Election bannerElection banner
Published:Updated:

``எனக்கு 20 வயசுதான் ஆகுது... அதுக்குள்ள அவசரமா ஓடணுமா?!" - `மிஸ் இந்தியா' புகழ் அனுக்ரீத்தி வாஸ்

``எனக்கு 20 வயசுதான் ஆகுது... அதுக்குள்ள அவசரமா ஓடணுமா?!" - `மிஸ் இந்தியா' புகழ் அனுக்ரீத்தி வாஸ்
``எனக்கு 20 வயசுதான் ஆகுது... அதுக்குள்ள அவசரமா ஓடணுமா?!" - `மிஸ் இந்தியா' புகழ் அனுக்ரீத்தி வாஸ்

எனக்கு 20 வயசுதான் ஆகுது. இப்பவே நான் ஓரளவுக்குச் சாதிச்சுட்டேன். ஆனா, நான் சொல்ற விளக்கம் என்னன்னா....

``கடந்த ஓராண்டா என்னிடம் இருந்த `மிஸ் இந்தியா' பட்டம் இப்போது இன்னொருத்தர் வசம் போயிடுச்சு. இதுதாங்க வாழ்க்கை! `அடுத்து என்ன பண்ணப்போறீங்க?' - இந்தக் கேள்வியை பலரும் என்கிட்ட முன்வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் பொறுமையுடன், எனக்காக வாழவே விரும்புறேன். அடுத்து சினிமாவில் களமிறங்கப்போறேன்." - நிதானமாகப் பேசுகிறார், கடந்த ஆண்டின் `மிஸ் இந்தியா' வெற்றியாளர் அனுக்ரீத்தி வாஸ். 

``எனக்கு 20 வயசுதான் ஆகுது... அதுக்குள்ள அவசரமா ஓடணுமா?!" - `மிஸ் இந்தியா' புகழ் அனுக்ரீத்தி வாஸ்

இந்த ஆண்டின் `மிஸ் இந்தியா' வெற்றியாளருக்கு மகுடத்தைச் சூட்டியவர், தன் அடுத்தகட்ட பயணத்துக்குத் தயாராகிவருகிறார். மும்பையிலிருக்கும் அனுக்ரீத்தியுடன் உரையாடினோம்.

``திருச்சிதான் என் பூர்வீகம். சென்னையிலதான் காலேஜ் படிச்சுகிட்டிருந்தேன். என் தோழி ஒருத்தி `மிஸ் இந்தியா' நிகழ்ச்சியில கலந்துக்க முயற்சி செய்தா. `நீயும் சும்மா முயற்சி பண்ணு'னு அவ சொல்லவே, நாங்க இருவரும் `மிஸ் இந்தியா' நிகழ்ச்சியில போட்டியாளர்களா கலந்துகிட்டோம். அதற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாம கடந்த ஆண்டு மும்பை வந்தேன். ரொம்பவே இயல்பான மனநிலையிலதான் அந்தப் போட்டியில பங்கெடுத்தேன். ஒவ்வொரு சுற்றிலும் என் திறமையை வெளிப்படுத்தினேன்.

``எனக்கு 20 வயசுதான் ஆகுது... அதுக்குள்ள அவசரமா ஓடணுமா?!" - `மிஸ் இந்தியா' புகழ் அனுக்ரீத்தி வாஸ்

இறுதிப்போட்டியில வெற்றியாளரை அறிவிக்கிற கடைசித் தருணம். `மிஸ் இந்தியா 2018 டைட்டில் வின்னர் - அனுக்ரீத்தி வாஸ்'னு அறிவிச்சப்போதான் எனக்குள் படபடப்பும், இதயத்துடிப்பும் அதிகமாச்சு. ஏன்னா... அந்த வெற்றி நான் எதிர்பாராதது. அந்தப் போட்டியில கலந்துக்க பலரும் பல வருடமா உழைக்கிறதும், பயிற்சி எடுத்துக்கொள்வதையெல்லாம் கேள்விப்பட்டு ஆச்சர்யப்பட்டேன். நான் எந்தச் சிறப்பு முயற்சியும் மேற்கொள்ளவேயில்லை. அதனால, நான் வெற்றியாளர் என்பதை உணரவே ஒருவாரத்துக்கும் மேலாச்சு" என்கிற அனுக்ரீத்தி, பிறகு `மிஸ் வேர்ல்டு' நிகழ்ச்சிக்குத் தயாரானார்.  

``எனக்கு 20 வயசுதான் ஆகுது... அதுக்குள்ள அவசரமா ஓடணுமா?!" - `மிஸ் இந்தியா' புகழ் அனுக்ரீத்தி வாஸ்

``தொடர்ந்து என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். பலரும் `மிஸ் வேர்ல்டு' போட்டிக்குத் தயாராகச் சொன்னாங்க. எனக்கும் அது நல்ல முயற்சினு தோணுச்சு. எனவே, அந்தப் போட்டிக்காக பல மாதங்களைச் செலவிட்டேன். இம்முறையும் பெரிசா இலக்கு வெச்சுக்கலை. அதனால, அந்தப் போட்டியில் எனக்கு வெற்றி கிடைக்காதபோதும் வருத்தப்படலை. பிறகு, கடந்த டிசம்பர் மாதம் மும்பைக்குத் திரும்பினேன். இந்த வருட `மிஸ் இந்தியா' நிகழ்ச்சி இரு தினங்களுக்கு முன்பு நடந்துசு. அதில், இந்த வருட `மிஸ் இந்தியா' வெற்றியாளரா தேர்வு செய்யப்பட்ட சுமன் ராவ்வுக்கு நான் கிரீடத்தை மாட்டிவிட்டேன். 

கடந்த ஒருவருட `மிஸ் இந்தியா' பயணம் முடிவுக்கு வந்ததை நினைச்சு நெகிழ்ச்சியானேன். அதனால ரொம்பவே உணர்வுபூர்வமா இன்ஸ்டாகிராம்ல ஒரு பதிவை வெளியிட்டேன். எதுவுமே நிரந்தரமில்லை. அடுத்தடுத்த நகர்வை நோக்கிப் போயிட்டே இருக்கணும். சினிமாவில் ஹீரோயின் ஆகணும் என்பதுதான் என் நீண்டகால இலக்கு. அதன்படி தமிழில் ஒரு படத்தில் ஹீரோயினா தேர்வாகியிருக்கேன். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்துவேன். இப்போவரை மும்பையிலதான் இருக்கேன். காலேஜ் படிப்பைத் தொடர்வது பத்தி இன்னும் முடிவெடுக்கலை. `மிஸ் இந்தியா' நிகழ்ச்சியில கலந்துக்கும் முன்பும், இப்போதும் குழந்தைகளுக்கான என்.ஜி.ஓ ஒன்றில் என்னாலான உதவிகளைச் செய்கிறேன். இந்த வேலை இனியும் தொடரும்." - தன் மனதிலிருக்கும் தன்னம்பிக்கையை, தன் பேச்சில் தொடர்ந்து பிரதிபலிக்கிறார் அனுக்ரீத்தி.

``எனக்கு 20 வயசுதான் ஆகுது... அதுக்குள்ள அவசரமா ஓடணுமா?!" - `மிஸ் இந்தியா' புகழ் அனுக்ரீத்தி வாஸ்

``திறமையான பெண்கள் நம்மூரில், கிராமங்களில் இருக்காங்க. ஆனா, `மிஸ் இந்தியா' உள்ளிட்ட போட்டிகள் குறித்த விழிப்புணர்வு பெண்கள்கிட்ட குறைவாகவே இருக்கு. குடும்பக்கட்டுப்பாடு, ஆடைக் கலாசாரம் இதையெல்லாம் தாண்டி அவங்க இதுபோன்ற போட்டிகளில் கலந்துக்க சொந்த வீட்டிலிருந்தும் ஆதரவு கிடைக்கணும். அழகுப் போட்டிகள்ல உடைக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. அதனால திறமையானவங்க, தங்களுக்கு விருப்பமான உடைகளிலும்கூட கலந்துக்கலாம். பல வருடங்களுக்கு முன்பிருந்தே நான் மாடர்ன் டிரஸ் உடுத்தறேன். அது எனக்குப் பிடிச்சிருக்கு. என் சுதந்திரம் மற்றும் விருப்பத்துக்கு என் அம்மா எதிர்ப்பு சொன்னதில்லை. எனவேதான், நான் வெளிநிகழ்ச்சிகளில் மாடர்ன் டிரஸ்ல கலந்துக்கறேன். 

``எனக்கு 20 வயசுதான் ஆகுது... அதுக்குள்ள அவசரமா ஓடணுமா?!" - `மிஸ் இந்தியா' புகழ் அனுக்ரீத்தி வாஸ்

எனக்கான சுதந்திரத்துடன் இனியும் செயல்படுவேன். கடந்த ஒரு வருடம் முழுக்கவே பலரும் எனக்கு சப்போர்ட் பண்ணியதைப்போல, இனியும் என் பயணங்களுக்கு சப்போர்ட் பண்ணணும். எனக்கு 20 வயசுதான் ஆகுது. இந்த வயசுக்குள்ளேயே நான் குறிப்பிடத்தக்க சாதனையை செய்திருக்கேன். இப்போவே எதிர்காலம் குறித்து பெரிய எதிர்பார்ப்புகளைச் சுமந்து, நிகழ்கால சந்தோஷத்தை இழக்க நான் தயாராகயில்லை. அவசரமா ஓடிகிட்டே இருக்கவும் எனக்கு விருப்பமில்லை. வாழ்க்கை நம்மை செலுத்தற பாதையில் தைரியத்துடன் நடைபோடுவேன்." - அழுத்தமாகச் சொல்லி சிரிக்கிறார் அனுக்ரீத்தி வாஸ்.

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு