Published:Updated:

சாதிக்கணுமா... 'இடியட்' ஆகுங்க!

சாதிக்கணுமா... 'இடியட்' ஆகுங்க!

ள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரியில் காலடி எடுத்துவைக்கும்போது சீனியர் மாணவர்கள், பேராசிரியர்களுடன் எப்படிப் பேசிப் பழகுவது, படிப்பு தவிர கல்ச்சுரல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாமா, வேண்டாமா போன்ற தயக்க மயக்கங்கள் மாணவர்கள் மனதில் அலையடிக்கும். இதனாலேயே கல்லூரியில் சேர்ந்தாலும் பலர் கலகலப்பு இன்றி மற்ற மாணவர்களிடம் இருந்து விலகியே நிற்பார்கள். பள்ளி மாணவர்களின் இந்தத் தயக்கத்தைப் போக்க 'இடியட்’ என்ற பெயரில் ஐ.ஐ.டி. வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் கண்கவர் கலகலப்பு! எத்திராஜ், விவேகானந்தா, குருநானக் ஆகிய மூன்று கல்லூரிகள் சயின்ஸ் கிளப்புடன் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி இசை, பாட்டு, நடனம், ஃபேஸ் பெயின்டிங், மிமிக்ரி என வண்ணம் கூட்டியது.

சாதிக்கணுமா... 'இடியட்' ஆகுங்க!
##~##

''வீடு, ஸ்கூல்னு எல்லா இடங்கள்லயும் படி... படினு படுத்தி எடுக்கிறாங்க. படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. அதைத் தாண்டி கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்குனு பள்ளி மாணவர் களுக்கு உணர்த்தவே இந்த நிகழ்ச்சி. கல்லூரிக் குள் வரும்போது பாட்டு, நடனம், இசைனு பரபரப்பா இயங்கும் கல்லூரி மாணவர்களைப் பார்த்து நாங்க மிரண்டது மாதிரி,  புது மாணவ மாணவிகள் மிரளக் கூடாது என்பதே இடியட் டின் கான்செப்ட். 'நண்பன்’ படமும் இதே கான்செப்ட்டை வலியுறுத்தியதால் இந்த நிகழ்ச்சிக்கு 'இடியட்’னு பெயர்வெச்சோம். பேசிப் பேசியே இயல்பான திறமையை வளர்த்து எடுப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இப்ப 13 பள்ளிகள்ல இருந்து 300 மாணவர்கள் 'இடியட்’ல கலந்துக்கிட்டு இருக்காங்க'' என்கிறார் எத்திராஜ் கல்லூரி மாணவி இந்து.

''60 நொடியில் நீங்களும் அசத்தலாம். உங்களுக்குள் இருக்கும் எந்தத் திறமையையும் வெளிப்படுத்தலாம். பார்வையாளர்களே நடுவர்கள். அதிக அப்ளாஸ் அள்ளுபவர்களே வெற்றியாளர்கள்'' என்று விவேகா னந்தா கல்லூரி மாணவர் ப்ரணவ் அறிவிக்க... அதகளம் அமர்க்களம் ஆரம்பமானது. பி.எஸ்.பி.பி. மெட்ரிக்குலேஷன் மாணவி மஹதி, 'இதுவரை இல்லாத உணர்விது... இதயத்தில் உண்டான கனவிது...’ பாடலுக்கு அழகாக ஸ்டெப்ஸ் போட,வன வாணிப் பள்ளி மாணவி மிருதுளாவும் போட்டிபோட்டு ஆட அரங்கம் அதிர்ந்தது.

சாதிக்கணுமா... 'இடியட்' ஆகுங்க!

அடுத்து ஃபேஸ் பெயின்டிங் மூலம் நாட்டுக்குச் சேதி சொல்ல வந்தது சரஸ்வதி வெங்கட்ராமன் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள். பதினோராம் வகுப்பு லோகேஷ், ''இந்தியப் புலிகள் அழகானவை; அரிதானவை. இயற்கைச் சீற்றங்கள் போன்ற பல காரணங்களால் புலிகள் குறைந்து வருவது ஒரு பக்கம் இருக்க, வனங்களுக்கு உள்ளான மனிதனின் தொடர் ஊடுருவலே புலிகள் அழிய முதல் காரணம். ஆயுதங்களற்ற புலிகளை ஆயுதங்களால் வீழ்த்துவது வீரமல்ல. தேவையற்ற நபர்களுக்குத் தரும் மரியாதையை இனியாவது தேசிய விலங்குக்குத் தருவோம். கடந்த நூற்றாண்டில் 40 ஆயிரம் புலிகள் இருந்தன. இன்று வெறும் 1,411 புலிகளே உள்ளன. தேசிய விலங்கான புலியைப் பாதுகாப் போம்'' என்று கருத்துப் புலியாக மாற, கைதட்டி வரவேற்றது கூட்டம். ''மரம் வளர்ப்பதே பசுமைக் கான ஆதாரம். எல்லோரும் சேர்ந்து மரம் நடுவோம். அடுத்த தலைமுறைக்குப் பசுமையைச் செல்வமாகத் தருவோம்'' என்ற ஸ்ரீசரணின் கருத்துக்கும் பார்வையாளர்களிடம் இருந்து பாரபட்சம் இல்லாத வரவேற்பு!

சாதிக்கணுமா... 'இடியட்' ஆகுங்க!

'ஒரு செய்தித்தாளை கீழே விரித்து ஜோடியாக  அதில் நின்றபடி அதைவிட்டு வெளியேவராமல் நடனமாட வேண்டும். அப்படி ஆடுபவர்களுக்குப் பரிசு’ என்ற போட்டி, ரொம்பவே சுவாரஸ்யம். இதில் எஸ்.வி.எம். பள்ளி மாணவிகள் நைநிகா, ஸ்வேதா ஜோடி வெற்றிபெற்றது.

சாதிக்கணுமா... 'இடியட்' ஆகுங்க!

குழந்தைகள் படிப்பில் மட்டுமின்றி சகலத் திலும் சாதிக்க இப்படிப்பட்ட இடியட் நிகழ்ச்சிகள் நிறைய... நிறையத் தொடரட்டுமே!

சாதிக்கணுமா... 'இடியட்' ஆகுங்க!

- க.நாகப்பன்,
படங்கள்: ப.சரவணகுமார்

அடுத்த கட்டுரைக்கு