Published:Updated:

"வானத்தில் சிறகுகள்... ராயப்பேட்டையில் வேர்கள்!"

"வானத்தில் சிறகுகள்... ராயப்பேட்டையில் வேர்கள்!"

"வானத்தில் சிறகுகள்... ராயப்பேட்டையில் வேர்கள்!"

''ஊரின் கதையும் மனிதர்களின் கதையும் வேறு வேறு அல்ல. இடங்களைப் பற்றிப் பேசும்போது மனிதர் களும், மனிதர்களைப் பற்றிப் பேசினால் இடங்களும் மாறி மாறி வருவதே இயல்பு. என் பால்யத்தைத் தாலாட்டிய பட்டுத் தொட்டிலான ராயப்பேட்டை பற்றிப் பேசும்போது, அங்கு இருந்த முரட்டு மனிதர்களும் அவர்கள் விதைத்த விஷயங்களும் வந்து போவதைத் தவிர்க்க இயலாது. அவர்கள் மூலமே என் மண்ணின் மணத்தையும் குணத்தையும் பதிவுசெய்ய முடியும்'' என்கிறார் மன நல மருத்துவர் ஷாலினி.

"வானத்தில் சிறகுகள்... ராயப்பேட்டையில் வேர்கள்!"
##~##

''ராயப்பேட்டையில் நாங்கள் குடி இருந்தது நல்லண்ண முதலி தெரு. இன்று அந்தத் தெருவின் பெயரில் 'முதலி’ இல்லை. நடுவில் ஒரு தாழ்வாரம், இருபுறமும் வீடுகள் என எட்டுக் குடித்தனங்கள் கொண்டது எங்கள் குடியிருப்பு. இதனால், பக்கத்து வீட்டுக் குழந்தைகளோடு விளையாடிய நாட்கள் எனக்கு வாய்த்தன. பேய் இருக்கிறது என அறிமுகப்படுத்தப்பட்ட தெரு மூலை வேப்ப மரத்திடம் இருந்து தப்பிக்க வேகமாக ஓடியதும், இன்று நேஷனல் பப்ளிக் ஸ்கூல் என்று அழைக்கப் படும் பழைய நேஷனல் இங்கிலீஷ் ஸ்கூலில் படித்ததும் இனிக்கும் நினைவுகள்.

"வானத்தில் சிறகுகள்... ராயப்பேட்டையில் வேர்கள்!"

நான் பள்ளிக்கு ரிக்ஷாவில்தான் செல்வேன். ஒருமுறை பக்கத்தில் இருந்த குழந்தை என்னைத் தள்ளிவிட்டது தெரி யாமல் ரிக்ஷாக்காரர் வண்டியை ஓட்ட, சக்கரம் என் வலது கையில் ஏறி ரத்தம் வழிய நான் அழுததும், அதனால் உண் டான கைத் தழும்பைப் போலவே ராயப் பேட்டை நினைவுகளும் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன.

எங்கள் வீட்டுக்கு அருகே ஒரு சேரி இருந்தது. சென்னைக்கே உரிய வட்டார வழக்கில் பேசும் அந்த மக்களைப் போல் நாங்கள் பேசினால், பெரியவர்கள் திட்டு வார்கள். சேரி மக்களைப் போல் பேசுவது அசிங்கம் என்ற எண்ணம் அப்போது ஆழமாக வேரூன்றி இருந்தது. அந்த மக்கள் பயன்படுத்திய தின்னு (உண்), மெய்யாலுமா?, வலி (இழு) உள்ளிட்ட பல வார்த்தைகள் நல்ல தமிழ்ச் சொற்கள் என்பதைக் காலம்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தது. இப்போது நான் இந்த வார்த்தைகளை இயல்பாகப் பயன்படுத்து கிறேன். ஏழைகள் என்கிற ஒரே காரணத் தால் அந்த மக்கள் பேசும் மொழியை அசிங்கம் என்று கற்பித்தது இந்தச் சமூகத் தின் தவறு. அதில் உண்மை இருப்பதாக நம்பியது என் தவறு. இதையும் காலமே கற்றுத் தந்தது.

படிப்பறிவு இல்லாத ராயப்பேட்டை ரிக்ஷாக்காரர்கள், தெரு முனையில் நின்று அங்கு வரும் பெண் குழந்தைகளை, அவர்கள் எந்த வீட்டுப் பெண்களாக இருந்தாலும் சரி, 'இங்கு நிற்காதே, அந்தப் பக்கம் போ’ என்று அதட்டுவார்கள். அந்த அதட்டலில் ஓர் அக்கறை இருக்கும். தடியான புத்தகங்கள் படித்து தத்துவம், நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் பெரிய மனிதர்களுக்குள்ளும் இல்லாத அக்கறையைப் படிப் பறிவு இல்லாத அந்த ரிக்ஷாக்காரர்களிடம் கண்டிருக்கிறேன். கஞ்சாவும் பீடியும் பிடிப்பதால் மட்டும் அவர்கள் கெட்டவர் களுமல்ல; பகட்டாக இருப்பதால் பலர் நல்லவர்களுமல்ல என்பதைப் புரியவைத்த தும் அந்த ராயப்பேட்டைதான்.

இங்கு இருந்த இளவட்டங்கள் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். அப்போது,  பிள்ளையார் சிலைவைப்பது, திரைப்படங்கள் திரையிடுவது, விடிய விடிய திருவிளையாடல் பட வசனங்களை ஒலிபரப்புவது எனத் தெருவே அமர்க்களப்படும். எங்கள் தெருவில் வீடுகளுக்கு இடையேயான நெருக்கத்தைப் போலவே மனிதர்களுக்கும் நெருக்கம் அதிகம். இதனால், பல குடும்பங்களின் ரகசியங்கள் ஊரறிந்த ரகசியமாகத்தான் இருந்தன.

பைலட் தியேட்டரில், 'சவுண்ட் ஆஃப் மியூஸிக், பக்தப் பிரகலதா’ பார்த்த நாட்களும், அமீன்

ஹோட்டலில் மட்டன் குருமா, பாலட்டும் சுவைத்த நாட் களும், கற்கள் நிறைந்து இருந்த கல்வழி கடந்து கொலைகாரன்பேட்டை வழியாக கோபாலபுரம் பள்ளிக்குச் சென்று திரும்பியதும் அவ்வப்போது நினைவுகளாக வந்து போகின்றன.

என்னுடைய சிறகுகள் இன்றைக்கு வானத்தில் இருந்தாலும், சமூகம் குறித்த மதிப்பீடுகளை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற உந்துதலை எனக்குள் விதைத்த ராயப்பேட்டையில்தான் இப்போதும் என் வேர்கள் இருக்கின்றன!''

"வானத்தில் சிறகுகள்... ராயப்பேட்டையில் வேர்கள்!"
"வானத்தில் சிறகுகள்... ராயப்பேட்டையில் வேர்கள்!"

- செந்தில் ராஜாமணி
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

அடுத்த கட்டுரைக்கு