Published:Updated:

Wildlife Biology - இந்தியாவிலேயே ஒரே ஒரு ஸ்பெஷல் இடத்தில் மட்டுமே படிக்கமுடியும்! #LetsLearn

Wildlife Biology - இந்தியாவிலேயே ஒரே ஒரு ஸ்பெஷல் இடத்தில் மட்டுமே படிக்கமுடியும்! #LetsLearn
Wildlife Biology - இந்தியாவிலேயே ஒரே ஒரு ஸ்பெஷல் இடத்தில் மட்டுமே படிக்கமுடியும்! #LetsLearn

இன்றைய சூழலில் காடுகள் பாதுகாப்பு மற்றும் காட்டுயிர்ப் பாதுகாப்பு என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. இந்தப் படிப்பை படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் தேடி வந்து படிக்கின்றனர்.

உலகமே தண்ணீர்ப் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறது. இயற்கை ஆதாரங்களான மரங்கள், காடுகளை அழித்துக்கொண்டே வந்ததன் விளைவைத்தான் தண்ணீர்ப் பஞ்சமாக இப்போது அனுபவித்து வருகிறோம். வனங்களையும் இயற்கை ஆதாரங்களையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு வலு சேர்க்கும் வகையில் வனங்களைப் பாதுகாப்பது குறித்த பட்டப்படிப்பு ஒன்று ஊட்டியில் கற்பிக்கப்படுகிறது. இந்தப் படிப்பு இந்தியாவிலேயே ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் மட்டும்தான் பயிற்றுவிக்கப்படுகிறது என்பது ஆச்சர்யத் தகவல்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆங்கிலேயர்களால் முதன்முதலில் கட்டப்பட்ட கட்டடம் ஸ்டோன் ஹவுஸ். இது அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் கோடைக்கால தலைமையகமாகச் செயல்பட்டு வந்தது. அந்தக் கட்டடத்தில் 1955-ம் ஆண்டு அரசுக் கலைக்கல்லூரி தொடங்கப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை நீலகிரி மாவட்டத்தில் ஏழை எளிய மக்களின் உயர்கல்வி கனவை நிஜமாக்கும் ஒரே கல்வி நிறுவனமாக இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரியானது ஒரு சில பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்பட்டாலும் தற்போது தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், வேதியியல், இயற்பியல் என 12-க்கும் அதிகமான துறைகள் உள்ளன. இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டங்கள் வரை அளிக்கப்படுகிறது. நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கான எதிர்காலம் இந்தக் கல்லூரியில் நிர்ணயிக்கப்படுகிறது. 200-க்கும் அதிகமான பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

Wildlife Biology - இந்தியாவிலேயே ஒரே ஒரு ஸ்பெஷல் இடத்தில் மட்டுமே படிக்கமுடியும்! #LetsLearn

இந்தக் கல்லூரிக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் இளநிலை வனவிலங்கு உயிரியல் (B.sc,Wildlife Biology) படிப்பு விளங்கி வருகிறது. அதனுடன் ராணுவத்தில் பணியாற்றும் வகையில் இளநிலை பாதுகாப்பியல் (B.A.Defence)ஆகிய படிப்புகள் விளங்குகின்றன. ஆரம்பத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இந்தப் பாடப்பிரிவை தேர்வுசெய்ய மாணவர்கள் தயக்கம் காட்டி வந்தனர். தற்போது காடுகள் மற்றும் காட்டுயிர் ஆய்வுகளில் ஆர்வமுள்ள பலர் இந்தப் பாடத்தை தேர்வு செய்கின்றனர்.

இது குறித்து வன விலங்கு உயிரியல் பேராசிரியர் ராமகிருஷ்ணன் கூறுகையில் ``Wildlife biology எனப்படும் வன உயிரியல் இளநிலை அறிவியல் பாடப்பிரிவு இந்தக் கல்லூரியில் மட்டுமே உள்ளது. 2005-ம் ஆண்டில் சுயநிதி முதுநிலை படிப்பு மட்டுமே இருந்தது. 2௦1௦-ம் ஆண்டு இந்தப் படிப்பும் அரசின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு பல்கலைக்கழக விதிமுறையின்படி இளநிலை பாடப்பிரிவு கொண்டுவரப்பட்டது. இளநிலை வனவிலங்கு உயிரியல் படிப்புக்கு 40 இடங்கள் உள்ளன. வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி போன்ற ஒரு மாவட்டத்தில் இந்தப் பிரிவு இருப்பதால் வகுப்பறை மட்டுமல்லாது களத்திலும் நேரடி அனுபவங்களைப் பெற மாணவர்களுக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்தப் பாடத்தைத் தேர்வுசெய்து படிப்பதன் மூலம் வன விலங்கு ஆய்வுகளில் நல்ல எதிர்காலம் உள்ளது. மேலும், வனத்துறை வேலைகளுக்கும் முன்னுரிமை உள்ளது. அதேபோன்று வனத்துறை அதிகாரி பணியிடங்களுக்கும் முன்னுரிமை அளிக்க அரசிடம் கேட்டுள்ளோம்.

Wildlife Biology - இந்தியாவிலேயே ஒரே ஒரு ஸ்பெஷல் இடத்தில் மட்டுமே படிக்கமுடியும்! #LetsLearn

இன்றைய சூழலில் காடுகள் பாதுகாப்பு மற்றும் காட்டுயிர்ப் பாதுகாப்பு என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. இந்தப் படிப்பை படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் தேடி வந்து படிக்கின்றனர். இதன் மூலம் ஏழை மாணவர்கள் அரசு உதவியில் இளநிலை முதல் முனைவர் பட்டம் வரை தடையின்றி கல்வி கற்கலாம். மேலும் இந்தப் படிப்பின் மூலம் மாணவர்கள் சூழலியலைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவதோடு வனத்துறையைப் பாதுகாக்கும் வாய்ப்பும் ஏற்படுத்திக்கொடுக்கப்படுகிறது. வன விலங்கு உயிரியல் படிப்பில் சேர 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் உயிரியல், வேதியியல் படித்திருக்க வேண்டும்"என்றார். 

இந்தப் படிப்புக்கு இன்னும் அதிக வேலை வாய்ப்பை அரசு உறுதி செய்தால், மாணவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு