Published:Updated:

"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி..." - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய்  #FitnessTips

"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி..." - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய்  #FitnessTips

தியானம், யோகாவெல்லாம் செய்யப் பழகலே. நம்ம வாழ்க்கையும் சிந்தனையுமே தியானம்தான். நல்லது நினைச்சா நல்லது நடக்கும். மனச எப்பவும் சுத்தமா வச்சுக்கிட்டாலே போதும்.

ஜான் விஜய் வந்தாலே ரசிகர்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. நகைச்சுவையும், குரூரமும் கலந்த அவரது நடிப்பும் வசன உச்சரிப்பும் தனித்துவமானவை. தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் வில்லனாகவும், காமெடியனாகவும் அசத்திக்கொண்டிருக்கிறார். 

"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி..." - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய்  #FitnessTips

ஜான் விஜய்யின் முகத்தில் எப்போதும் உற்சாகம் படிந்திருக்கிறது. ஒரு காலைப்பொழுதில் அவரைச் சந்தித்து ஃபிட்னஸ் ரகசியங்களைக் கேட்டோம். 

``சின்ன வயசுலருந்தே, வாரத்துல மூணுநாள், கருவேப்பிலை ஜூஸ், புதினா ஜூஸ், வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கிற பழக்கமுண்டு. அம்மா ஆரம்பிச்சு வச்சது, இப்போவரை ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன். ஸ்பெஷல் டயட் எல்லாம் ஒண்ணும் இல்ல. மூணு வேளையும் நல்லா சாப்பிடுவேன். ஜிம்முக்குப் போகலாம்னு பணம் கட்டிட்டு ரெண்டு நாள் போவேன்... அவ்வளவுதான். அதுக்கப்புறம் அந்தப் பக்கம் தலைவச்சுக்கூடப் படுக்கிறதில்லை. 

தினமும் தூங்கி எழுந்ததும் வீட்டுலயே ஸ்கிப்பிங் பண்ணுவேன், சைக்கிள் ஓட்டுவேன். புஷ்-அப்ஸ் எடுப்பேன். காலையில பண்ண முடியலைன்னா ஈவ்னிங் பண்ணுவேன். வாக்கிங்னு அலாரம் வச்சு நடக்குற பழக்கமெல்லாம் இல்லை. எங்க வெளியில போனாலும் நடந்துதான் போவேன். மனைவி, பசங்க கூட ஷாப்பிங் போறதுனா கூட நடந்துதான் கூட்டிட்டுப் போவேன். காலையில எழுந்து பூங்காவுக்குப் போய் நடக்குறதுல எனக்கு நம்பிக்கையில்லை. நடக்குறதை வாழ்வியல் நடைமுறையா மாத்திக்கிட்டேன். 

நிறைய சுடுதண்ணி குடிப்பேன். அது வயிறைச் சுத்தமா வச்சுக்க உதவும். வயிறு சுத்தமா இருந்தா முகம் பொலிவா இருக்கும். தவிர நிறைய பழங்கள் சாப்பிடுவேன். குறிப்பா, பப்பாளி... ரத்தத்தை சுத்தமா வச்சுக்க அது உதவும். அதோட அன்னாசி, ஆப்பிள் தினசரி சாப்பிடுவேன்.

"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி..." - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய்  #FitnessTips

தினமும் காலையில வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ் குடிப்பேன். ஏ.பி.சி ஜூஸ்னா, ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ். அது வயிற நல்லா சுத்தம் பண்ணும். தோல் பளபளப்பா இருக்க உதவும். வயிறு சுத்தமா இருந்தாலே எந்த நோயும் வராது. உடம்பும் ஆரோக்கியமா இருக்கும். அப்பப்போ ப்ரூட் மிக்ஸரும் குடிப்பேன். 

கருவேப்பிலை, புதினாவுல ஜூஸ் போட்டுக் குடிப்பேன். இல்லைன்னா துவையல் செஞ்சு சாப்டுவேன். வாரத்துக்கு ரெண்டு முறை இஞ்சித் தண்ணி குடிப்பேன். வேப்பங்கொழுந்த சர்க்கரையில தொட்டு சாப்பிடுவேன். இதெல்லாம் எங்க அம்மா எனக்குக் கத்துக் கொடுத்த பழக்கங்கள். இப்பவும் அத நான் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். இளநீர் நிறையா குடிப்பேன். இளநீரோட, நுங்கு, தேன் கலந்தும் சாப்பிடுறதுண்டு. உடலைக் குளிர்ச்சியா வச்சுக்க அது உதவும். மாம்பழம், பலாப்பழம் போல சீஷனலா கிடைக்கிறத எல்லாம் விரும்பிச் சாப்பிடுவேன். முக்கியமா, சாப்பாட்டுல கீரை நிறைய சேர்த்துக்குவேன். கண்ணுக்கு ரொம்ப நல்லது.

எப்போதும் உற்சாகமா இருக்க இன்னொரு காரணம், நான் இதுவரைக்கும் பகல்ல தூங்கினதே கிடையாது. நைட் மட்டும்தான் தூக்கம். எவ்வளவு டயர்டா இருந்தாலும், மதியநேரத்துல தூங்கமாட்டேன். 

"வெறும் வயித்துல ஏ.பி.சி ஜூஸ், நிறைய சுடுதண்ணி..." - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் ஜான் விஜய்  #FitnessTips

தியானம், யோகாவெல்லாம் செய்யப் பழகலே. நம்ம வாழ்க்கையும் சிந்தனையுமே தியானம்தான். நல்லது நினைச்சா நல்லது நடக்கும். மனச எப்பவும் சுத்தமா வச்சுக்கிட்டாலே போதும். சின்ன வயசுல இருந்து கத்துக்கிட்டதை, ஒழுங்கா ஃபாலோ பண்ணிணாவே போதும். எந்த உடல் பிரச்னையும் இல்லாம ஆரோக்கியமா இருக்கலாம்...'' என்கிறார் நடிகர் ஜான் விஜய்.