Published:Updated:

12 ம் வகுப்பில் 750 மார்க்; ஆனா, இப்போ 12ம் வகுப்பு பாடத்தில் இடம்பிடித்த ரிஃபாத் ஷாரூக்

12 ம் வகுப்பில் 750 மார்க்; ஆனா, இப்போ 12ம் வகுப்பு பாடத்தில் இடம்பிடித்த ரிஃபாத் ஷாரூக்
12 ம் வகுப்பில் 750 மார்க்; ஆனா, இப்போ 12ம் வகுப்பு பாடத்தில் இடம்பிடித்த ரிஃபாத் ஷாரூக்

12 ம் வகுப்பில் 750 மார்க்; ஆனா, இப்போ 12ம் வகுப்பு பாடத்தில் இடம்பிடித்த ரிஃபாத் ஷாரூக்

12 ம் வகுப்பில் 750 மார்க்; ஆனா, இப்போ 12ம் வகுப்பு பாடத்தில் இடம்பிடித்த ரிஃபாத் ஷாரூக்

18 வயதே ஆன ரிபாத் ஷாரூக் நமக்கு நல்ல பரிச்சயமே. அறிந்திராதவர்களுக்கு... தன் குழுவினரோடு சேர்ந்து 64 கிராம் எடை மட்டுமே கொண்ட செயற்கைக்கோளை உருவாக்கியிருந்தார். இதுவே உலகிலேயே மிகக் குறைவான எடையுள்ள செயற்கைக்கோளாகும். அவரைப் பற்றிய செய்தி 12ம் வகுப்பு பாடத்தில் இடம் பெற்றிருக்கிறது என்பது எவ்வளவு சந்தோஷம். 

கரூர் மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டி எனும் ஊரில் பிறந்த ரிஃபாத் ஷாரூக் சின்ன வயதிலிருந்தே அறிவியல் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சுட்டி விகடன் இதழில் சுட்டி ஸ்டாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாணவ நிருபராக ஓராண்டு முழுவதும் செய்திகளையும் படைப்புகளையும் எழுதியவர். மாணவர்களுக்கு விண்வெளி அறிவியலை வளர்த்தெடுக்கும் பயிற்சியை அளித்துவரும் அமைப்பு `ச்பேஸ் கிட்ஸ் இந்தியா'. நாசா நடத்திய போட்டிக்காக ரிஃபாத் உள்ளிட்டவர்கள் தயாரித்தே இந்த மிகக் குறைவான எடையிலான செயற்கைக்கோள்.

12 ம் வகுப்பில் 750 மார்க்; ஆனா, இப்போ 12ம் வகுப்பு பாடத்தில் இடம்பிடித்த ரிஃபாத் ஷாரூக்

12-ம் வகுப்பின் `புவியியல்' புத்தகத்தில், `புவித்தகவலியல்' பாடத்தில் ரிஃபாத் பற்றியும் அவரின் குழு தயாரித்த கலாம் சாட் குறித்தும் இடம்பெற்றிருக்கின்றன. அதில், ``இச்சிறு செயற்கைக்கோளுக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்ட ஜூன் 22, 2017ல் நாசாவால் ஏவப்பட்டது. இந்த ஏவூர்த்தியில் இந்தியாவின் சார்பாக கலாம் சாட் மட்டுமே பங்குபெற்றது. மேற்கெண்ட குழுவின் இயக்குநரான ஶ்ரீமதிகேசவன் கூறும்போது, இந்த ஏவூர்தி பறக்கும் மொத்த நேரம் 240 நிமிடங்கள் எனக் கூறினார். இவ்விண்கலத்தைத் தொடுத்தது சென்னை, தியாகராய் நகரில் அமைந்துள்ள அவரது வீட்டிலாகும். செயற்கைக்கோளானது ஏவப்பட்ட 125 நிமிடத்தில் விண்வெளியில் ஈர்ப்பு விசை சூழலில் ஏவூர்தியிலிருந்து பிரிக்கப்பட்டது. ஷாரூக்கின் இத்திட்டம் முதல் முப்பரிமாண அச்சைக் கொண்டு தயாரிக்கப்பட்டு போட்டியின் மூலம் Cubs in Space என்ற இப்போட்டி நாசா மற்றும் I Doodle Learning என்ற இரண்டு நிறுவனங்களின் உபயத்தால் நடத்தப்பட்டதாகும். இத்திட்டத்தின் நோக்கம் தொழில்நுட்பத்தின் புதிய செயல்திறனை விண்வெளிக்குக் கொண்டு சேர்ப்பதாகும்" என்று குறிப்பிட்டுள்ளது. 

12 ம் வகுப்பில் 750 மார்க்; ஆனா, இப்போ 12ம் வகுப்பு பாடத்தில் இடம்பிடித்த ரிஃபாத் ஷாரூக்

இது குறித்து ரிஃபாத் ஷாரூக்கிடம் கேட்டேன். ``ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நான் இன்னும் புத்தகத்தைப் பார்க்கல. ஃப்ரெண்ட்ஸ்ங்கதான் போட்டோ எடுத்து அனுப்பினாங்க. ப்ளஸ் டூ படிக்கும்போது உடம்பு சரியில்லாததால முழுசா முடியலை. கஷ்டப்பட்டுத்தான் பாஸ் பண்ணினேன். பாடப் புத்தகத்தில எழுதுவாங்கன்னு நினைக்கல. ஶ்ரீமதிகேசவன் மேடத்துக்கும் எங்க டீம்க்கும் கிடைச்ச பெரிய அங்கீகாரம் இது. எங்களுக்குக் கிடைச்ச வெற்றியைப் பற்றிப் படிக்கும்போது மாணவர்களுக்கு சாதிக்கிறதுக்கு வயசு தடையே இல்லன்னு நினைப்பாங்க. அவங்களுக்குத் தன்னம்பிக்கை கிடைக்கும்னு நம்பறோம். இதெல்லாம், ஒரு பக்கம் இது சந்தோஷத்தைக் கொடுக்கற மாதிரியே, இன்னும் நிறைய விஷயங்கள் செய்யணும்னு பொறுப்புஉணர்ச்சியையும் உணர வைக்குது. அதனாலதான் முழு ஈடுபாட்டோட அடுத்த புராஜெக்ட்ல வேலை செய்திட்டு இருக்கோம். அதைப் பற்றி சீக்கிரமே சொல்கிறோம்" என்கிறார் ரிஃபாத் ஷாரூக் நம்பிக்கையுடன்.

ரிஃபாத் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் மொத்த மதிப்பெண் 1200க்கு 750 தான் வாங்கியிருந்தார். அதனால், அவரின் அம்மா கவலையடைந்தார். கல்லூரியில் இன்ஜினீயரிங் படிக்கச் சொன்னபோது, ரிஃபாத் பி.எஸ்.ஸி சயின்ஸ்தான் படிக்க முடிவெடுத்தபோதும் அம்மா இன்னும் சோர்வடைந்தார். ஆனால், இன்று உலகமே பாராட்டும் வகையில் சாதித்திருக்கையில் தம் மகனை உச்சிமுகர்கிறார். உண்மையில், அறிவியல் துறையில் சாதித்தவர்களின் பட்டியலில் தற்காலத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களை மாணவர்கள் ஊக்கமளிப்பதோடு, அறிவியல் சார்ந்து படிக்கும் எண்ணத்தையும் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு