Published:Updated:

ஹைதராபாத் டான்ஸரின் ஆடையை அவிழ்த்து துன்புறுத்தல்; 4 பெண்கள் கைது 

வெங்கட சேது.சி
ஹைதராபாத் டான்ஸரின் ஆடையை அவிழ்த்து துன்புறுத்தல்; 4 பெண்கள் கைது 
ஹைதராபாத் டான்ஸரின் ஆடையை அவிழ்த்து துன்புறுத்தல்; 4 பெண்கள் கைது 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பார் நடன அழகியைப் பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தியதுடன், அவரை அடித்தும் ஆடையை  அவிழ்த்தும் துன்புறுத்தியதாக நான்கு பெண்களைப் போலீஸார் கைது செய்தனர். மற்றொருவரைத் தேடி வருகிறார்கள்.

ஹைதராபாத் அருகேயுள்ள பேகம்பேட்டை பகுதியில் உள்ள பார் ஒன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன் டான்ஸராகச் சேர்ந்த பெண்ணுக்குத்தான் இந்தக் கொடுமை நடந்துள்ளது. அந்த பாரில் சேர்ந்த சில நாள்களிலேயே அங்கு வரும் வாடிக்கையாளர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளுமாறு, சக டான்ஸர்கள் நான்குபேரும் மற்றொருவரும் அந்தப் பெண்ணை வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், அதற்கு அந்தப் பெண் மறுத்துள்ளார்.

ஹைதராபாத் டான்ஸரின் ஆடையை அவிழ்த்து துன்புறுத்தல்; 4 பெண்கள் கைது 

இதனால் அந்தப் பெண்ணுக்கு அவர்கள் தொடர்ந்து துன்புறுத்தல்களை அளித்து வந்துள்ளனர். அந்தப் பெண்ணின் ஆடைகளைக் களைந்தும் அடித்தும் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளதாக, அந்தப் பெண் போலீஸாரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நான்கு பெண்களையும் ஒரு ஆணையும் பேகம்பேட்டை போலீஸார், வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில், நான்கு பெண்களும் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டனர். மற்றொருவரைத் தொடர்ந்து தேடி வருகிறார்கள். 

கைதுசெய்யப்பட்ட நான்கு பெண்களும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட பகுதி அடங்கியுள்ள பஞ்சகுட்டா சர்க்கிள் இன்ஸ்பெக்டர், இந்தச் சம்பவம் பற்றி அறிக்கை அளிக்குமாறு தெலங்கானா காவல்துறை தலைமை இயக்குநர் மகேந்தர் ரெட்டி கோரியுள்ளார்.

Vikatan