Published:Updated:

"எங்க தெருவுல குடியிருந்தவர், சூப்பர் ஸ்டாரான பிறகுதான் நடிக்கிற ஆர்வமே வந்துச்சு..!"- சின்னி ஜெயந்த்  #LetsRelieveStress

'கை கொடுக்கும் கை'-யில் ஆரம்பித்த பயணம், 400 படங்களுக்கு மேல் நடித்து தமிழ்த் திரையுலகில் தனித்துவம் பெற்றவர் சின்னி ஜெயந்த். பெரும்பாலான ஹீரோக்களுக்கு நண்பனாக நடித்திருக்கிறார். மிமிக்ரி கலைஞர். இயக்குநரும்கூட. படம் தயாரித்திருக்கிறார். இப்போது மேடைகளில் பாடகராகவும் வலம் வரத் தொடங்கியிருக்கிறார். 'சிவாஜியும் ரஜினியும் என் இரண்டு கண்கள். அவர்களின் சாயல்தான் என்னிடம் அதிகமிருக்கும். காரணம், அவர்களைப் பார்த்துத் திரைத்துறைக்கு வந்தவன் நான்' என்கிறார். அவரிடம், 'மனஅழுத்தம் தந்த தருணங்களைக் கடந்து வந்தது எப்படி' எனக் கேட்டேன்.

உணர்வுபூர்வமாகப் பேசினார் சின்னி ஜெயந்த்.

"எங்க தெருவுல குடியிருந்தவர், சூப்பர் ஸ்டாரான பிறகுதான் நடிக்கிற ஆர்வமே வந்துச்சு..!"- சின்னி ஜெயந்த்  #LetsRelieveStress

''நாம இருக்கிற இடத்துக்கும் நாம நினைக்கிற இடத்துக்கும் ஓட வேண்டிய தூரம்தான் வாழ்க்கை. இந்தப் பயணம் முழுக்க முழுக்க ஸ்ட்ரெஸ் தரக்கூடியது. சென்னை, ராயப்பேட்டை மியூசிக் அகாடமிக்குப் பின்னாலிருக்கிற புதுப்பேட்டை தோட்டத் தெருவிலதான் நான் பிறந்தேன். 8 வயசா இருக்கும்போது  நானும் என் தெரு பசங்களும் ஒரு நாடகம் பாக்கப் போயிருந்தோம். நாடகம் முடியுறப்போ ஹீரோ ஸ்டேஜ்லயே விழுந்து இறந்துட்டார். அதைப் பார்த்துட்டு அழ ஆரம்பிச்சேன். எங்ககூட வந்திருந்த பசங்க எல்லாரும் அழுதாங்க. 

உடனே பக்கத்துல இருந்த பெரியவங்க, 'இதெல்லாம் நடிப்புடா... திரை விழுந்ததும் அவர் எழுந்து போயிடுவார்'னு சொன்னாங்க. 'இல்ல... பொய் சொல்றீங்க'னு அழுதோம். 'வாடா எங்கூட'னு ஸ்டேஜ்க்குப் பின்பக்கமா கூட்டிட்டுப் போய் காண்பிச்சார் அந்த ஹீரோ கம்பீரமா கதர் சட்டை, கதர் வேட்டியில சிங்கம் மாதிரி உட்கார்ந்திருந்தார். அந்த ஹீரோ சிவாஜி. அந்த நாடகம் 'வியட்நாம் வீடு'. அதுக்கப்புறம் 12 வயசுலயே 'ராயப்பேட்டை சிவாஜி ரசிகர் மன்றம்' ஆரம்பிச்சுட்டேன். சிவாஜி சார் படமா பார்த்துக்கிட்டு, வெஸ்லி ஸ்கூல்ல படிச்சிக்கிட்டு என்னுடைய பால்ய நாள்கள் ஓடுச்சு. 

"எங்க தெருவுல குடியிருந்தவர், சூப்பர் ஸ்டாரான பிறகுதான் நடிக்கிற ஆர்வமே வந்துச்சு..!"- சின்னி ஜெயந்த்  #LetsRelieveStress

அடுத்து ஒருநாள் இன்னொரு அதிர்ச்சி... மிட்லண்ட் தியேட்டர்ல 'அபூர்வ ராகங்கள்' படம் பார்த்தேன். க்ளைமாக்ஸ்ல பெரிய அதிர்ச்சி. க்ளைமாக்ஸ்ல வந்து நடிக்கிறவர், எங்க தெருமுனையில இருக்கிற பாணக்கல்ராவ் வீட்டுல குடியிருக்கிறவர். விட்டல், முரளி, நடராஜ், சிவாஜிராவ்னு நாலுபேர்  அந்த வீட்டுல குடியிருந்தாங்க. அந்த சிவாஜிராவ்தான் ரஜினிகாந்த்தா மாறியிருந்தார். வெஸ்லி ஸ்கூலுக்குப் போகும்போதெல்லாம் பார்ப்பேன். அப்போ நான் எட்டாவது படிச்சிக்கிட்டிருக்கேன். அட... நம்ம தெருவிலே தினம்தினம் நாங்க பார்க்கிற நபர் திடீர்னு படத்துல நடிக்கிறார். சரசரனு ஹீரோவாயிட்டார் அடுத்தடுத்து படங்கள். எங்கேயோ போயிட்டார். 

