Published:Updated:

``ஒரு நாளைக்கு 300 ரூபாய்... அதைக்கூட கட்ட முடியாம தவிக்கிறேன்!" - `நாப்கின்' வள்ளி #FollowUp

வள்ளி

``மூத்த பொண்ணு படிப்பை முடிச்சுட்டா. என்னை கவனிச்சுக்க அவ இன்னும் வேலைக்குப் போகலை. பொண்ணையும் வேலைக்கு அனுப்பவேண்டிய கட்டாயத்துல நான் தவிக்கிறேன். அதனால மனசு வலிக்குது."

``ஒரு நாளைக்கு 300 ரூபாய்... அதைக்கூட கட்ட முடியாம தவிக்கிறேன்!" - `நாப்கின்' வள்ளி #FollowUp

``மூத்த பொண்ணு படிப்பை முடிச்சுட்டா. என்னை கவனிச்சுக்க அவ இன்னும் வேலைக்குப் போகலை. பொண்ணையும் வேலைக்கு அனுப்பவேண்டிய கட்டாயத்துல நான் தவிக்கிறேன். அதனால மனசு வலிக்குது."

Published:Updated:
வள்ளி

மூலிகை நாப்கின் தயாரித்தும், அது குறித்து விழிப்புணர்வு கொடுத்தும் பிரபலமானவர், திருச்சி வள்ளி. தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் போராட்டங்களை எதிர்கொண்டு, சுயதொழிலில் வளர்ந்துவந்தார். இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட வள்ளிக்குப் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் நிலைகுலைந்திருக்கிறார். வள்ளியின் தற்போதைய நிலைகுறித்து சில வாரங்களுக்கு முன்பு விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதைப் படித்த வாசகர்களில் பலரும் வள்ளிக்கு தங்களால் முடிந்த பண உதவியைச் செய்திருக்கின்றனர். 

``ஒரு நாளைக்கு 300 ரூபாய்... அதைக்கூட கட்ட முடியாம தவிக்கிறேன்!" - `நாப்கின்' வள்ளி #FollowUp

அவர்களுக்கு நன்றி தெரிவித்து நம்மிடம் பேசிய வள்ளி, தற்போதைய உடல்நிலை முன்னேற்றம் குறித்து பேசினார்.

``தொடர்ந்து சிகிச்சை எடுத்துகிட்டிருக்கேன். கீமோதெரபி சிகிச்சையில் இதுவரை எனக்கு நான்கு ஊசிகள் போட்டிருக்காங்க. ரேடியேஷன் சிகிச்சையில, 30 முறை வெளி கரன்ட் வெச்சிருக்காங்க. இன்னும் உள் கரன்ட் சிகிச்சை ஆரம்பிக்கலை. திருச்சியிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலதான் சிகிச்சை எடுத்திட்டிருக்கேன். அங்க 12 படுக்கைகள் இருக்கிற பொது வார்டுலதான் தங்கியிருந்தேன். அதுக்கே ஒருநாளைக்கு முந்நூறு ரூபாய் கட்டணம். மேற்கொண்டு ஆஸ்பத்திரியில தங்கி சிகிச்சை பெறுவதற்கு என்கிட்ட பண வசதியில்லை. எனவே, முசிறியில இருக்கிற என் வீட்டுக்கு வந்துட்டேன். 

