Published:Updated:

சாப்பாட்டு கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் கருவி... காரைக்குடியை அசத்திய திருமணம்!

சாப்பாட்டு கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் கருவி... காரைக்குடியை அசத்திய திருமணம்!
சாப்பாட்டு கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் கருவி... காரைக்குடியை அசத்திய திருமணம்!

சாப்பாட்டு கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் கருவி... காரைக்குடியை அசத்திய திருமணம்!

காரைக்குடி எப்போதும் பழைமைக்கு மட்டும் பெயர்பெற்றது அல்ல. புதுமைக்கும் பெயர்பெற்றது என்று நிரூபித்திருக்கிறது. சமீபத்தில் நடந்த திருமண விழாவில் மணப்பெண்ணுக்குத் தாய்வீட்டுச் சீதனமான சீர்வரிசையில் தங்க அரிவாள்மணை, செம்பு, படி, பல்லாங்குழி, இடுக்கி, தட்டு, டம்ளர் போன்ற தங்கப் பொருள்களைக் கொடுத்து அசத்தியிருந்தார் ஒருவர். அது ஒருவகையில் வித்தியாசமாக இருந்தாலும், தற்போது சுகாதாரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகக் கழிவுகளைக் காசாக்கும் இயந்திரத்தைக் கொண்டு வந்து காரைக்குடியில் அசத்தியிருக்கிறார் முத்து சேகர்.

சாப்பாட்டு கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் கருவி... காரைக்குடியை அசத்திய திருமணம்!

கல்யாண வீடுகள் திருமண மண்டபங்களில் கொட்டப்படும் சாப்பாடுக் கழிவுகளால் ரோட்டில் செல்பவர்கள் யாராக இருந்தாலும் மூக்கை மூடிக்கொண்டுதான் போவார்கள். அந்த அளவுக்கு துர்நாற்றம் நம் மூக்கைத் துளைக்கும். அதில் கூடுதலாகப் பன்றிகள் மற்றும் நாய்கள் கூட்டம் உலவிக்கொண்டிருப்பதைப் பார்த்தாலே நமக்கு வாந்திதான் வரும். அப்படிப்பட்ட பிரச்னைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதன் கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் இயந்திரத்தைத் திருமண நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஜெர்மன் நாட்டில் 'நார்டு' நிறுவனத்தில் எம்டி-யாக வேலைபார்க்கும் முத்து சேகர்.

பணக்காரர்கள் முதல் ஏழை, எளிய பொதுமக்கள் வரைக்கும் தங்களது வீடுகளில் ஏதோ ஒரு நாளில் சுபநிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி நடத்தும் அந்த நிகழ்ச்சிகளில் நம் தமிழர்களுக்குரிய பண்பாட்டில் மிக உயர்ந்த இடத்தில் இடம் பிடித்திருப்பது விருந்தோம்பல். அந்த விருந்தோம்பல் அறுசுவை உணவு படைத்து நம் இல்ல நிகழ்ச்சிகளுக்கு வந்தவர்களை வயிறு நிறைய உணவு கொடுத்து அனுப்புவதில் செட்டிநாடு மக்கள் வித்தியாசமானவர்கள். அசைவ, சைவ உணவு இதில் எதுவாக இருந்தாலும் செட்டிநாடு உணவு என்றாலே சிறப்புதான். காரைக்குடி செட்டிநாடு உணவு என்றாலே எல்லோர் நாக்கில் எச்சில் ஊறும் அந்த அளவுக்கு ஒவ்வொரு உணவுகளும் சுவையாக இருக்கும். 

சாப்பாட்டு கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் கருவி... காரைக்குடியை அசத்திய திருமணம்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகிலுள்ள கண்டணூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து சேகர். இவர் ஜெர்மன் நாட்டில் உள்ள ஊர்ந்து நகரக்கூடிய உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் திருமண நிகழ்ச்சி காரைக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அங்குதான் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டது,

 நம்மிடம் பேசிய முத்து சேகர்…``ஜெர்மன் நாட்டில் திருமணம் மண்டபங்கள் மட்டுமல்லாது பெரிய உணவகம், அடுக்குமாடிக்குடியிருப்பு, பள்ளி, கேன்டீன் இதுபோன்ற இடங்களில் தேங்கும் கழிவுகளை அதற்கான இயந்திரத்தில் போட்டு உரமாக மாற்றுகிறார்கள். அங்கு எந்த இடத்திலும் எந்தவிதமான துர்நாற்றமும் இருக்காது.  தண்ணீருக்காகப் பயன்படுத்திய வாட்டர் பாட்டில்களும் இந்த இயந்திரத்தின் மூலம் தூளாக்கப்படுகிறது. வடமாநிலங்களில் ஒரு சில இடங்களில் இந்த இயந்திரம் திருமண மண்டபங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஜெர்மன் நாட்டில் அங்குள்ள மாநகராட்சி இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துகிறது. சிங்கப்பூரில் அரசாங்கமே கழிவுகளைப் பெற்று இந்த இயந்திரத்தின் மூலம்  கிடைக்கும் உரத்தை விற்பனை செய்துவருகிறது.

இந்த இயந்திரம் புனேயில் தயாரிக்கப்படுகிறது. கழிவுகளின் கொள்ளளவுக்கு ஏற்றவாறு இயந்திரங்களைத் தயாரிக்கிறார்கள். அதாவது 100-ல் இருந்து 500 கிலோ கழிவுகள் இந்த இயந்திரத்தில் போட்டால் கழிவுகளின் மொத்த எடையிலிருந்து ஐம்பது சதவிகிதம்தான் நமக்கு உரமாக மாற்றித் தருகிறது. நான் 150 கிலோ எடையுள்ள கழிவுகளை அரைக்கும் இயந்திரம் ஏழரை லட்சம் மதிப்பீட்டில் புனேயில் இருந்து இறக்குமதி செய்து நம்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக என் வீட்டு திருமண நிகழ்ச்சியில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இதன் மூலம் இயற்கையான உரம் நமக்குக் கிடைக்கும். இந்த உரம் எவ்வளவு நாள்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. கண்ணாடி பாட்டில்களைத் தவிர மற்ற எந்தப் பொருள்களைப் போட்டாலும் இந்த இயந்திரம் உரமாக்கிவிடும். இந்த உரம் தென்னை, மா, பலா போன்ற மரங்களுக்கும் செடிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். புதிய இயந்திரம் என்பதால் இதில் போடப்பட்ட கழிவுகள் அரைத்து உரமாக நமக்குக் கிடைக்கக் குறைந்தது மூன்று நாள்கள் ஆகும். அடுத்தடுத்து கழிவுகள் அரைக்கும்போது ஒரு நாளிலேயே உரத்தை அந்த இயந்திரத்தில் இருந்து எடுத்துவிடலாம். தமிழக அரசு தூய்மை இந்தியா திட்டத்துக்கு இந்த இயந்திரத்தைப் புதிதாக அறிமுகப்படுத்தும் காலம் வெகு விரைவில் வரும். எதிர்காலங்களில் குப்பை வாங்குவதற்கு நகராட்சியிலிருந்து ஆள்கள் வரமாட்டார்கள். இந்த இயந்திரம் வாகனத்தில் பொருத்தியிருப்பார்கள். நாம் குப்பைகளை அந்த இயந்திரத்தில் கொண்டுபோய் போடும் காலம் வரத்தான் போகிறது.

சாப்பாட்டு கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் கருவி... காரைக்குடியை அசத்திய திருமணம்!

கல்யாண மண்டபங்கள் இதுபோன்ற இயந்திரங்களை வாங்கி வைத்துக்கொள்ளலாம். வாடிக்கையாளர்களிடம் இதற்கான குறைந்த கட்டணத்தை மண்டபங்கள் வசூல் செய்வதோடு இதிலிருந்து கிடைக்கும் உரத்தையும் நல்ல  விலைக்குக் கொள்முதல் செய்துகொள்ளலாம். இதன்மூலம் முழுமையான சுகாதாரம் நமக்குக் கிடைக்கும். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், பஞ்சாயத்துகள் வரைக்கும்  இதுபோன்ற இயந்திரத்தைப் பயன்படுத்தினால் சுகாதாரம் காக்கப்படும். 

நகராட்சி, மாநகராட்சிகளில் ஒவ்வொரு வார்டுகளிலும் இந்த இயந்திரத்தைப் பொருத்தினால் தெருக்கள் சுத்தப்படுத்தப்படும்.  குப்பைகளிலிருந்து உருவாகும் நோய்த் தொற்றுகள் பரவாமல் பொதுமக்கள் நிம்மதியாகப் பாதுகாக்கப்படுவார்கள்.  தவிடு வாங்குவதற்காக வியாபாரிகள், பொதுமக்கள் எப்படித் தேடிப் போகிறார்களோ? அதேபோன்று கல்யாண மண்டபங்களுக்கு உரம் வேண்டியவர்கள் தேடிப் போகக்கூடிய சூழ்நிலையை நாம் இதன் மூலம் உருவாக்க முடியும். 

அடுத்த கட்டுரைக்கு