எனக்குள்ளே இருந்த சினிமா வேட்கை கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிச்சிடுச்சு. பள்ளி, கல்லூரியெல்லாம் முடிச்சிட்டு ரஜினி சார் மாதிரியே நானும் பிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்து பாட்டு, டான்ஸ், பைட்டெல்லாம் கத்துக்கிட்டேன். டான்ஸ் எனக்கு வரவே இல்ல. நடிகனா ஆகணும்கிற ஸ்ட்ரெஸ் என்னைத் துரத்திக்கிட்டே இருந்துச்சு. உட்லண்ட்ஸ் டிரைவ் இன்னுக்கு மகேந்திரன் சார் அசிஸ்டென்ட்டுங்க அடிக்கடி வருவாங்க. அவங்ககூட பழக்கம் ஏற்பட்டுச்சு. என்னுடைய லட்சியத் தேடலுக்கும் ஒரு முடிவு வந்துச்சு. 

"எங்க தெருவுல குடியிருந்தவர், சூப்பர் ஸ்டாரான பிறகுதான் நடிக்கிற ஆர்வமே வந்துச்சு..!"- சின்னி ஜெயந்த்  #LetsRelieveStress

எந்த சூப்பர் ஸ்டாரைப் பார்த்து அவர் மாதிரி நடிக்கணும்னு நினைச்சேனோ அவர்கூடத்தான் 'கை கொடுக்கும் கை' படத்துல எனக்கு ஃபர்ஸ்ட் ஷாட். உலகமே என்னோட கைக்கு வந்த மாதிரி இருந்துச்சு. உண்மையில், அதுக்கப்புறம்தான் எனக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாச்சு. எதுவா இருந்தாலும், நமக்கு கிடைக்காம இருக்கும்போதுகூட பரவாயில்லே... கிடைச்சாதான் ஸ்ட்ரெஸ் அதிகமாகும். அதுக்குப் பிறகு சிறிதும் பெரிதுமா நிறைய கேரக்டர்கள்ல நடிச்சேன். படம் இயக்கினேன். தயாரிச்சேன். இசையிலும் எனக்கு ஆர்வமுண்டு. பாட்டு கிளாஸ் போய் முறையா கத்துக்கிட்டிருக்கேன். இப்போ மிமிக்ரி பண்றதோட பழைய டி.எம்.எஸ். பாடல்களை என்னுடைய குரல்ல பாட ஆரம்பிச்சிட்டேன்.

என்னை ரொம்பவும் உலுக்கியெடுத்த ஒரு நிகழ்ச்சின்னா என் அம்மாவின் மரணம்தான். நம்மை உருவாக்கி, நாம சிரிச்சா கூடவே சிரிச்சு, நாம அழுதா கூடவே அழுது, நமக்காகவே வாழ்ந்த உயிர்த் தெய்வம். அவங்க மரணத்தைத்தான் என்னால் தாங்கிக்க முடியலை. தோல்விகள் அவமானங்களைக்கூடக் கடந்து போக முடியுது. இழப்புகளைத்தான் தாங்க முடியலை. 'உள்ளத்தில் குழந்தையடி'னு சொல்லுவாங்க. எவ்வளவு பெரிய மனுஷனும் அவங்க அம்மாக்கிட்ட குழந்தையாதான் நடந்துக்குவான்.  

"எங்க தெருவுல குடியிருந்தவர், சூப்பர் ஸ்டாரான பிறகுதான் நடிக்கிற ஆர்வமே வந்துச்சு..!"- சின்னி ஜெயந்த்  #LetsRelieveStress

மன அழுத்தம் மிகுந்த நேரங்கள்ல நான் பாட ஆரம்பிச்சிடுவேன். முக்கியமா, எம்.ஜி.ஆர் படமான 'கலங்கரை விளக்கம்' படத்துல வர்ற 'சிவகாமி... பொன்னெழில் பூத்தது புது வானில்' பாடலைப் பாடுவேன். டி.எம்.எஸ் எவ்வளவு பெரிய மகா கலைஞர்ங்கிறதுக்கு இந்தப் பாட்டு ஆகச்சிறந்த உதாரணம். அப்புறம் 'சிவந்த மண்' படத்துல வர்ற 'ஒரு ராஜா ராணியிடம்' பாடலைக் கேட்பேன் கேட்டுக்கிட்டே பாடுவேன்.
 
ஸ்ட்ரெஸ் வராம இருக்கணும்னா நாம அடுத்தவங்களுக்குக் கெடுதல் பண்ணக்கூடாது. எவரைப் பற்றியும் முழுவதுமாகத் தெரியாமல் தப்பான அபிப்பிராயங்களைச் சொல்லக் கூடாது. எந்தக் காரணம் கொண்டும் தாய் தகப்பனைத் திட்டக்கூடாது... எந்தக் காரியம் செய்தாலும் அவங்களை வணங்கி, மனசுல நினைச்சிட்டுத்தான் செய்யணும். அதைவிடப் பெரிய ஆசீர்வாதம் வேறே யார்க்கிட்டேயிருந்தும் நமக்குக் கிடைச்சிடாது. உடற்பயிற்சி செய்வேன்... இல்லேன்னா ஒரு டிரைவ் போவேன். நல்ல சுவையான உணவைச் சாப்பிடுவேன். சாப்பிட்டால் மனம் குளிர்ந்திடும். வாரத்தில் ஒரு நாள் சாப்பிடாமல் விரதம் இருப்பேன். அது நம்ம மனசுக்கு வைராக்கியத்தையும் தெம்பையும் கொடுக்கும்'' என்கிறார் சின்னி ஜெய்ந்த்.