Published:Updated:

''நமக்கு உண்மையாவும் நேர்மையாவும் இருக்கிறதுதான் ஆன்மிகம்!'' - பின்னணிப் பாடகர் ஶ்ரீநிவாஸ் #WhatSpiritualityMeansToMe

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பின்னணிப் பாடகர் ஶ்ரீநிவாஸ், ஏ.ஆர் ரகுமானின் அபார கண்டுபிடிப்பு. 90-களில் இவர் பாடிய பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மனதைக் கொள்ளைகொண்டன. `அலைபாயுதே' திரைப்படத்தில் இவர்பாடிய `என்றென்றும் புன்னகை' பாடல் இன்றும் பல இளைஞர்களின் காலர் ட்யூன். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் வெற்றிக்கொடி நாட்டிவரும் ஶ்ரீநிவாஸ் இதுவரை, பக்திப் பாடல்கள், சினிமா பாடல்கள் என 2000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் இவர் குரல் ஒலித்திருக்கிறது. இவர் இசையமைப்பாளரும்கூட. 

''நமக்கு உண்மையாவும் நேர்மையாவும் இருக்கிறதுதான் ஆன்மிகம்!''  - பின்னணிப் பாடகர் ஶ்ரீநிவாஸ் #WhatSpiritualityMeansToMe

ஸ்ரீநிவாஸின் ஆன்மிகம் வித்தியாசமானது. அவரே அதுபற்றி விவரிக்கிறார். 

``நான் பிறந்தது திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம். ஆனால், அதன்பிறகு எங்க குடும்பம் திருவனந்தபுரத்துக்கு ஷிஃப்டாயிடுச்சு. சின்ன வயசிலிருந்தே முறைப்படி சங்கீதம் கத்துக்கிட்டேன். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் அருகில்தான் எங்க வீடு. எங்க வீட்டைச்சுற்றி பதினைந்துக்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்துச்சு. நான் அடிக்கடி அம்மன், வராகசாமி, பத்மநாப சுவாமிக் கோயில்களுக்குப் போவேன். எங்களுடைய குலதெய்வக் கோயில் நாராயணபுரத்தில் இருக்கு. அங்கிருப்பதும் பெருமாள்தான். அது எங்க தாத்தா, பாட்டி அவங்களோட முன்னோர்கள் எல்லோரும் வழிபாடு செஞ்ச இடம். அங்கு போகும்போதெல்லாம் மற்ற எந்த இடத்திலும் கிடைக்காத ஒரு சிலிர்ப்பு உணர்வு மனசில் இப்பவும் ஏற்படும்.  

''நமக்கு உண்மையாவும் நேர்மையாவும் இருக்கிறதுதான் ஆன்மிகம்!''  - பின்னணிப் பாடகர் ஶ்ரீநிவாஸ் #WhatSpiritualityMeansToMe

நான் சின்ன வயசுல படிச்சதெல்லாம் கிறிஸ்துவப் பள்ளியிலதான். எந்த வித்தியாசமும் தெரியாது. ஸ்கூல்ல கிறிஸ்துவப் பாடல்கள் பாடுவேன். வீட்டுல கர்னாடிக் பாடல்கள், ஸ்லோகங்கள் எல்லாம் பாடுவோம். காலேஜுக்கு வந்ததுக்குப் பிறகு சில விஷயங்கள் கவனிச்சேன். கடவுள்ங்கிற பிம்பத்துக்குப் பல விதமான வழிபாட்டுமுறைகள் இருக்குனு அப்போ புரிய ஆரம்பிச்சிது. சிலபேர் சர்ச்சுக்குப் போவாங்க. சிலர் மசூதிக்குப்போவாங்க. நாம கோயிலுக்குப்போறோம். அவ்வளவுதான்.

கொஞ்ச காலத்துக்கு அப்புறம் நான் பம்பாய்க்குப் போய்ட்டேன், அங்கே என் வாழ்க்கை முழுவதையும் இசைதான் ஆக்கிரமிச்சது. இந்திப்பாடல்கள், குறிப்பா ஆர்.டி பர்மன், கிஷோர் குமார் பாடல்கள் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அப்பவும் சுத்தியிருக்கிற மனிதர்களை கவனிக்க ஆரம்பிச்சேன்.

விதவிதமான இடங்கள்... விதவிதமான மனிதர்கள்... விதவிதமான பாடல்கள்... ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுவிதமான வாழ்க்கைமுறைகள், வழிபாட்டுத் தெய்வங்கள்னு பிரமிப்பா இருந்தது.   
இப்போ எனக்கு அறுபது வயசாகப்போகுது. சாமியைக் கும்பிடும் முறை, கடவுளைப் பற்றி மனசிலிருந்த பிம்பம் எல்லாம் மாற ஆரம்பிச்சிடுச்சு. நமக்குள்ள இருக்கிற தெய்வத்தன்மையை உணராம கோயிலுக்கு மட்டும் போறதால எந்தப் பிரயோஜனமும் இல்லைன்னு புரியிது.

''நமக்கு உண்மையாவும் நேர்மையாவும் இருக்கிறதுதான் ஆன்மிகம்!''  - பின்னணிப் பாடகர் ஶ்ரீநிவாஸ் #WhatSpiritualityMeansToMe

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான தெய்வத்தை வணங்குறோம். சுவாமியைப் பார்த்து பயப்படுறோம். இல்லைனா, ' நீ எனக்கு இதைக் கொடு. உனக்கு நான் அதைத்தர்றேன்'னு வியாபாரம் பேசுறோம். தெய்வத்தை ஒவ்வொருத்தர் ஒவ்வொருவிதமா பார்க்கிறாங்க. அப்படின்னா `எது தெய்வம்'ங்கிற கேள்வியெல்லாம் வருது. நமக்கு நாம உண்மையாவும் நேர்மையாவும் இருக்கிறதுதான் முக்கியம். இத்தனை வருட அனுபவத்தில சக மனிதர்களை நேசிக்கிறதும் அவங்களை கௌரவமா நடத்துறதுலயும்தான் தெய்வத்தன்மைங்கிறதே இருக்குன்னு தோணுது. தெய்விகம்கிறது ஆலயங்கள்ல இருக்கிறது மட்டுமல்ல, நாம உண்மையாவும் நேர்மையாவும் இருந்தோம்னா அதுதான்னு தோணுது. மத்தவங்களுக்கு நாம் எந்த அளவு உதவிகரமா இருக்கிறோமோ அதில்தான் நம்ம தெய்வத்தன்மை அடங்கியிருக்கு" என்கிறார் பாடகர் ஶ்ரீநிவாஸ். 

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு