Published:Updated:

'அதுக்குனு அப்படியேவா?' - ஷிகர் தவானை காப்பி அடித்து மாட்டிய வங்கதேச வீரர்!

'அதுக்குனு அப்படியேவா?' - ஷிகர் தவானை காப்பி அடித்து மாட்டிய வங்கதேச வீரர்!
'அதுக்குனு அப்படியேவா?' - ஷிகர் தவானை காப்பி அடித்து மாட்டிய வங்கதேச வீரர்!

சில நாள்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். யுவராஜ் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் ஒருபக்கம் உருக, கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இப்படி வாழ்த்து தெரிவிக்கும் விஷயத்தில்தான் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் வங்கதேச வீரர் சௌம்யா சர்க்கார். 

'அதுக்குனு அப்படியேவா?' - ஷிகர் தவானை காப்பி அடித்து மாட்டிய வங்கதேச வீரர்!

இவரது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் யுவராஜுடன் எடுத்த போட்டோ ஒன்றைப் பதிவிட்டு, "நான் பார்த்ததிலேயே நீங்கள்தான் சிறந்த இடதுகை பேட்ஸ்மேன், உங்கள் ஸ்டைல் மற்றும் பேட்டிங் முறையைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். உங்களது அடுத்த பயணத்துக்கு வாழ்த்துகள்" என்றார் சர்க்கார். இது பிரச்னையில்லை, இந்தப் பதிவு வரிக்கு வரி ஷிகர் தவான் பதிவிட்ட பதிவைப் போன்றே இருக்கிறது. இப்படி காப்பி அடித்து நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் இவர். இந்தப் பதிவு சரியாக ஷிகர் தவான் பதிவிட்ட 6 மணிநேரங்களுக்குப் பிறகு பதிவிடப்பட்டது.

'அதுக்குனு அப்படியேவா?' - ஷிகர் தவானை காப்பி அடித்து மாட்டிய வங்கதேச வீரர்!

ஜூன் 10 நடந்த இதை இன்று சில நெட்டிசன்கள் கண்டுபிடிக்க வைரலாகி வருகிறது. 'காப்பி அடிக்கலாம், அதுக்குனு அப்படியேவா?', 'ரெண்டு பேருக்கும் ஒரே அட்மினா இருக்குமோ' என்று பலரும் ஜாலியாகக் கேட்டுவருகின்றனர்.   

Vikatan