``ஒரு நாளைக்கு 300 ரூபாய்... அதைக்கூட கட்ட முடியாம தவிக்கிறேன்!" - `நாப்கின்' வள்ளி #FollowUp

ஆஸ்பத்திரியில இருந்தபோ, கடை சாப்பாடு எனக்கு ஒத்துக்கலை. இப்போ வீட்டுல என் பொண்ணு சமைச்சுக்கொடுக்கிறா. அதனால சாப்பிடுற கொஞ்ச சாப்பாடும் ஆரோக்கியமானதா இருக்கு. என் உடல்நிலையில கொஞ்சம் பாசிட்டிவ் மாற்றத்தை உணர்கிறேன். இப்போ உதிரப்போக்கு வருவதில்லை. ஆனாலும், புற்றுநோய் சிசிச்சையின் தாக்கம் என்னை இயல்பு நிலைக்குத் திரும்பவிடாம செய்யுது. தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை எடுத்துட்டிருக்கேன். இன்னும் கர்ப்பப்பை நீக்கப்படலை. எனவே, இன்னும் எடுத்துக்கவேண்டிய சிகிச்சைகள் நிறைய இருக்கும். எனவே, நான் முழுமையா குணமடைய நீண்ட காலமாகும்னு நினைக்கிறேன். 

விகடன் இணையதளத்தில் என் உடல்நிலை குறித்து பேட்டி வெளியான பிறகு, பலரும் என் பையனுக்கு போன் பண்ணி ஆறுதலா பேசுறாங்க. என் மூணு பிள்ளைகளும்தான் எனக்கான நம்பிக்கை, ஆறுதல். அவங்களுக்காகத்தான் இன்னும் நம்பிக்கையுடன் உயிர்வாழறேன். ப்ளஸ் டூ முடிச்சிருக்கும் கடைசிப் பையனை காலேஜ் அனுப்பணும். மூத்த பொண்ணு படிப்பை முடிச்சுட்டா. என்னைக் கவனிச்சுக்கிட்டு இருக்கிறதால அவ இன்னும் வேலைக்குப் போகலை. பொண்ணையும் வேலைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்துல நான் தவிக்கிறேன். அதனால மனசு வலிக்குது. என் மூணு பிள்ளைகளும் குடும்ப கஷ்டத்தைப் புரிஞ்சுகிட்டு, பொறுப்புடன் நடந்துக்கிறாங்க." - சற்று இடைவெளி விட்டு மீண்டும் பேச்சைத் தொடர்கிறார், வள்ளி.

``ஒரு நாளைக்கு 300 ரூபாய்... அதைக்கூட கட்ட முடியாம தவிக்கிறேன்!" - `நாப்கின்' வள்ளி #FollowUp

``இதுவரையிலான சிகிச்சைக்கே 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல செலவாகிடுச்சு. அதில் 40 ஆயிரம் ரூபாயை பலர்கிட்ட இருந்தும் என் பையன் கடனா வாங்கியிருக்கான். இனி மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகளுக்குச் சுத்தமா எங்ககிட்ட பணமில்லை. ஏற்கெனவே வாங்கிய கடனையெல்லாம் எப்படி அடைக்கிறதுனு வழி தெரியலை. இந்நிலையில இனி எங்களை நம்பி யார் கடன் தருவா... தந்தாலும் அதையெல்லாம் எப்படி அடைக்கிறதுனு தெரியலை. 

முன்பு நானும் என் மூணு பிள்ளைகளும் நாப்கின் தயாரிப்புல ஈடுபடுவோம். நாங்க இரவு பகலா வேலை செஞ்சு தொழிலுக்காக வாங்கின கடன்களையெல்லாம் மெதுவா அடைச்சுகிட்டு வந்தோம். பலருக்கும் பயிற்சியும் கொடுத்தோம். இப்போ என் ரெண்டாவது பையன் மட்டும்தான் நாப்கின் தயாரிக்கிறான். அவனுக்கு என் மற்ற இரு பிள்ளைகளுக்கும் உதவி செய்றாங்க. நாப்கின் தயாரிக்க நவீன உபகரணங்கள் எதுவும் எங்ககிட்ட இல்லை. கத்தரிக்கோல் பயன்படுத்தி, கையாலதான் எல்லா வேலையையும் செய்வோம். எனவே இப்போ உற்பத்தி ரொம்பவே குறைவாதான் நடக்குது. அதனால, வருமானமும் ரொம்பவே கம்மியாதான் கிடைக்குது. இந்நிலையில ஒரு பையன் சம்பாதிச்சு நாங்க நாலு பேர் எப்படி வாழ முடியும்...

``ஒரு நாளைக்கு 300 ரூபாய்... அதைக்கூட கட்ட முடியாம தவிக்கிறேன்!" - `நாப்கின்' வள்ளி #FollowUp

என் வாழ்க்கை மாதிரி, அவங்க வாழ்க்கையும் வறுமை, கஷ்டம், பிரச்னைனு ஆகிடக் கூடாதுங்கிறதுதான் என் ஒரே ஆசை. என் மூணு பிள்ளைங்க முகத்துலயும் சந்தோஷத்தை எப்போ நான் பார்ப்பேன்னு தெரியலை. வீட்டுல இருந்தபடி திருச்சிக்குப்போய் சிகிச்சை எடுக்கிறேன். இப்போ என் உடல்நிலை இருக்கிற நிலையில, நீண்ட தூரம் பயணம் செஞ்சு ஆஸ்பத்திரிக்குப் போறதே சிரமமா இருக்கு. ஆனா, வேற வலியில்லையே! இனி ஒவ்வொரு நாளையும் எப்படி நகர்த்தப்போறேன்னு தெரியலை. இதுவரை கிடைச்சிருக்கிற பண உதவி குறைவாகவே கிடைச்சிருக்கிறதா கேள்விப்பட்டேன். இனி எடுத்துக்க வேண்டிய சிகிச்சைகளுக்கு சில லட்சங்கள் வரை செலவாகும். அதற்காக மக்கள்கிட்ட பண உதவியை எதிர்பார்க்கிறேன். அந்த நம்பிக்கையுடன் புற்றுநோய்க்கு எதிராகப் போராடி வெற்றிபெறுவேன்." - கண்ணீருடன் பேச்சை முடிக்கிறார், வள்ளி.

வள்ளிக்கு உதவ நினைக்கும் வாசகர்களின் கவனத்துக்கு...

வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு `SAVE VALLI’ என description-ல் குறிப்பிடுமாறு வேண்டிக்கொள்கிறோம்!

1. இந்தியாவில் இருக்கும் வாசகர்கள் வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் ஹெச்.டி.எஃப்.சி வங்கி சேமிப்பு கணக்கு எண் 00040330019032 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோட்: HDFC 0000004, ஐ.டி.சி. மையம் கிளை, சென்னை - 600 002) மூலம் அனுப்பலாம்.

2. வெளிநாட்டு வாசகர்கள் வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ்.சி கோட் :  IDIB000C032, ஸ்விப்ட் கோட் : IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை - 600 008) மூலம் அனுப்பலாம். 

3. நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர் மற்றும் காசோலை அல்லது டி.டி வாயிலாக உதவ நினைப்போர், `வாசன் அறக்கட்டளை' ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002 முகவரியில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.

4. மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.

புற்றுநோயில் வாடும் `நாப்கின்' வள்ளி குறித்து விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையைப் படித்த வாசகர்கள் பலரும் ஆறுதல் வார்த்தைகளைக் கூறியதுடன், தங்களால் இயன்ற பண உதவிகளையும் செய்து நெகிழச் செய்தனர். இதுவரை 60 ஆயிரம் ரூபாய் பண உதவிக் கிடைத்திருக்கிறது. இன்னும் ஒரு லட்சம் ரூபாய் பண உதவித் தேவைப்படுகிறது.

உதவிய வாசகர்கள்
உதவிய வாசகர்கள்

பண உதவி கிடைத்தத் தகவலை வள்ளியிடம் தெரிவித்திருந்தோம். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்ததுடன், உதவிய வாசகர்களுக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். உதவிய வாசகர்களின் விவரங்களைக் கட்டுரையில் வெளியிட்டிருக்கிறோம்.