Published:Updated:

"என் பலம், பலவீனத்தை உணர வெச்சவர் ஓஷோ!" - ஆன்மிகம் பேசும் இயக்குநர் பாலாஜி மோகன் #WhatSpiritualityMeansToMe

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"என் பலம், பலவீனத்தை உணர வெச்சவர் ஓஷோ!" - ஆன்மிகம் பேசும் இயக்குநர் பாலாஜி மோகன் #WhatSpiritualityMeansToMe
"என் பலம், பலவீனத்தை உணர வெச்சவர் ஓஷோ!" - ஆன்மிகம் பேசும் இயக்குநர் பாலாஜி மோகன் #WhatSpiritualityMeansToMe

"என் பலம், பலவீனத்தை உணர வெச்சவர் ஓஷோ!" - ஆன்மிகம் பேசும் இயக்குநர் பாலாஜி மோகன் #WhatSpiritualityMeansToMe

இயக்குநர் பாலாஜி மோகன்... `காதலில் சொதப்புவது எப்படி?' படம் மூலம் கவனம் பெற்றவர். தனக்கென ஒரு பாணியோடு கதைசொல்லும் இவரின் திரைமொழி தனித்துவமானது. தொடர்ந்து இவர் இயக்கிய `வாயைமூடிப் பேசவும்', `மாரி', `மாரி - 2' ஆகிய படங்கள் இளம் தலைமுறை ரசிகர்களிடம் பெரும்வரவேற்பைப் பெற்றன. `As I'm Suffering From Kadhal' என்று வெப் தொடரையும் இயக்கியிருக்கிறார். கலகலப்பாகப் படங்கள் எடுக்கும் இவருக்குள் இருக்கும் ஆன்மிகத் தேடல் தீவிரமானது. ஓஷோவின் கருத்துகளில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்ட பாலாஜி மோகன் தனது ஆன்மிகம் குறித்து நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

"என் பலம், பலவீனத்தை உணர வெச்சவர் ஓஷோ!" - ஆன்மிகம் பேசும் இயக்குநர் பாலாஜி மோகன் #WhatSpiritualityMeansToMe


``என் அப்பா, அம்மா ரெண்டு பேருமே ரயில்வே மருத்துவர்கள். நான் பிறந்தப்போ அவங்க கேரளாவுல கொல்லம் நகரத்துல இருந்தாங்க. அதுக்குப் பிறகு திருச்சிக்கு மாறுதலாகி வந்துட்டாங்க. திருச்சி கேம்பைன் ஸ்கூல்ல படிச்சேன். சின்னவயசுல மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவானைக்காவல், ஶ்ரீரங்கம் கோயில்களுக்கெல்லாம் போயிருக்கேன். வருடத்தில் ஒருமுறை வேளாங்கண்ணிக் கோயிலுக்கும், நாகூர் தர்காவுக்கும் போவோம்.  

சென்னைக்கு வந்து இன்ஜினீயரிங் காலேஜ்ல ரெண்டு வருஷம் படிச்சிட்டு அதைப் பாதியிலேயே விட்டுட்டேன். பிறகு, ஃபிலிம் அகாடமியில `எடிட்டிங் அண்ட் சவுண்ட் இன்ஜினீயரிங்' படிச்சேன். டிகிரி முடிக்காததால டைரக்‌ஷன் கோர்ஸ்ல சீட் கிடைக்கலை. ஷார்ட் ஃபிலிம்ஸ், சினிமானு மாறுன பிறகு, கடவுள் - ஆன்மிகம் பத்தின விஷயங்களெல்லாம் எனக்குள்ள மாறிப்போயிடுச்சு. எதையும் கேள்வி கேட்கிற வயசு வந்ததும், `ஏன் கடவுள் வழிபாடு ஒவ்வொரு மதத்துக்கும் வேற வேறயா இருக்குது'னு கேட்கத் தோணுச்சு. 

"என் பலம், பலவீனத்தை உணர வெச்சவர் ஓஷோ!" - ஆன்மிகம் பேசும் இயக்குநர் பாலாஜி மோகன் #WhatSpiritualityMeansToMe

`கோயில்ல போய் க்யூவுல நின்னு சாமி தரிசனம் பண்றது, அந்தச் சில நேரங்கள்ல மட்டும் பக்தியா இருக்கிறது... இதெல்லாம் எந்த அளவு சரி'னு மனசுல தோண ஆரம்பிச்சுது. அதுக்காக நான் நாத்திகத்தை நோக்கிப் போகலை. நமக்கு மேல ஒரு அல்மைட்டி இருக்கு. அதைப்பத்தி தெரியலைனு நாம சொல்லலாம். ஆனா, அது இல்லைனு சொல்லமுடியாது. கண்மூடித்தனமா சாமி நம்பிக்கையுடனிருக்கிறது அல்லது கண்மூடித்தனமா சாமி இல்லைனு சொல்றது ரெண்டுமே ஒண்ணுதான். 

பரபரப்பா வாழ்க்கை போய்க்கிட்டு இருந்தபோதே, மனசுக்குள்ள எப்பவும் ஒரு ஆன்மிகத்தேடலும் ஓடிக்கிட்டே இருந்துச்சு. அது கொஞ்சம் கொஞ்சமா ஆன்மிகத்துல சாதனை பண்ணினவங்களோட எழுத்துகள், பேச்சுகள் இதையெல்லாம் கேட்க வெச்சுது. குறிப்பா, ஓஷோவோட கருத்துகள், அவரது பேச்சுகள் உள்ளூர நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்துச்சு. அவருடைய குரல், கேட்க ரொம்ப நல்லா இருக்கும். அந்தக் குரலுக்கு ஒரு `அரெஸ்ட்டிங் பவர்'  உண்டு. 

"என் பலம், பலவீனத்தை உணர வெச்சவர் ஓஷோ!" - ஆன்மிகம் பேசும் இயக்குநர் பாலாஜி மோகன் #WhatSpiritualityMeansToMe


ஓஷோவை நான் நிறைய படிக்க ஆரம்பிச்சபிறகு என்னுடைய பலம், பலவீனம் ரெண்டையும் உணர முடிஞ்சது.
ஒஷோ கடவுளைப் பற்றிப் பேசறதைவிட, கடவுள் தன்மையைப் பத்தித்தான் நிறைய பேசுவார், வலியுறுத்துவார். தெய்வத்தன்மையைத் தெரிஞ்சுக்கவும் அதை சகமனிதர்களிடம் வெளிப்படுத்தவும் அவரது போதனைகள் எனக்குக் கத்துக் கொடுத்துச்சு. 
வாழ்க்கையில மாற்றம் ஒண்ணுதான் மாறாததுனு உணரமுடிஞ்சது. இந்த உலகில் எது மாறாமல் நிலைத்திருக்குதோ அதுதான் தெய்வத்தன்மையுடையது. நம்முடைய எண்ணங்கள் அபிப்பிராயங்கள், குணங்கள், கோபங்கள், இன்ப துன்பங்கள், மதிப்பீடுகள் எல்லாமே மாறுது. ஆனா அன்பு மட்டும்தான் மாறாமல் நிலைத்திருக்குது.

"என் பலம், பலவீனத்தை உணர வெச்சவர் ஓஷோ!" - ஆன்மிகம் பேசும் இயக்குநர் பாலாஜி மோகன் #WhatSpiritualityMeansToMe

இதைச் சாத்தியப்படுத்த துணையா இருந்ததுதான் தியானம். மெல்ல மெல்ல மனசு தியானம் செய்ய ஆரம்பிச்சுது. உள்முகச் சிந்தனை எனக்குள்ள வளர்ந்தது. தியானம்ங்கிறது மனமற்ற மனமா மனசை இருக்க வைக்கிறதுதான். ஒருநாளில், அந்த அனுபவம் ஒரு சில நிமிஷங்கள்  நமக்குக் கிடைச்சாலே போதும், அந்த நாள் முழுவதும் எல்லா வேலைகளையும் கிடுகிடுனு முடிச்சிடலாம். எனர்ஜி லெவலும் சரியா இருக்கும். இது என் அனுபவத்துல நான் கண்ட உண்மை" என்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன்.    

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு