Published:Updated:

ரூ.10,000-ல் நடவு நடும் கருவி - தஞ்சை விவசாயியின் அசத்தல் கண்டுபிடிப்பு!

ரூ.10,000-ல் நடவு நடும் கருவி - தஞ்சை விவசாயியின் அசத்தல் கண்டுபிடிப்பு!
ரூ.10,000-ல் நடவு நடும் கருவி - தஞ்சை விவசாயியின் அசத்தல் கண்டுபிடிப்பு!

ரூ.10,000-ல் நடவு நடும் கருவி - தஞ்சை விவசாயியின் அசத்தல் கண்டுபிடிப்பு!

விவசாயிகள் இன்று தண்ணீர் பிரச்னையாலும், விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமலும் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும், நாற்றாங்கால் தொடங்கி நடவு நட்டு அவற்றை அறுவடை செய்வது வரைக்கும் பெரிய தொகை செலவு செய்ய வேண்டியுள்ளது. இதைப்போக்கும் விதமாக பேப்பர் மூலம் நடவு செய்யும் புதியை கருவியை உருவாக்கி அசத்தியிருக்கிறார் தஞ்சாவூரை சேர்ந்த விவசாயி ஒருவர். 

ரூ.10,000-ல் நடவு நடும் கருவி - தஞ்சை விவசாயியின் அசத்தல் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு வயது 43. விவசாயியான இவர், ஐ.டி.ஐ தொழிற்பயிற்சிக்கான படிப்பு படித்துள்ளார். நாற்று நடுவதற்கு ஏற்படும் ஆள்கள் தட்டுப்பாட்டை போக்கவும், நாற்றாங்கால் அமைத்து  30 நாள்களுக்குப் பிறகு நாற்றைப் பறித்து நடவு நடுவதால் ஏற்படும் காலதாமதம் மற்றும்  நடவிற்கு ஆகும் அதிக செலவை தவிர்க்கும் வகையிலும் புதிய முறையைக் கண்டு பிடிக்க வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில், தற்போது பேப்பர் மூலம் நடவு நடுவதற்கான புதிய கருவியைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ஆள்கள் தட்டுப்பாடு, நடவிற்கு ஆகும் செலவு, தேவையற்ற கால விரயம் போன்ற பிரச்னைகள் தீர்க்கப்படுவதோடு தண்ணீர் பற்றாக்குறைக்கும் தீர்வாக இந்தக் கருவி உள்ளதாக தெரிவித்தார்.

ரூ.10,000-ல் நடவு நடும் கருவி - தஞ்சை விவசாயியின் அசத்தல் கண்டுபிடிப்பு!

இது குறித்து ரமேஷிடம் பேசினோம், ``எங்களுக்கு தாத்தா காலத்தில் இருந்தே விவசாயம்தான் பிரதான தொழில். என் அப்பாவுக்குப் பிறகு நான் விவசாயம் செய்து வருகிறேன். எங்க பகுதி முழுக்கவே நெல் விவசாயம்தான் முக்கிய அங்கம் வகிக்கும். எங்க ஊரில் உள்ள சமுத்திரம் ஏரி எப்போதும் நீர் நிறைந்து கடல் போன்று காணப்படும், அதனால்தான் அதை சமுத்திரம் என்பார்கள். இந்த ஏரியின் நீரை நம்பிதான் அதையொட்டியுள்ள பகுதியில் விவசாயம் நடைபெறும். இந்த நிலையில், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சமுத்திரம் ஏரி நிரம்புவது இல்லை. தண்ணீருக்கும் கடும் தட்டுப்பாடு. இதனால் வானம் பார்த்த பூமியாக எங்க பகுதி இருந்து வந்தது.

ரூ.10,000-ல் நடவு நடும் கருவி - தஞ்சை விவசாயியின் அசத்தல் கண்டுபிடிப்பு!

தண்ணீர் தட்டுப்பாடு, ஆள்கள் பற்றாக்குறை, அதிக செலவு போன்ற காரணங்களால் போதிய வருமானம் இல்லாமல் நான் உட்பட பல விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு மாற்று என்ன என்பதைத் தேட ஆரம்பித்தேன். அப்போது நண்பர் ஒருவர் கேப்சூல் மூலம் நெல் விவசாயம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் நான் அந்த முறையைப் பயன்படுத்தி விவசாயம் செய்துவந்தேன். இதற்கு கூடுதலான செலவு ஆனதோடு விளைச்சலும் பெரிதாக இல்லை எனக்கும் திருப்தி இல்லை. இதற்கு மாற்றாக நாமே எதாவது கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்து செயல்பட்டேன். கடும் முயற்ச்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்தக் கருவி. ஐ.டி.ஐ படித்த என் அனுபவத்தை வைத்துக்கொண்டு இதைக் கண்டுபிடித்துள்ளேன்.

ரூ.10,000-ல் நடவு நடும் கருவி - தஞ்சை விவசாயியின் அசத்தல் கண்டுபிடிப்பு!

