Published:Updated:

"15 லட்சம் லிட்டர் தண்ணில ஒரு துளிகூட வேஸ்ட் பண்ணலை!" ஷூட்டிங்கில் விஜி சந்திரசேகரின் நீர்மேலாண்மை

"15 லட்சம் லிட்டர் தண்ணில ஒரு துளிகூட வேஸ்ட் பண்ணலை!" ஷூட்டிங்கில் விஜி சந்திரசேகரின் நீர்மேலாண்மை
"15 லட்சம் லிட்டர் தண்ணில ஒரு துளிகூட வேஸ்ட் பண்ணலை!" ஷூட்டிங்கில் விஜி சந்திரசேகரின் நீர்மேலாண்மை

``சென்னையில இருக்கிற தண்ணி பஞ்சத்துக்கு சினிமா ஷூட்டிங்காக தண்ணி வேஸ்ட் பண்ணவே கூடாதுங்கிற தீர்மானத்துலதான், என் பண்ணையிலேயே செட் போட சந்தோஷமா ஒத்துக்கிட்டேன்.''

விஜி சந்திரசேகர் வித்தியாசமான நடிகை மட்டுமல்ல, விவசாயத்தின் மீதும் நீர் மேலாண்மையின் மீதும் அதிக அக்கறை உள்ளவரும்கூட. மகாபலிபுரத்தில் உள்ள தன் பண்ணையில் கடந்த 20 வருடங்களாகச் சாப்பாட்டுக்கு அரிசி முதல் எண்ணெய்க்கு எள்ளு வரை பயிரிட்டு வருகிறார் விஜி. தண்ணீர்ப்பஞ்ச காலத்தில் விவசாயம் செய்வதற்கு எப்படி நீர் மேலாண்மை செய்கிறீர்கள் என்று கேட்டோம். கேட்ட கேள்விக்குப் பதிலளித்ததுடன், சமீபத்தில் தன் பண்ணையில், தான் செய்த ஒரு நீர் மேலாண்மை விஷயத்தையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். 

"15 லட்சம் லிட்டர் தண்ணில ஒரு துளிகூட வேஸ்ட் பண்ணலை!" ஷூட்டிங்கில் விஜி சந்திரசேகரின் நீர்மேலாண்மை

``எங்க பண்ணையில சொட்டு நீர்ப் பாசனம்தான் போட்டிருக்கேன். அதனால, தண்ணீர் அளவாத்தான் போய்ச் செலவாகும். வெயில் காலத்துல செடிகளுக்கு நிறைய தண்ணீர் தேவைப்படும். க்ரீன் ஹவுஸ் போட்டா செடிகள் மேலே வெயில் படறது குறையும், நார்மலா விடறதைவிட பாதியளவு தண்ணிவிட்டாலே போதும். இதையும் ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கேன். இந்த ரெண்டு விஷயங்கள் தவிர, பெரிய பெரிய மரங்களுக்குக் கீழே தென்னயோலை, பனையோலைன்னு போட்டு வைச்சிருக்கோம். இதனால, மரங்களுக்கு ஊத்தின  தண்ணி சீக்கிரமா காய்ஞ்சு போகாம இருக்கும். அப்புறம், ஸ்பிரிங்க்ளர்ஸ் வெச்சிருக்கேன். 250 அடி தூரத்துக்குச் சுழன்று சுழன்று  தண்ணி தெளிக்கும். இப்படி எல்லாம் தண்ணிவிட்டா வழக்கமா செலவாகுறதைவிட கால் பங்கு தண்ணிதான் செலவாகும். நிலத்துல கெமிக்கல் உரமும் நான் போடறது இல்லைங்க. ப்ளூ கிராஸ்ல இருந்து ஒரு லோடு, ரெண்டு லோடுன்னு உரம் வாங்கி யூஸ் பண்ணிக்கிறேன். நம்ம உடம்பை எப்படிக் காப்பாத்துறோமோ அப்படித்தான் மண்ணையும் நீரையும் காப்பாத்துணும்னு நினைக்கிற கேரக்டர் நான்'' என்று அழுத்தமாகப் பேசியவர், சமீபத்தில் தன் பண்ணையில் நடந்த ஷூட்டிங்கின்போதும் தான் செய்த ஒரு நீர் மேலாண்மை விஷயத்தைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார். 

"15 லட்சம் லிட்டர் தண்ணில ஒரு துளிகூட வேஸ்ட் பண்ணலை!" ஷூட்டிங்கில் விஜி சந்திரசேகரின் நீர்மேலாண்மை

``சமீபத்துல `ஹவுஸ் ஓனர்' பட ஷூட்டிங்குக்காக தண்ணில வீடு மூழ்குற மாதிரி ஷூட் பண்ண வேண்டியிருந்தது. அதுக்காக எங்க பண்ணையில் செட் போட்டோம். 15 அடி ஆழத்துல தொட்டி கட்டி அதுக்குள்ள வீட்டைக் கட்டி, வீட்டைச் சுத்தி தண்ணியை நிரப்பி ஷூட்டிங் நடந்துச்சு. இதுக்காக தினமும் கிட்டத்தட்ட 15 லட்சம் லிட்டர் வரை தண்ணி தேவைப்பட்டுச்சு. எங்க பண்ணையில பெரிய கிணறு இருக்கு. நம்ம வீடுகள்ல இருக்கிற மாதிரி சின்ன கிணறு கிடையாது அது. அந்த மாதிரி பத்து மடங்கு பெருசு. அதுல இருந்து தண்ணி எடுத்து வீட்டைச் சுத்தி ஊத்தினோம். இந்தத் தண்ணியை தினமும் மாத்தணும். இல்லன்னா அழுக்கா தெரியும். இந்தத் தண்ணியில ஒரு துளியைக் கூட நான் வேஸ்ட் பண்ணலைங்க. எங்க பண்ணையில நெல் பயிரிட்டிருக்கோம். அதுக்கும், பக்கத்துல இருந்த விவசாய நிலங்களுக்கும் அந்தத் தண்ணியை அப்படியே பாய்ச்சிட்டோம். மிச்சம் மீதி இருந்த தண்ணீரையும் குழாய் மூலமா கிணத்துலேயே திருப்பி விட்டுட்டோம். வேற எங்கேயாவது இந்த செட்டை போட்டிருந்தா தண்ணிக்குச் செலவழிச்சிருக்கணும். தண்ணியும் தரையில வீணாகப் போயிருக்கும். சென்னையில இருக்கிற தண்ணி பஞ்சத்துக்கு சினிமா ஷூட்டிங்காக தண்ணி வேஸ்ட் பண்ணவே கூடாதுங்கிற தீர்மானத்துலதான், என் பண்ணையிலேயே செட் போட சந்தோஷமா ஒத்துக்கிட்டேன்'' - தண்ணீர் அபிமானத்துடன் பேசி முடித்தார் நடிகை விஜி சந்திரசேகர்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு