Published:Updated:

பூகம்பத்திலும் விழாத கட்டடங்கள் கட்ட இப்படி ஒரு படிப்பு இருக்கிறது! #LetsLearn

பூகம்பத்திலும் விழாத கட்டடங்கள் கட்ட இப்படி ஒரு படிப்பு இருக்கிறது! #LetsLearn
பூகம்பத்திலும் விழாத கட்டடங்கள் கட்ட இப்படி ஒரு படிப்பு இருக்கிறது! #LetsLearn

பூகம்பத்திலும் விழாத கட்டடங்கள் கட்ட இப்படி ஒரு படிப்பு இருக்கிறது! #LetsLearn

சிவில் இன்ஜினீயரிங் துறையில் படிக்கும் பலரும் அதற்குப் பிறகு Architect, Geo-technical, Structural Engineering போன்ற படிப்புகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு கட்டடத்தை அழகாகவும் வலுவாகவும் கட்டுவது முக்கியம்தான். ஆனால், அதைவிட முக்கியமானது அவ்வப்போது ஏற்படும் சிறிய அதிர்வுகள், பூகம்பம் போன்ற பெரிய அதிர்வுகளையும் தாக்குப்பிடிக்கும் வகையில் அந்தக் கட்டடத்தை வடிவமைப்பது. மக்கள்தொகை பெருக்கத்தால் நகரங்கள் அடர்த்தியாகிவிட்டன. இதனால் கட்டடங்களின் உயரங்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்தக் கட்டடங்களுக்கு `சைஸ்மிக்' (Seismic) என்று அழைக்கப்படும் நில அதிர்வுகள் மட்டும் ஆபத்தானவை கிடையாது. நம்மால் உணர முடியாத அதிர்வுகள்கூட ஒரு கட்டடத்தை சல்லிச்சல்லியாக நொறுக்கிவிடும். இதற்கு மிகச் சரியான உதாரணம் சென்னை மௌலிவாக்கம் கட்டட விபத்து. 

பூகம்பத்திலும் விழாத கட்டடங்கள் கட்ட இப்படி ஒரு படிப்பு இருக்கிறது! #LetsLearn

ஆர்க்கிடெக்ட் கொடுக்கும் கட்டட வடிவமைப்பைக்கொண்டு எப்படி உறுதியான கட்டடத்தைக் கட்டுவது என்று திட்டமிடுவது ஸ்ட்ரக்சுரல் இன்ஜினீயர் செய்யும் வேலை. இந்தியாவில் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினீயருக்கான பாடத்திட்டத்தில் நிலஅதிர்வுகள், நிலநடுக்கம் ஆகியவற்றை நிர்வகிப்பது தொடர்பான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இந்தியாவில் பெரும்பாலான பகுதிகள் Zone II மற்றும் Zone III வரையறைக்குள் வருவதால் நிலநடுக்கம், நில அதிர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதனால் அது சார்ந்த படிப்புகளுக்கும் முக்கியத்துவம் அதிகமில்லை. பெரிய கட்டுமான நிறுவனங்களில் மட்டுமே சைஸ்மிக் பொறியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கான தேவை என்பது அதிகரித்துவருகிறது.

பூகம்பத்திலும் விழாத கட்டடங்கள் கட்ட இப்படி ஒரு படிப்பு இருக்கிறது! #LetsLearn

இந்தியாவில் சிவில் இன்ஜினீயரிங் படிப்பை முடித்தவர்கள் வெளிநாட்டில் வேலைபார்க்க வேண்டும் என்றால், அவர்களுக்கு சைஸ்மிக் பற்றிய புரிதல் இருக்க வேண்டியது அவசியம். புர்ஜ், தி ஷார்ட், இம்பீரியல் டவர் போன்ற பெரிய `ஸ்கைஸ்கிரேப்பர்' கட்டடங்களைக் கட்டும்போது அதற்கு ஸ்ட்ரக்சுரல் இன்ஜினீயர் இல்லாமல் செஸ்மிக் இன்ஜினீயர்களையே தேர்வுசெய்கிறார்கள். இந்தியாவைவிட வெளிநாடுகளில் இந்தப் படிப்புக்கு அதிக வரவேற்பு உள்ளது. 

தமிழ்நாட்டில் சிவில் இன்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு தற்போது நியூசிலாந்து நாட்டில் சைஸ்மிக் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினீயராக இருக்கும் திவ்யா அலோஷியஸை தொடர்புகொண்டு, இந்தத் துறையின் முக்கியத்துவம் மற்றும் இதற்கான வேலைவாய்ப்புகள் பற்றிக் கேட்டோம். 

