Published:Updated:

`2020-ல் 21 நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாமல் போகும்!- நிதி ஆயோக் எச்சரிக்கை

செ.கார்த்திகேயன்
`2020-ல் 21 நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாமல் போகும்!- நிதி ஆயோக் எச்சரிக்கை
`2020-ல் 21 நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாமல் போகும்!- நிதி ஆயோக் எச்சரிக்கை
`2020-ல் 21 நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாமல் போகும்!- நிதி ஆயோக் எச்சரிக்கை

தென்னாப்ரிக்காவின் கேப்டவுன் நகரத்தைப் போலவே விரைவில் பெங்களூரும் தண்ணீர் இல்லாத நகரமாக மாறப்போகிறது என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், நாடுமுழுவதும் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் தண்ணீர் பயன்பாடு தொடர்பாக நிதி ஆயோக் விரிவான ஆய்வு நடத்தி விவரங்களை வெளியிட்டு எச்சரிக்கை மணியடித்துள்ளது.

2020-ம் ஆண்டில் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உட்பட 21 நகரங்களில் நிலத்தடிநீர் இல்லாத நிலை ஏற்படும். இதனால், சுமார் 10 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என்கிற அறிக்கையின் விவரங்கள் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. மோசமான நீர் மேலாண்மை காரணமாக இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தண்ணீர் பிரச்னை தலை தூக்கியுள்ளது எனவும், இதனால், 2030-ம் ஆண்டில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் எனவும் நிதி ஆயோக் அறிக்கை கூறியுள்ளது. பெங்களூரு மட்டுமின்றி 2020-ம் ஆண்டில் சென்னையிலும் நிலத்தடி நீர் வற்றிவிடும் எனவும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் 60 கோடி மக்கள் தினந்தோறும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்து வருகின்றனர். இந்தியாவில் பாதுகாப்பான நீர் கிடைக்கப் பெறாததால், 2 லட்சம் பேர் ஆண்டுதோறும் உயிரிழந்து வருகின்றனர். தண்ணீர் தட்டுப்பாட்டினால், கர்நாடகாவில் 80 சதவிகிதமும், மகாராஷ்டிராவில் 72 பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் 82 லட்சம் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், நீர் தட்டுப்பாட்டின் காரணமாக மிகப்பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமும் 6 சதவிகிதம் அளவுக்குச் சரியும் அபாயம் காணப்படுகிறது என்கிறது நிதி ஆயோக் அறிக்கை. 

Vikatan