Published:Updated:

``தொடக்கத்துல ஆங்கிலம் பேச ரொம்பக் கஷ்டப்பட்டோம்!'' - பிரபல மருத்துவர்களின் ஷேரிங்ஸ் #LetsLearn

ஆங்கிலத்தைப் படிக்க முடியாமல் ஒரு சிலர் எம்.பி.பி.எஸ். படிப்பையே கைவிட்டுச் சென்றனர்.

``தொடக்கத்துல ஆங்கிலம் பேச ரொம்பக் கஷ்டப்பட்டோம்!'' - பிரபல மருத்துவர்களின் ஷேரிங்ஸ் #LetsLearn
``தொடக்கத்துல ஆங்கிலம் பேச ரொம்பக் கஷ்டப்பட்டோம்!'' - பிரபல மருத்துவர்களின் ஷேரிங்ஸ் #LetsLearn

பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கி, நுழைவுத்தேர்வுகளைக் கடந்து, உயர்கல்வியில் நுழையும் பல மாணவர்களின் பிரதான பிரச்னை, ஆங்கில மொழி. ஆங்கிலத்தில் இலக்கணப் பிழையில்லாமல் எழுதும் மாணவர்களால், சரளமாகப் பேச முடிவதில்லை. இதில் கிராமப்புற மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். பெரும்பணத்தைச் செலவழித்தாவது ஆங்கிலத்தில் சரளமாகப் பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளுக்குப் படையெடுக்கின்றனர். ஆனால், ஆங்கிலத்தைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. தவறாக இருந்தாலும் தைரியமாகப் பேசத் தொடங்கிவிட்டால், சில மாதங்களிலேயே தவறில்லாமல் சரளமாகப் பேச முடியும் என்கின்றனர் மருத்துவம் என்ற உன்னத சேவையில் பணியாற்றும் மருத்துவர்கள். 

``தொடக்கத்துல ஆங்கிலம் பேச ரொம்பக் கஷ்டப்பட்டோம்!'' - பிரபல மருத்துவர்களின் ஷேரிங்ஸ் #LetsLearn

``தமிழ்வழியில் பள்ளிப்படிப்பை முடித்து, எம்.பி.பி.எஸ் படிக்கச் சென்றபோது ஆங்கிலம் பேசுவதில் ஏற்பட்ட பிரச்னைகளைக் கடந்து, எப்படி ஆங்கிலத்தில் சரளமாகப் பேசப் பழகினீர்கள்?'' என்ற கேள்விக்கு, பிரபல மருத்துவர்கள் மூவர் ஆங்கில மொழியுடனான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இதய மருத்துவர் தணிகாசலம்: ``நான் தமிழ்வழியில் படித்ததும், சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் 

``தொடக்கத்துல ஆங்கிலம் பேச ரொம்பக் கஷ்டப்பட்டோம்!'' - பிரபல மருத்துவர்களின் ஷேரிங்ஸ் #LetsLearn

சேர்ந்தேன். முதலாம் ஆண்டு மிகவும் கடினமாக இருந்தது. எங்கள் வீட்டில் ஆங்கில நாளிதழை கட்டாயம் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். நாளிதழில் உள்ள செய்திகளைப் படித்துவிட்டு அதைச் சுருக்கி ஆங்கிலத்தில் எழுதச் சொல்வார்கள். அப்படிப் பழகியதால் இலக்கணப் பிழையில்லாமல் எழுதக் கற்றுக்கொண்டேன். ஆனால், ஆங்கிலம் பேசுவதில் பிரச்னை இருந்தது. தொடக்கத்தில் மிகவும் தாழ்வுமனப்பான்மையுடன்தான் இருந்தேன்.

கான்வென்டில் படித்த மாணவர்கள் எல்லாரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவார்கள். அதனால், அவர்களிடமிருந்து சற்று ஒதுங்கியே இருந்தாலும், ஆங்கிலத்தில் பேசத் தயங்கியதே கிடையாது. ஓராண்டுக்குப் பிறகு ஆங்கில வழக்குமொழி, வேகம், சரளமாகப் பேசுவது எல்லாம் வந்துவிட்டன.  தமிழ்வழியில் படித்தவர்கள் மருத்துவராக முடியாது என்பது கிடையாது. எண்ணம், ஈடுபாடு, ஆழ்ந்த நோக்கம், குறிக்கோள் இருக்க வேண்டும். உடன் படிக்கும் மாணவர்கள், ஒரே வயதுடையவர்களிடத்தில் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே இருந்தால், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பிழையில்லாமல் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசலாம்.''

நச்சுயியல் நிபுணர் டாக்டர் பரந்தாமன்: ``பத்தாம் வகுப்பு வரை

``தொடக்கத்துல ஆங்கிலம் பேச ரொம்பக் கஷ்டப்பட்டோம்!'' - பிரபல மருத்துவர்களின் ஷேரிங்ஸ் #LetsLearn

தமிழ்வழியில்தான் படித்தேன். ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ-வில் ஆங்கிலவழியில் படித்தேன். அதன் பிறகு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்தேன். அந்தக் காலங்களில் ஆங்கிலவழியில் படிப்பதற்கு கடின உழைப்பைச் செலுத்தினேன். எல்லோரும் நான்கு மணி நேரம் படித்தால் நான் எட்டு மணி நேரம் படித்தேன். ஆரம்பகாலத்தில் உடன் படிக்கும் மாணவர்களிடம் ஆங்கிலத்தில் தொடர்புகொண்டு பேச மிகவும் சிரமப்பட்டேன். வகுப்பெடுக்கும் பேராசிரியர்களிடம் ஆங்கிலத்தில் பேசுவது அதைவிட சிரமமாக இருந்தது.

பேராசிரியர்கள் வகுப்பெடுக்கும்போது அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பேன். எங்களுக்குக் கற்றுக்கொடுத்த பேராசிரியர்கள், மாணவர்கள் அளிக்கும் தகவல்கள் பிழையாக இருக்கின்றனவா, கேள்விக்குச் சரியான பதிலைச் சொல்கிறோமா என்றுதான் பார்ப்பார்கள். ஆங்கிலத்தில் உள்ள இலக்கணப் பிழைகளைப் பார்க்க மாட்டார்கள். அதனால் நான் பேசும் ஆங்கிலத்தில் பிழைகள் இருந்தாலும் நான் அளிக்கும் பதில்களில் எப்போதும் தவறு இருக்காது.

தட்டுத்தடுமாறி தவறான இலக்கணத்தைப் பயன்படுத்தி பேசிப் பேசி, ஒருகட்டத்தில் அது சரியான ஆங்கிலமாக வந்துவிட்டது. எம்.பி.பி.எஸ் படிப்புக்குப் பிறகு, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.டி பொதுமருத்துவம், டிடிசிபி, பல டிப்ளோமா படிப்புகளையும் படித்துவிட்டேன். 20 ஆண்டுகளைக் கடந்து மருத்துவ சேவையில் பணியாற்றிவருகிறேன். தேசிய, சர்வதேச மருத்துவக் கருத்தரங்குகளில்கூட ஆங்கிலத்தில் பேசியிருக்கிறேன். ஆங்கிலத்தில் பேச, கூச்சமே படக் கூடாது. பேசிப் பேசிப் பழகினால், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஆங்கிலத்தில் பேசுவது எளிதாகிவிடும்.''

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வசந்தாமணி: ``நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை அருகில் உள்ள

``தொடக்கத்துல ஆங்கிலம் பேச ரொம்பக் கஷ்டப்பட்டோம்!'' - பிரபல மருத்துவர்களின் ஷேரிங்ஸ் #LetsLearn

கச்சிடையான்பாளையம் என்ற சிறிய கிராமம்தான் என் சொந்த ஊர். பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ்வழியில்தான் படித்தேன். கிராமப்புறத்தில் படித்தாலும் பள்ளி ஆசிரியர்கள் ஆங்கில இலக்கணத்தை நன்றாகக் கற்பித்தனர். பி.யூ.சி நாமக்கல் கலைக் கல்லூரியில் ஆங்கிலவழியில் படித்தேன். அதற்குப் பிறகு சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர்ந்தேன்.

பாடங்களை ஆங்கிலத்தில் படிப்பதில் எனக்கு பிரச்னையில்லை. அப்போது எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டில் அடிப்படை அறிவியல் பாடம் இருந்தது. அதில் ஆங்கிலம், இயற்பியல், புள்ளியியல், உயிரியல் போன்ற பிரிவுகள் இருக்கும். அதில் ஆங்கிலப் பாடம் மிகவும் கடினமாக இருக்கும். ஆங்கிலத்தைப் படிக்க முடியாமல் ஒருசிலர் எம்.பி.பி.எஸ் படிப்பையே கைவிட்டுச் சென்றனர். ஆங்கிலம் பேசுவது சிரமமாக இருந்தது. மூத்த மாணவர்களுடன் ஆங்கிலத்தில்  பேச பயமாக இருக்கும். குறைவாகப் பேசினாலும் ஆங்கிலத்தை இலக்கணப் பிழையில்லாமல் பேச வேண்டும் என்று கவனமாக இருந்தேன்.

என் வகுப்பில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். அது, ஆங்கிலத்தில் பேசிப் பழக ஒரு தன்னம்பிக்கையைக் கொடுத்தது. அதனால், இரண்டு மூன்று மாதங்களிலேயே சரளமாகப் பேசப் பழகிவிட்டேன். அதன் பிறகு அதே கல்லூரியிலேயே டி.ஜி.ஓ., எம்.டி. படித்து முடித்தேன்.''

Vikatan