பூகம்பத்திலும் விழாத கட்டடங்கள் கட்ட இப்படி ஒரு படிப்பு இருக்கிறது! #LetsLearn

``சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு, ஒரு நிறுவனத்தில் வேலைசெய்துகொண்டிருந்தபோது அங்கு ஒரு கட்டடத்தைத் தகர்க்க வேண்டும் என்று கேட்டிருந்தனர். அந்தக் கட்டடத்தைத் தகர்க்கும்போது அருகில் இருக்கும் பல வீடுகள், அலுவலகங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என உணர்ந்தோம். அதனால் கட்டடத்தை அழிக்க முடியாது. வேண்டுமென்றால் வலுவாக்கலாம் என்று சொல்லியிருந்தோம். அந்தக் கட்டடத்தை வலுவாக்க (Retrofit) சைஸ்மிக் பற்றிய விவரங்களைப் படித்துத் தெரிந்துகொண்டேன். ஸ்ட்ரக்சுரல் இன்ஜினீயரிங்கைவிட அதிக சுவாரஸ்யமான பாடம். அதற்குப் பிறகு, நியூசிலாந்துக்கு வந்து சைஸ்மிக் பொறியியல் படிப்பை முடித்தேன்'' என்று உற்சாகமாகப் பேசினார்.

''ஒரு கட்டடத்தை வலுவாக்க வேண்டுமென்றால் எந்தெந்த தூண்கள் எவ்வளவு எடையைத் தாங்கும் என்பதை மட்டும் கண்டறிந்தால் போதாது. எந்தத் திசையில் இருந்து, எப்படி, எப்போது வரும் என்றே தெரியாத நிலஅதிர்வுகளையும் அந்தக் கட்டடம் தாங்கியாக வேண்டும். அதற்கு ஒரு கட்டடத்தை வடிவமைக்க டிசைன் செய்யும்போதே பூகம்ப சமயத்தில் அந்தக் கட்டடம் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று பொறியாளர்கள் முடிவு செய்ய வேண்டும். இதைக் கற்றுக்கொள்ள சைஸ்மிக் பொறியியல் படிப்பது அவசியம்.

இந்தப் படிப்பை இந்தியாவில் படிப்பதைவிட வெளிநாடுகளில் படிப்பதே நல்லது. உலகளவில் கலிபோர்னியாவில் உள்ள பெர்க்லி பல்கலைக்கழகம், இத்தாலியில் உள்ள ரோஸ் ஸ்கூல், டோக்கியோ பல்கலைக்கழகம், நியூசிலாந்தில் உள்ள கேன்டர்பெரி பல்கலைக்கழகம் போன்ற இடங்கள் இந்தப் படிப்புக்கு பிரபலமானவை. 

பூகம்பத்திலும் விழாத கட்டடங்கள் கட்ட இப்படி ஒரு படிப்பு இருக்கிறது! #LetsLearn

நியூசிலாந்தில் சைஸ்மிக் பற்றித் தெரியாத ஒரு பொறியாளரைக்கூட பார்க்க முடியாது. இந்தப் படிப்புக்கு பசிபிக் கடலையொட்டிய 'Ring of Fire' என்று சொல்லப்படும் அதிக நிலநடுக்கம் வரும் நாடுகளில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. அதைத் தவிர்த்து இரான், இராக், பாகிஸ்தான், துபாய் போன்ற நாடுகளிலும் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் இந்தப் படிப்புக்கு அதிக வேலைவாய்ப்புகளும் சம்பளமும் வழங்கப்படுகிறது. இந்தியாவிலும் இந்தப் படிப்புக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இது பெண்களுக்கு மிகவும் ஏற்றப் படிப்பு'' என்கிறார் திவ்யா.

பூகம்பத்திலும் விழாத கட்டடங்கள் கட்ட இப்படி ஒரு படிப்பு இருக்கிறது! #LetsLearn

உயர்கல்வியில் இப்போது உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பது STEM. அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம். இதைத்தான் STEM என்று சுருக்கிச் சொல்கிறார்கள். STEM படிப்பை ஊக்குவிக்கும் அமெரிக்காகூட 'It is an emergency situation' என்று டைனோசர் பட டயலாக்குகளை வீசுகிறது. இதற்குக் காரணம் அமெரிக்காவிலேயே அறிவியல்-தொழில்நுட்ப ரீதியிலான படிப்புகளின் மேல் மோகம் குறைந்துவிட்டதாம். இதே நிலைதான் இந்தியாவிலும். தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் 40 சதவிகிதம் பெண்கள் படிக்கிறார்கள். ஆனால், வேலை என்று வரும்போது பெண்கள் அதிகளவில் நிர்வாகம், அக்கவுன்ட்ஸ், சாஃப்ட்வேர் போன்ற துறைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். சிவில் இன்ஜினீயரிங் படிக்கும் பெண்கள்கூட ஐ.டி துறையில்தான் வேலை பார்க்கிறார்கள். இந்தத் தலைமுறையில் பெண்கள் தொழில்நுட்பம், பொறியியல் சார்ந்த படிப்புகள் அதிகம் ஈடுபட வேண்டும். அதற்கு இதுபோன்ற படிப்புகள் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு