக் கடந்து, மாணவர்களுக்குக் கதை, அறிவியல் புத்தகங்களை அறிமுகப்படுத்தி வருபவர். கற்பித்தலில் புதிய முயற்சிகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மிக்கவரான இவர், இப்போது மாணவர்கள் மகிழ்ச்சியடையக்கூடிய புதிய விஷயம் ஒன்றைச் செய்திருக்கிறார். அதுபற்றி அவரிடமே கேட்கலாம். 

`பாட நோட்டில் வெரி குட்'க்குப் பதில் ஐஸ்கிரீம்' அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை! #CelebrateGovtSchool

``நான் பாடம் நடத்துவது ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு. அவர்கள் ஆர்வத்துடன் நோட்டில் எழுதிக்காட்டும்போது, நாம் என்ன சொல்கிறோம் என்பதை ரொம்பவே எதிர்பார்ப்பார்கள். அதில், `நன்று' `வெரி குட்' என்று எழுதுவதை விட, வேறு ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். அதற்காக ஸ்மைலி, நட்சத்திரங்களை வரைந்து பாராட்டினேன். ஏனென்றால், 6, 7, 8 ம் வகுப்பு மாணவர்கள் என்றால் நாம் எழுதியதை உடனே படித்துவிடுவார்கள். இவர்களோ நன்று என்பதைப் படித்துப் பார்த்து மகிழ்வதை விட, ஸ்மைலியைப் பார்த்தவுடனே சந்தோசப்படுவார்கள்தானே! நான் நினைத்த மாதிரியே, மாணவர்கள் ஸ்மைலியைப் பார்த்து உற்சாகமானார்கள். அந்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொண்டது. பிறகு, வீட்டிலிருந்த பழைய பொருள்களில் ஏதேனும் டிசைன் செய்து, அதை இங்க்பேடில் அழுத்தி, மாணவர்களின் நோட்டில் பதிப்பேன். உதாரணமாக, தண்ணீர் பாட்டிலின் கீழ்ப் பகுதியை, இங்கில் நனைத்துப் பதிப்பது மாதிரி. மயில் இறகு எல்லாம் வரைந்து பாராட்டும்போது முகமெல்லாம் சிரிப்பாகச் செல்வார்கள்.

`பாட நோட்டில் வெரி குட்'க்குப் பதில் ஐஸ்கிரீம்' அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை! #CelebrateGovtSchool

எதுவாக இருந்தாலும் கொஞ்ச நாள்களில் அலுத்துவிடும் அல்லவா... அதனால், மாணவர்களைப் பாராட்ட வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான், அவர்களுக்கு ரொம்ப பிடித்தவற்றின் உருவங்களை ரப்பர் ஸ்டாம்பில் செய்யலாம். அதை நோட்டில் பதிக்கலாமே என்ற ஐடியா வந்தது. எந்தப் பொருள்களை எல்லாம் ரப்பர் ஸ்டாம்பில் செய்யலாம் பட்டியலிட்டேன். ஐஸ்கிரீம், பட்டாம்பூச்சி, நட்சத்திரம், தம்ஸ் அப் காட்டும் ஸ்மைலி... எனப் பட்டியல் நீண்டது. அவற்றில் இந்த நான்கை மட்டும் முதலில் செய்யலாம் எனத் தேடினேன். ஆன் லைனில் தேடும்போது, அதிலே இங்க் இருப்பதுபோல இருக்கும் அச்சுகளே கிடைத்தன. அது சில நாள்களே இங்க் தீர்ந்துவிடலாம். அதற்குப் பதில் நம்ம ஊரில் செய்யப்படும் ரம்பர் ஸ்டாம்ப் கடைகளில் கேட்கலாமே என்று நினைத்தேன். ஏனென்றால், அப்படிச் செய்தால் ஒருவருடம் முழுக்கக்கூட பயன்படுத்த முடியும் அல்லவா!

திருவண்ணாமலையில் பல கடைகளில் தேடி, கடைசியாக ஒருவர் செய்துகொடுக்க ஆர்வமாக முன் வந்தார். ஆனால், `டைம் அதிகமாகும்' என்றார். பரவாயில்லை என்று ஆர்டர் கொடுத்து, செய்தேன். அதை முதன்முதலில் பேப்பரில் ஒத்தி எடுத்தபோது எனக்கே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஒரு மாணவனுக்கு `ஐஸ்கிரீம்' அச்சுப் பதித்து பாராட்டினால், மற்றவர்களுக்கும் தன் நோட்டில் டீச்சர் ஐஸ்கிரீம் பதித்து பாராட்ட வேண்டும் என ஆர்வத்துடன் படிப்பார்கள். போட்டி மனப்பான்மை இல்லாமல், படிப்பின்மீது ஆர்வம் வருவதற்கு உதவும் என நம்புகிறேன்" என்கிறார் ரேகா. 

மாணவர்களைக் கவரும் விதத்தில் புதிய விஷயங்களைப் புகுத்தும் ஆசிரியர்களைப் பாராட்டுவோம். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு