Election bannerElection banner
Published:Updated:

சென்னை வடகறி, சிதம்பரம் இறால் தொக்கு... தமிழகத்தின் சில சிக்னேச்சர் உணவு வகைகள்!

மிழ் கலாசாரத்தின் ஒருங்கிணைந்த முக்கியமான பகுதி, உணவு. விருந்தோம்பலுக்கு நற்பெயர் பெற்ற தமிழ்நாட்டில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்திபெற்ற ஒவ்வோர் உணவு வகை இருக்கிறது. இந்திய உணவு வகைகளில், தென்னிந்திய உணவு வகைகளுக்கு நிச்சயம் தனி இடம் உண்டு. இனிப்பு முதல் துவர்ப்பு வரை அறுசுவையையும் அளவாக உணவில் சேர்த்து அன்போடு பரிமாறப்படும் தமிழ்நாட்டு உணவுகளில், எந்த ஊரில் எது சிக்நேச்சர் உணவு என்பதைப் பார்ப்போம்.

கோயம்புத்தூர் சிந்தாமணி சிக்கன்:

சென்னை வடகறி, சிதம்பரம் இறால் தொக்கு... தமிழகத்தின் சில சிக்னேச்சர் உணவு வகைகள்!

கொங்குநாட்டு மொழி, சிறுவாணி ஆறு, ஆண்டுதோறும் வனப்புள்ள வானிலை போன்றவற்றுக்கு புகழ்பெற்ற கோயம்புத்தூர், சிந்தாமணி சிக்கனுக்கும் ஃபேம்ஸ். கொங்குநாட்டுப் பகுதிகளில் பரவலாக இருக்கும் மிகப் பழைமையான ரெசிபி இந்தச் சிந்தாமணி சிக்கன். உணவில் அதிகம் காரம் சேர்த்துக்கொள்ளுபவர்களுக்கு நிச்சயம் இந்த ரெசிபி பிடிக்கும். கெபாப் அல்லது வறண்ட வகை உணவான இதைத் தயார்செய்வதற்கு, கோழியின் தொடைப்பகுதியை மட்டுமே இவர்கள் பயன்படுத்துகின்றனர். இதில் சேர்க்கப்படும் விதைகள் நீக்கப்பட்ட காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய்த் துருவலே, இதன் வித்தியாசச் சுவைக்குக் காரணம். இதை, ரசம் சாதத்தோடு சேர்த்துச் சாப்பிட்டால் `ஆஹா' சுவைதான்.

சென்னை வடகறி:

சென்னை வடகறி, சிதம்பரம் இறால் தொக்கு... தமிழகத்தின் சில சிக்னேச்சர் உணவு வகைகள்!

மவுன்ட் ரோடு முதல் மெரினா வரை ஏராளமான விஷயங்கள் சென்னையில் பிரபலம். அந்த வகையில் உணவுப் பதார்த்தங்களில், நிச்சயம் வடகறிக்குத்தான் முதல் இடம். இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம் என எல்லாவிதமான டிபன் வகைகளோடும் சேர்த்து உண்ணப்படும் இந்த உணவு வகை, சென்னை சைதாப்பேட்டையில் அதிகளவில் கிடைக்கும். இது, கடலைப்பருப்பு வடை அல்லது பகோடாவை, வெங்காயம், தக்காளி மற்றும் மசாலா கலவையோடுச் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சட்னி, குருமா, சாம்பார் என ஒரே வகையான சைடு டிஷ் சாப்பிட்டுச் சலித்துப்போனவர்கள் சென்னை வடகறியை ட்ரை செய்யலாமே!

சிதம்பரம் இறால் தொக்கு:

சென்னை வடகறி, சிதம்பரம் இறால் தொக்கு... தமிழகத்தின் சில சிக்னேச்சர் உணவு வகைகள்!

இயற்கை வளங்கள் கொஞ்சும் சிதம்பரம், பாரம்பர்யக் கோயில்கள் மற்றும் சதுப்புநிலக் காடுகளுக்கு மட்டுமல்ல இறால் தொக்குக்கும் புகழ்பெற்ற நகரம். மற்ற இடங்களைவிட இங்கு கடலிலிருந்து பிடிக்கப்பட்ட இறால்களை நன்கு சுத்தம் செய்து, சூடான பாத்திரத்தில் அதை மாற்றி அதில் இருக்கும் தண்ணீரை முற்றிலும் வெளியேறும் அளவுக்கு முதலில் வேகவைத்துக்கொள்கின்றனர். இதன் பிறகே, இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், அரைத்து வைத்த மசாலா, வதக்கி வைத்த வெங்காயம்-தக்காளி, சீரகம் மற்றும் மிளகுத்தூள் போன்றவற்றைச் சேர்த்து தொக்கு பதத்துக்குக் கொண்டுவருகின்றனர். விறகு அடுப்பில் செய்யும் இந்த இறால் தொக்கை, சாப்பாடு, பரோட்டா போன்றவற்றோடு சேர்த்துச் சாப்பிட்டால், நிச்சயம் மறுமுறை கேட்டுச் சாப்பிடத் தோன்றும்.

குற்றாலம் பிச்சுப்போட்ட கோழி:

சென்னை வடகறி, சிதம்பரம் இறால் தொக்கு... தமிழகத்தின் சில சிக்னேச்சர் உணவு வகைகள்!

அம்மிக் கல்லில் அரைத்த காரசாரமான மசாலா, நாட்டுத் தக்காளியின் புளிப்பு, நல்லெண்ணெய்யின் மனம், கோழியின் சிறிய துண்டுகள், இவை அனைத்தும் ஒருசேர வதக்கி, சுடச்சுட கோழிக்கறிக் குழம்போடு சேர்த்துச் சாப்பிட்டால், அருவிக்கான சீஸன் இல்லையென்றாலும், இந்தப் பிச்சுப்போட்ட கோழியைச் சாப்பிடுவதற்காகவே குற்றாலம் செல்லலாம். பெப்பர் சிக்கன், கிரில்டு சிக்கன் போன்றவற்றை சாப்பிட்டுச் சளித்துப்போனவர்களுக்கு, இந்த ரெசிபி நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும்.

இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் ஏராளமான சிக்நேச்சர் உணவு வகைகள் உள்ளன. அந்த வகையில் உங்க ஊர் ஸ்பெஷாலிட்டி என்ன? 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு