Published:Updated:

இரண்டரை லட்சம் ஃபாலோயர்ஸ், குடும்பத்துடன் டிக் டாக் - அசத்தும் ராகுல் - விடிஷா!

இரண்டரை லட்சம் ஃபாலோயர்ஸ், குடும்பத்துடன் டிக் டாக் - அசத்தும் ராகுல் - விடிஷா!
News
இரண்டரை லட்சம் ஃபாலோயர்ஸ், குடும்பத்துடன் டிக் டாக் - அசத்தும் ராகுல் - விடிஷா!

இரண்டரை லட்சம் ஃபாலோயர்ஸ், குடும்பத்துடன் டிக் டாக் - அசத்தும் ராகுல் - விடிஷா!

டிக்டாக் வீடியோக்கள்தான் தற்போதைய டிரெண்ட். சிறுவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானவர்கள் இதற்கு அடிமை என்றே சொல்லலாம். சமீபத்தில் ஒரு டிக்டாக் வீடியோ வைரலானது. அதில் கணவன், மனைவி ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள். சிறிது நேரத்தில் அவர்களுடன் இணைந்து அவர்களின் மகளும் நடனம் ஆடுகிறார். குடும்பத்துடன் இணைந்து நடனமாடி அனைவரையும் ரசிக்கச் செய்கிறார்கள் இந்தக் குடும்பத்தினர். யாருப்பா இவங்க.. நமக்கே பார்க்கணும் போல இருக்கேன்னு இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இவர்களைத் தேட ஆரம்பித்தோம். நீண்ட நெடிய தேடுதல் வேட்டைக்குப் பிறகு கண்டுபிடித்தோம். அவர்களுடைய ஜாலி கேலி இன்டர்வியூ இதோ!

இரண்டரை லட்சம் ஃபாலோயர்ஸ், குடும்பத்துடன் டிக் டாக் - அசத்தும் ராகுல் - விடிஷா!

``என்னுடைய சொந்த ஊர் கேரளாவிலுள்ள எர்ணாகுளம். நான் டான்ஸர்ங்க. என் மனைவி விடிஷா. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க'' எனத் தன்னைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தோடு பேசத் தொடங்கினார் ராகுல். ``நானும், விடிஷாவும் சும்மா பொழுதுபோக்குக்காக டிக்டாக் வீடியோ பண்ண ஆரம்பிச்சோம். நான் டான்ஸர்ங்குறதனால எனக்கு டான்ஸ் ஆடுறதுன்னா ரொம்பவே இஷ்டம். வெஸ்டர்ன் டான்ஸ் கலந்துகட்டி ஆடுவேன். சரி ஏதாவது ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி போஸ்ட் பண்ணலாம்னு டிரை பண்ணினேன். அதுக்கு ஆடியன்ஸ்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சது. விடிஷாவுக்கும் டான்ஸ் மேல காதல் இருந்ததால அவங்களும் என்கூட சேர்ந்து டான்ஸ் ஆடுறேன்னு சொன்னாங்க. சரி பண்ணிப் பார்க்கலாமேனு இரண்டு பேரும் சேர்ந்து டான்ஸ் ஆடி வீடியோ பண்ணினோம். அந்த வீடியோ செம ரீச்! வீடியோ பார்த்தவங்க எல்லாருமே ரொம்ப அழகா பாசிட்டிவா பாராட்டிருந்தாங்க'' என்றவரைத் தொடர்ந்து விடிஷா தொடர்ந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``நான் கிளாசிக்கல் டான்ஸர். ஆனாலும், வெஸ்டர்ன் டான்ஸ் ஆட டிரை பண்றது ரொம்பவே பிடிக்கும். அவர் ஆடுறதைப் பார்த்து நானும் சேர்ந்து ஆட ஆரம்பிச்சிடுவேன். நாங்க ரெண்டு பேரும் பிராக்டீஸ் பண்ணிட்டு இருக்கும்போது எங்களுடைய பொண்ணும் ஆடினாள். அவளுக்கும் டான்ஸ்னா பிடிக்கும். சரி மூன்று பேரும் சேர்ந்து ஆடலாம்னு பிளான் பண்ணினோம். என்னுடைய இரண்டாவது பொண்ணுக்கு இரண்டு வயசுதான் ஆகுது. நாங்க டான்ஸ் ஆடும்போது அவளும் க்யூட்டா ரியாக்‌ஷன்ஸ் கொடுத்துட்டு இருப்பா. இதையெல்லாம் புகழுக்காகவோ, புகழை எதிர்பார்த்தோ நாங்க பண்ணலை'' என்றவரிடம் காதல், கல்யாணம் குறித்துக் கேட்டோம்.

இரண்டரை லட்சம் ஃபாலோயர்ஸ், குடும்பத்துடன் டிக் டாக் - அசத்தும் ராகுல் - விடிஷா!

நானும், ராகுலும் படிக்கிறப்பவே காதலிச்சோம். வீட்ல எங்க காதலைச் சொன்னதுமே ஓகே சொல்லிட்டாங்க. எங்களுக்குத் திருமணமாகி ஒன்பது வருஷமாச்சு. ராகுல் டான்ஸ் கோரியோகிராபரா வேலை செய்றார். நான் அக்கவுன்டன்டா ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். பாப்பா பிறந்ததால் வேலையை விட வேண்டியதா போச்சு. இன்னும் கொஞ்ச நாளில் மறுபடியும் வேலையில் சேர்ந்திடுவேன்'' என்று அப்டேட் தந்தவரை தொடர்ந்து ராகுல் பேசினார்.

நாங்க பண்ணின டிக்டாக் வீடியோ வைரலானதும் நானும் சரி, விடிஷாவும் சரி அதை எங்களுக்கான பூஸ்ட்அப் மாதிரிதான் நினைச்சிக்கிட்டோம். லைக்ஸூக்காக நாங்க வீடியோ பண்றோமான்னு நிறைய பேர் கேட்குறாங்க. நாங்க லைக்ஸூக்காக எந்த வீடியோவும் பண்ணலைங்க. டான்ஸ் மேல இருக்கிற லவ்னாலேதான் பண்றோம். நிறைய பேர் எங்களை பாராட்டியிருக்காங்க என்றவர்களிடம் பட வாய்ப்புகள் குறித்துக் கேட்டோம்.

டிக்டாக்கில் பிரபலமான நிறைய பேரை தமிழ்ப் படங்களிலும், சீரியல்களிலும் பார்க்க முடியுது. படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க ரெடியா இருக்கிறோம் எனப் புன்னகைக்கிறார்கள், ராகுலும், விடிஷாவும்!