Published:Updated:

கேரளாவில் கிச்சனுக்குள் ஒற்றை மரம்!- இங்கே 20,000 மரங்களை வெட்ட முடிவு

கேரளாவில் திருச்சூர் அருகே நயரன்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாகுலேயன். இவரின், மனைவி ராமா. இருவரும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். 20 ஆண்டுகளுக்கு முன் சிறு வீடு ஒன்றைக் கட்டியுள்ளனர். பின்னர், வீட்டை விஸ்தரித்துக் கட்ட முடிவு செய்துள்ளனர். வீட்டு காம்பவுண்டின் ஒரு பகுதியில் இளஞ்சி மரம் இருந்துள்ளது. 50 வயதான அந்த மரத்தை வெட்டிவிட்டு அந்த பகுதியில் கிச்சன் அமைத்துக் கொள்ளுங்கள் என்று அக்கம் பக்கத்தினர் ஆலோசனை சொன்னார்கள். மரத்தில் குருவி உள்ளிட்ட ஏராளமான பறவைகளும் வசித்து வந்தன. மரத்தை வெட்டி குருவிகளின் வாழ்விடத்தை அழிக்க பாகுலேயன் விரும்பவில்லை. அதனால் கிச்சன் பகுதியை கான்க்ரீட்டில் கட்டாமல் ஆஸ்பெட்டாஸ் ஷீட் வைத்து அமைத்தார். அதில், மரத்துக்கு மட்டும் இடைவெளி விடப்பட மரம் வெட்டப்படாமல் காப்பாற்றப்பட்டது. 

கேரளாவில் கிச்சனுக்குள் ஒற்றை மரம்!- இங்கே 20,000 மரங்களை வெட்ட முடிவு

photo courtesy: manorama

கேரளாவில் ஒற்றை மரம் இப்படி பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்க, தமிழகத்தில் 20,000 மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையுடன் ஆந்திர மாநிலம் கர்நுல் நகரத்தை இணைக்கும் வகையில் தாட்ச்சூர் முதல் ஆந்திராவில் சித்தூர் நகரம் வரை NH-716B பசுமை வழிச்  சாலை அமைக்கப்படவுள்ளது. சென்னை கர்நுல் பகுதிகள் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டதால், சாலைப் பணிகளுக்காக ரூ.3,197 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 126 கிலோ மீட்டர் தொலைவுக்கு 6 வழிப் பாதையாக இந்தச் சாலை அமைக்கப்படவுள்ளது. இந்தச் சாலை அமைவதால் எண்ணுர் காமராஜர் மற்றும் அதானி குழுமத்துக்குச் சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு எளிதாகச் சரக்குகளை கொண்டு செல்ல முடியும். பொன்னேரி ஸ்மார்ட் சிட்டி, மகிந்த்ரா வேர்ல்டு சிட்டியும் இந்த சாலையால் இணைக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்துக்காக 20, 000 மரங்கள் வெட்டப்படுகின்றன. 

சாலை அமைக்கும் பணிக்காக 884.26 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 12 சதவிகிதம் வன நிலங்கள், 5 சதவிகிதம் நீர்நிலைகள், 76 சதவிகிதம் விவசாய நிலங்கள், 6 சதவிகிதம் வறண்ட பூமி, 1 சதவிகிதம் செட்டில்மென்ட் நிலங்கள் ஆகும்.  24 ஓடைகள் மற்றும்  சிறு ஆறுகள், 21 குளங்களைக் கடந்து இந்தச் சாலை செல்கிறது. சாலை அமைக்கும் பணியால் ஆறுகள், ஓடைகளின் பாதைகள் மாற்றி விடப்படுவதால், விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள். 

கேரளாவில் கிச்சனுக்குள் ஒற்றை மரம்!- இங்கே 20,000 மரங்களை வெட்ட முடிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் 26 கிராமங்கள் வழியாக இந்தச் சாலை செல்கிறது. திருவள்ளூர் மாவட்ட விவசாயத் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளர் பார்த்தசாரதி கூறுகையில்,``சாலை அமைக்கும் திட்டத்தால் ஏராளமான நீர் நிலைகள், ஆறுகள் குளங்கள் பாதிக்கப்படுகிறது. 8 மாதத்துக்கு முன் நிலத்தைக் காலி செய்யக் கூறி நோட்டீஸ் வழங்கினார்கள். தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைவர், முதல்வர் , மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் திட்டத்தை நிறுத்தக் கோரி மனுக் கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை '' என்கிறார்.