Published:Updated:

20 மணிநேர டிரைவிங்... 15 டன்... 8 மணி நேர ஏக்கம்! லாரி டிரைவர் - ஜோதிமணியின் சவால் வாழ்க்கை

கு.ஆனந்தராஜ்

"போக, வர எப்படியும் 10 - 11 நாள்களாகிடும். இந்த இடைப்பட்ட நாள்களில், தினமும் 20 மணிநேரம் லாரி ஓட்டணும். நெடுஞ்சாலை ஓரத்துல நிறைய பார்க்கிங் பகுதிகள் இருக்கும். அதில் 3 - 4 மணிநேர கோழித் தூக்கம் தூங்கிட்டு மீண்டும் லாரியை ஓட்ட ஆரம்பிச்சுடுவேன்."

20 மணிநேர டிரைவிங்... 15 டன்... 8 மணி நேர ஏக்கம்! லாரி டிரைவர் - ஜோதிமணியின் சவால் வாழ்க்கை
20 மணிநேர டிரைவிங்... 15 டன்... 8 மணி நேர ஏக்கம்! லாரி டிரைவர் - ஜோதிமணியின் சவால் வாழ்க்கை
20 மணிநேர டிரைவிங்... 15 டன்... 8 மணி நேர ஏக்கம்! லாரி டிரைவர் - ஜோதிமணியின் சவால் வாழ்க்கை


 

ரியான தூக்கம் கிடையாது. ருசியான உணவு கிடையாது. ஹாஸ்டலில் படிக்கும் பிள்ளைகளின் பிரிவை மனதில் சுமக்கும் ஜோதிமணி, பல டன் எடைகொண்ட ஜவுளி சரக்கை லாரியில் சுமந்துகொண்டு பயணிப்பவர். சவாலான லாரி டிரைவர் வேலையை, அநாயாசமாகவும் ஆத்மார்த்தமாகவும் நேசித்துச் செய்யும் பெண். 12 டயர் கொண்ட லாரியின் டிரைவராக, மாதந்தோறும் பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கிறார். சவாலான பணித்திறனுக்காக, தமிழக அரசின் `கல்பனா சாவ்லா' விருதை 2015-ம் ஆண்டு பெற்றிருக்கிறார், ஜோதிமணி. இவர், ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர்.

20 மணிநேர டிரைவிங்... 15 டன்... 8 மணி நேர ஏக்கம்! லாரி டிரைவர் - ஜோதிமணியின் சவால் வாழ்க்கை

``என் கணவர் கெளதமன் லாரி டிரைவர். அவர்கிட்டதான் நானும் லாரி ஓட்டக்கத்துகிட்டேன். பத்து வருஷத்துக்கு முன்பு எங்ககிட்ட சொந்தமா ரெண்டு லாரி இருந்துச்சு. கணவர் ஒரு லாரியை ஓட்ட, இன்னொரு லாரிக்குச் சரியான டிரைவர் கிடைக்கலை. அதனால இக்கட்டான குடும்பச் சூழலுக்காக நானும் டிரைவராக லோடுக்குப் போக ஆரம்பிச்சேன். இப்படியே காலங்கள் ஓடிச்சு. 2016-ம் ஆண்டு கணவருக்கு உடல்நிலை சரியில்லாம போக, பிறகு நான் மட்டும் லாரியை ஓட்டினேன். என் மாமியாரின் மரணம், பொருளாதார நெருக்கடினு நிறைய சிக்கல்கள் உண்டாச்சு. எனவே, எங்க ரெண்டு லாரியையும் வித்துட்டோம். பிறகு, எங்க ஊர்லயே விவசாயம் பார்த்தோம். அதுவும் சரியா வரலை" என்கிற ஜோதிமணியும் அவர் கணவரும் மீண்டும் லாரி டிரைவர் பணிக்குத் திரும்பியிருக்கிறார்கள். 

``கனரக வாகனமான லாரியை அநாயாசமாக ஓட்டுவது எப்படி?" - நம் கேள்வியை முடிப்பதற்குள் சிரிக்கிறார் ஜோதிமணி. ``எனக்குச் சரியான பதில் சொல்லத் தெரியலை. எனக்கு ஸ்கூட்டி ஓட்டுறதுக்கும், லாரி ஓட்டுறதுக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் தெரியலை. லாரி ஓட்டுறதுல எந்தப் பயமும் இல்லை; பிரமிப்பும் இல்லை. இந்த வேலை ரொம்பச் சவாலானதுதான். ஆனா, குடும்பத்தை நடத்த இந்தத் தொழிலை விட்டாலும் வேறு வழியில்லை. எனவே, எதையும் நினைச்சு குழப்பிக்காம என் வேலையில மட்டும் கவனம் செலுத்தறேன்.  

20 மணிநேர டிரைவிங்... 15 டன்... 8 மணி நேர ஏக்கம்! லாரி டிரைவர் - ஜோதிமணியின் சவால் வாழ்க்கை

ஈரோட்டுல இரும்பு மற்றும் ஜவுளி சரக்குகளை ஏத்திக்கிட்டு கிளம்புவேன். அதன் எடை சராசரியா 15 டன் இருக்கும். போய் சேரவேண்டிய இலக்கு, பெரும்பாலும் ராஜஸ்தான் அல்லது குஜராத் மாநிலமா இருக்கும். கொண்டுபோன சரக்குகளை இறக்கிட்டு, மீண்டும் வேறு சரக்குகளை ஏத்திக்கிட்டு ஈரோடு வரணும். போக, வர எப்படியும் 10 - 11 நாள்களாகிடும். இந்த இடைப்பட்ட நாள்களில், தினமும் 20 மணிநேரம் லாரி ஓட்டணும். நெடுஞ்சாலை ஓரத்துல நிறைய பார்க்கிங் பகுதிகள் இருக்கும். அதில் 3 - 4  மணிநேர கோழித் தூக்கம் தூங்கிட்டு மீண்டும் லாரியை ஓட்ட ஆரம்பிச்சுடுவேன். லாரியில இருந்தபடியே நானே சமைச்சுக்குவேன். சமைக்கிறது, சாப்பிடுறது தவிர, வேறெதுக்கும் தேவையில்லாம வண்டியை நிறுத்த மாட்டேன். இதனால உடல் சோர்வு அதிகமா இருக்கும். ஆனா, என்ன பண்றது.... தினமும் எட்டு மணிநேரம் தூங்கினா, ட்ரிப்பை முடிக்கக் கூடுதலா ரெண்டு நாள் ஆகிடுமே. நாள்கள் தாமதமானால், வாடகை பணத்துல பிடித்தம் செய்திடுவாங்க." - தன் தொழிலிலுள்ள சவால்களை விவரிக்கும் ஜோதிமணி, எட்டாம் வகுப்பு வரை படித்தவர். 

20 மணிநேர டிரைவிங்... 15 டன்... 8 மணி நேர ஏக்கம்! லாரி டிரைவர் - ஜோதிமணியின் சவால் வாழ்க்கை

இந்தச் சவாலான பணியில், ஜோதிமணிக்கு கிடைக்கும் வருமானம் பற்றிக் கேட்டோம். சிரிப்புடன் உரையாடலைத் தொடர்பவர், ``சராசரியா 11 நாள்கள் கொண்ட ஒரு ட்ரிப்புக்கு பத்தாயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். மாதத்துக்கு ரெண்டு ட்ரிப்தான் போக முடியும். எனவே, மாதம்தோறும் கிடைக்கிற 20,000 ரூபாய் வருமானத்துலதான் குடும்பம் நடத்தணும், பிள்ளைகளைப் படிக்க வைக்கணும், கடன் அடைக்கணும். இதே வருமானம்தான் என் கணவருக்கும். அவரும் என்னைப்போல வாடகைக்குத்தான் லாரி டிரைவரா வேலை செய்றார். பெரும்பாலும் நாங்க தனித்தனியாவும், சில நேரங்களிலும் சேர்ந்தும் டிரைவர் வேலைக்குப் போவோம். எனவே, எங்க இரண்டு குழந்தைகளையும் பள்ளி ஹாஸ்டலில் சேர்த்துட்டோம். அவங்க பிரிவுதான் எனக்குப் பெரிய வலியைக் கொடுக்குது.

20 மணிநேர டிரைவிங்... 15 டன்... 8 மணி நேர ஏக்கம்! லாரி டிரைவர் - ஜோதிமணியின் சவால் வாழ்க்கை

இதுக்கிடையே எங்க ஊர்ல பள்ளி வேன் டிரைவர் வேலைக்கு ஒரு வருஷம் போனேன். அப்போ, அந்த வேலையில மாதத்துக்கு எட்டாயிரம் ரூபாய்தான் சம்பளம் கிடைச்சுது. லீவும் கிடையாது. எனவே, இந்த லாரி டிரைவர் வேலையே பரவாயில்லை. வடமாநிலங்களுக்கு ரெகுலரா லாரி ஓட்டுறதால, அந்த மக்களுடன் பழகி இந்தி கத்துகிட்டேன். சரக்கு லாரி ஓட்டுவதில் எனக்குப் பல வருட அனுபவமுண்டு. என்னைப்போல ஆயிரக்கணக்கான ஆண்கள் லாரி டிரைவர் வேலைக்கு வருவாங்க. அதில் பெண்கள் யாரையும் இதுவரை நான் பார்த்ததில்லை. என்னைப் பொறுத்தவரை ஆண்கள் வேலை, பெண்கள் வேலைனு எதுவுமில்லைங்க. மனசுல தைரியமும், நம்பிக்கையும் இருந்தால், யார் எந்த வேலையையும் செய்யலாம்" என்று புன்னகையுடன் தம்ஸ் அப் காட்டுகிறார், ஜோதிமணி.

Vikatan