வீட்டில் உள்ள பயன்படுத்த படாத பொருள்களான பிளாஸ்டிக் தட்டு இரண்டு, மரக்கட்டை, மரப்பலகை, சிறுவர்கள் விளையாடும் ஊது குழல், கிரைண்டருக்குப் பயன்படுத்தப்படும் பெல்ட், ஏசி மிஷினில் உள்ள மோட்டார் இவற்றைக் கொண்டு இந்த புதிய மோட்டார் கருவியை உருவாக்கினேன். இதில் 100 மீட்டர் நீளம், இரண்டே கால் இஞ்ச் அகலம் கொண்ட பேப்பர் ரோலை பொறுத்தி விடுவேன். அதற்கு மேலே இரண்டு தட்டுகளை மூடி போன்று ஒட்டி பொருத்தப்பட்ட இடைவெளிக்குள் விதை நெல்களை  நிரப்பி விடுவேன். பிறகு சுவிட்சை போட்டால் மோட்டார் ஓட ஆரம்பிக்கும். பின்னர் பேப்பர் ரோல் நகர்ந்துகொண்டே செல்ல 8 இஞ்ச் இடைவெளியில் விதை நெல்கள் விழுந்துகொண்டே இருக்கும். அதன் பிறகு பேப்பர் ரோலின் நடுப்பகுதியில் விதை நெல் இருக்கும் வகையில் பேப்பர் ரோல் மூடிக் கொண்டு நகர்வதோடு, கடைசியாக அவை தானாகவே வட்ட வடிவில் ரோலாக சுற்றிக்கொள்ளும்.

ரூ.10,000-ல் நடவு நடும் கருவி - தஞ்சை விவசாயியின் அசத்தல் கண்டுபிடிப்பு!

பின்னர் பேப்பர் ரோல்களை எடுத்துக்கொண்டு தண்ணீர் பாய்ச்சாமல் உழவு செய்யப்பட்டிருக்கும் வயலுக்கு எடுத்துச் சென்று  நடவுப் பணியை செய்ய வேண்டியதுதான். இரண்டு நபர் இருந்தால் போதும் விதை நெல் நிரப்பப்பட்ட பேப்பர் ரோலின் ஒரு முனையை ஒருவரும் மற்றறொரு முறையை இன்னொருவரும் பிடித்து  நடவு நடுவதுபோல் வரிசையாக விதை நெல் நிரப்பி மூடப்பட்ட பேப்பரை ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குக் கொண்டு சென்று வைக்க வேண்டும். பின்னர் அதன் மேல் காய்ந்த மண்ணை எடுத்துப் போட வேண்டும். இதேபோல் வயல் முழுவதும் செய்யப்பட்ட பிறகு தண்ணீர் பாய்ச்சினால் போதும் நடவுப் பணி முடிந்துவிடும். அதன் பிறகு வழக்கம்போல் செய்யும் பணிகளைத் தொடர்ந்தால் போதும். இந்தக் கருவியையும், முறையையும் கண்டுபிடிப்பதற்கு நான் பல நாள்கள் இரவு பகல் பாராமல் உழைத்திருக்கிறேன். கடந்த முறை என் வயலில் இந்த முறையைப் பயன்படுத்திதான் பயிர் செய்தேன். ஓரளவுக்கு நன்றாக வந்தது. தற்போது இதே முறையைப் பயன்படுத்திதான் நடவு செய்துள்ளேன். மானாவரி விவசாயம் என சொல்லப்படும் முறைதான் இந்தக் கருவி உருவாக்குவதற்கு முக்கிய காரணம் அதன் அடிப்படையிலேயே இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

ரூ.10,000-ல் நடவு நடும் கருவி - தஞ்சை விவசாயியின் அசத்தல் கண்டுபிடிப்பு!

எப்போதும் போல் நடவு நட்டால் ஒரு ஏக்கருக்கு உழவு தொடங்கி நடவு வரை சுமார் 15,000 ரூபாய் வரை செலவாகும். ஆனால், இதில் சுமார்  8,000 வரை செலவாகும். என்னைப் பார்த்து விவசாயிகள் சிலர், `நீங்கள் வந்து நடவு செய்து கொடுங்கள்' எனக் கேட்கிறார்கள். அவர்களிடம் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 4,500 வாங்கிக் கொண்டு செய்துகொடுக்கிறேன். இந்தக் கருவி கண்டுபிடிப்பதற்கு எனக்கு ரூ.10,000 செலவானது. எதையாவது செய்துகொண்டிருக்கானே என என் வீட்டில் உள்ளவர்களும், என்னை நன்கு அறிந்தவர்களும் என்னை உதவாக்கரையாகத்தான் பார்த்தனர்  ஆனால், இப்போது நம்பிக்கையாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். என்னிடம் உள்ள பொருளாதாரத்தின் அடிப்படையில் இதை எளிய முறையில் உருவாக்கியுள்ளேன். அரசாங்கம் என்னை ஊக்குவித்து நிதி உதவி செய்தால் இதை இன்னும் நல்ல முறையில்  நவீனப்படுத்தி உருவாக்குவதோடு, விவசாயிகள் பயன்பெறும் வகையில் சொல்லியும் தருவேன். நாற்றாங்காலில் இருக்கும் நாற்றைப் பிடுங்கி நடுகிறோம். ஆனால், ஒரே இடத்தில் தானாக முளைக்கும் பயிருக்கு வீரியம் அதிகமாக இருக்கும். அந்த வகையில், இந்த முறை மூலம் முளைக்கும் பயிர் வறட்சியையும் தாங்கும் தன்மை இருக்கும் எனத் தெரிவித்தார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு