Published:Updated:

படிப்பு அரசியலுக்கு உதவுகிறதா... அரசியல்வாதிகளின் நச் பதில்கள்!

படிப்பு அரசியலுக்கு உதவுகிறதா... அரசியல்வாதிகளின் நச் பதில்கள்!
படிப்பு அரசியலுக்கு உதவுகிறதா... அரசியல்வாதிகளின் நச் பதில்கள்!

படிப்பு அரசியலுக்கு உதவுகிறதா... அரசியல்வாதிகளின் நச் பதில்கள்!

மது நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் இரு முக்கியமான சபைகள் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றம். ஆனால், இதற்குள் நுழையும் பிரதிநிதிகளுக்கான கல்வித்தகுதி என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. மக்களின் மனங்களை வென்று அதை வாக்குகளாக மாற்றிவிட்டால், ஒரு சாமானியனால்கூட இந்த சபைகளுக்குள் நுழைந்துவிட முடியும். அரசியலின் இரு முக்கிய மன்றங்களின் பிரதிநிதிகளில், பல படிப்புகளைப் படித்தவர்களும் இருக்கிறார்கள். `நீங்கள் படித்த படிப்பு உங்கள் அரசியல் வாழ்க்கைக்குப் பயன்படுகிறதா?' என்ற கேள்வியைச் சில அரசியல் பிரமுகர்களிடம் கேட்டோம்.

பழனிவேல் தியாகராஜன் (தி.மு.க) :  

படிப்பு அரசியலுக்கு உதவுகிறதா... அரசியல்வாதிகளின் நச் பதில்கள்!

என் அப்பா பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் சொன்னதால் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். திருச்சியில் உள்ள ஆர்.ஈ.சி பொறியியல் கல்லூரியில் (தற்போது எம்.ஐ.டி. கல்லூரி) 1987-ம் ஆண்டு இளநிலை பொறியியல் படித்தேன். அதற்குப் பிறகு, அமெரிக்காவில் அப்ளைடு மேத்ஸ், உளவியல், கவின் கலை ஆகிய நான்கு படிப்புகளைப் படித்தேன். ஒருவகையில் பார்த்தால் அரசியலில் ஈடுபடுவதற்கு எனக்கு எந்தப் படிப்பும் தேவையில்லை. இன்னொரு வகையில் பார்த்தால் நான் படித்த எதையும் தேவையில்லாதது என்று நினைத்ததில்லை. எல்லாப் படிப்பும் மனிதனை உயர்த்தும் என்று நம்புபவன் நான்.

சட்டப்பேரவை உறுப்பினரான நான், பொதுக் கணக்கு குழுவில் இருக்கிறேன். அதன் அடிப்படையில் அரசுத் திட்டங்களின் கோப்புகளையெல்லாம் பார்க்கும்போது, அதில் இருக்கும் விஷயங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தத் திட்டம் பயனளிக்குமா, அளிக்காதா என்பதைக் கண்டறிய முடிகிறது. பொதுக்கணக்கு குழுவில் கணக்குப் பார்க்கும்போது, எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் எந்த அம்சத்தைச் சேர்க்கலாம், சேர்க்கக் கூடாது, எதற்கு எவ்வளவு செலவாகும் என்று மதிப்பீடு செய்வதற்கு எல்லாம் மிகவும் உதவுகிறது.  

ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்) :

படிப்பு அரசியலுக்கு உதவுகிறதா... அரசியல்வாதிகளின் நச் பதில்கள்!

1980-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தேன். படிக்காமலும் அரசியலுக்கு வரமுடியும். ஆனால், அதன் சட்ட நடைமுறைகள் குறித்துப் புரிந்துகொள்ள அந்தப் படிப்பு மிகவும் உதவியாக இருந்தது. சட்டப்பேரவையிலோ, நாடாளுமன்றத்திலோ ஒரு மசோதா தாக்கல் செய்யப்படுகிறது என்றால், அதை யாரும் முழுதாகப் படிப்பது கிடையாது. அந்த விவகாரத்தில் அவர்கள் சார்ந்துள்ள கட்சி என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ, அதையே பின்பற்றுகிறார்கள். ஆனால், சட்டம் தெரிந்திருப்பதால் அதுபோன்ற மசோதாக்களை முழுவதுமாக படித்து, அதன் மீதான விமர்சனங்களை அளிக்க முடியும். அது சார்ந்து இயங்குவதற்கும் உதவும். ஒரு எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் சரி, எம்.பி.யாக இருந்தாலும் சரி அவர்களின் முதன்மையான பணி என்பது சட்டம் இயற்றுவதுதான். இரண்டுமே சட்டம் இயற்றும் சபைகள்தாம். எனவே, அதற்குள் போகும் பிரதிநிதிகளுக்குச் சட்டம் தொடர்பான ஒரு பின்னணி இருப்பது பயனுள்ளதாக இருக்கிறது.

ஜோதிமணி (காங்கிரஸ்) :

படிப்பு அரசியலுக்கு உதவுகிறதா... அரசியல்வாதிகளின் நச் பதில்கள்!

உடுமலைப்பேட்டையில் உள்ள ஜி.வி.ஜி கல்லூரியில் பி.எஸ்ஸி கணிதம் படித்தேன். பி.ஏ. தமிழ் இலக்கியம் படிக்க ஆசைப்பட்டேன். அந்தக் கல்லூரியில் தமிழ் இல்லை. கணக்குப்பாடம் என்றால் அதிகம் படிக்க வேண்டியது இருக்காது என்று பி.எஸ்ஸி கணிதம் தேர்ந்தெடுத்தேன். எனக்குக் கணிதம் பிடிக்காது. ஆனால் கணக்குகளையெல்லாம் வேகமாகப் போட்டுவிடுவேன். பட்டப்படிப்பு முடித்ததும் பஞ்சாயத்து தேர்தலில் நின்று வெற்றிபெற்றுவிட்டேன். அதனால் தொடர்ந்து படிக்கவில்லை. எனவே, தொலைதூரக் கல்வியில் எம்.ஏ, எம்.ஃபில் தமிழ் இலக்கியம் படித்தேன். தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இதில் தீர்த்துக்கொண்டேன்.

நமது கல்விமுறையின்படி, நாம் தேர்ந்தெடுக்கும் படிப்புகள் வாழ்க்கைக்கு உதவும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அரசியலுக்குத் தேவையான படிப்பை மக்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். கல்லூரித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். நான் அரசியலுக்கு வருவதற்கான பொறி அங்கிருந்து கிளம்பியதுதான். பள்ளிகளும், கல்லூரிகளும் வாழ்க்கையை, சமூகத்தை, நாட்டை, மக்களை, இனத்தை கலாசாரத்தைப் புரிவதற்கான இடங்கள். அதை வெறும் பாடத்திட்டமாக நாம் குறுக்கி விட்டோம்".

ஆர்.நடராஜ் (அ.தி.மு.க):

படிப்பு அரசியலுக்கு உதவுகிறதா... அரசியல்வாதிகளின் நச் பதில்கள்!

நான் ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியாற்றியதால் சட்டங்களை மக்களுக்காக எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் இருக்கிறது. சமூகநலத்துறைத் திட்டங்களைப் பொதுமக்களுக்குப் பயனுள்ள வகையில் அமல்படுத்தவும் உதவுகிறது. மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும் நிர்வாகத்தை மேம்படுத்தவும், சில அதிகாரிகளின் நிர்வாகச் சந்தேகங்களைத் தீர்க்கவும்கூட என் அனுபவம் பயன்படுகிறது. சில அரசியல்வாதிகள் `இத்தன வருஷமா அரசியல்ல இருக்குற எங்களுக்குத்தான் எல்லாம் தெரியும். இவருக்கு என்ன தெரியும்? வெறும் அதிகாரியா இருந்தவர்தானே'ன்னு சொன்னார்கள். ஆனால், ஒரு திட்டத்தை நேர்மையாகச் சட்டப்படி அராஜகம் செய்யாமல் செயல்படுத்துவது என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்தது என் பணி அனுபவம்தான்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு