Published:Updated:

வெளிநாட்டு வேலை, போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி - வாரிவழங்கும் வேளாண் படிப்புகள்!

வெளிநாட்டு வேலை, போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி - வாரிவழங்கும் வேளாண் படிப்புகள்!
வெளிநாட்டு வேலை, போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி - வாரிவழங்கும் வேளாண் படிப்புகள்!

வெளிநாட்டு வேலை, போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி - வாரிவழங்கும் வேளாண் படிப்புகள்!

ஜூன் மாதம் என்றாலே பள்ளிகள் திறக்கும் உற்சாகம் ஒருபுறம் இருக்க, பள்ளி கல்வியை முடித்த மாணவர்கள் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் கலந்தாய்வுப் படலம் வேகமாக நடந்து வருகிறது. என்ன படிக்கலாம்... எங்கு படிக்கலாம்... உள்ளிட்ட பல கேள்விகள் மாணவர்களுக்கு ஏற்படும். இன்றைய நிலையில் வேளாண் படிப்புகள் மீதான கவனம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பார்வை திரும்பியுள்ளது. மருத்துவக் கனவுக்கு நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள கடும்போட்டியும், இந்த மனநிலைக்குக் காரணம் எனக் கூறலாம். வேளாண் படிப்புகள் பற்றி அறிய சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம் வேளாண் கல்லூரியின் முதல்வர் முனைவர் சாந்தா கோவிந்த் அவர்களைத் தொடர்பு கொண்டோம்.

வெளிநாட்டு வேலை, போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி - வாரிவழங்கும் வேளாண் படிப்புகள்!

``வேளாண் படிப்புகளில் புதிய பிரிவுகள் ஏதேனும் சேர்க்கப்பட்டுள்ளதா?"

``அண்ணாமலை பல்கலைக்கழகம் வேளாண் கல்லூரியைப் பொறுத்தவரை இளம் அறிவியல் பிரிவில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை (4 வருடம்), டிப்ளோமா பிரிவில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை (2 வருடம்) படிப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் (வனவியல்), இளம் அறிவியல் (பட்டுப் புழு வளர்ப்பு), இளம் அறிவியல் (வேளாண் வணிக மேலாண்மை), உயிரி தொழில்நுட்பம் (Bio-technology), வேளாண் பொறியியல், உணவு தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் போன்ற பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகிறது."

வெளிநாட்டு வேலை, போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி - வாரிவழங்கும் வேளாண் படிப்புகள்!

``மாணவர்களிடையே வேளாண் படிப்புகளுக்கான வரவேற்பு எப்படி உள்ளது?"

``வேளாண் தொழிலின் அவசியம் உணர்ந்து மாணவர்கள் ஆர்வமாக இந்தப் படிப்புகளை தேர்வு செய்கின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளாக, பன்னிரண்டாம் வகுப்பில் குரூப் -1 படித்த மாணவர்களுக்கு மட்டுமே வேளாண் படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு குரூப் -2 மாணவர்களான கணினி அறிவியல் படித்தவர்களும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கத் தகுதி வழங்கப்பட்டுள்ளது. அதை மாணவர்களும் பெற்றோர்களும் வரவேற்கின்றனர்."

``கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதா?"

``இந்த ஆண்டு தோராயமாக 15,000 விண்ணப்பங்களுக்கு மேல் தங்கள் கல்லூரிக்கு வந்துள்ளது"

``வேளாண் படிப்புகளுக்கு கட்-ஆப் உயர்ந்துள்ளதா... எவ்வளவு மதிப்பெண் எடுத்திருந்தால் வேளாண் கல்லூரியில் இடம் கிடைக்கும்?"

``இந்த ஆண்டுதான் முதல்முறையாக 600 மதிப்பெண்ணுக்குப் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் எழுதியுள்ளனர். அதனால் கடந்த ஆண்டை ஒப்பிட்டு இப்போதே எந்த முடிவும் முன்னரே செல்ல முடியாது. கலந்தாய்வின் போதுதான் அது தெரியவரும்."

வெளிநாட்டு வேலை, போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி - வாரிவழங்கும் வேளாண் படிப்புகள்!

``இளம் அறிவியல் வேளாண்மைக்குப் பிறகு, மாணவர்களுக்குத் தொழில் சார்ந்த வேலை வாய்ப்பு எப்படி உள்ளது?"

 ``வேளாண் படித்த மாணவர்களுக்குப் பல துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு அதிகமாக உள்ளது."

``மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் வேளாண் படிப்புகளைத் தேர்வு செய்கின்றனர். பெண்களுக்கு வேளாண் சார்ந்த தொழில்களில் எதிர்காலம் எப்படி உள்ளது?"

 ``30 வருடங்களுக்கு முன் வேளாண்மை படித்த பெண்கள் ஆய்வுக்கூடங்களில் உள்ள வேலைகளை மட்டும் விரும்புவர். ஆனால், இப்போது பெண்களும் வேளாண் விரிவாக்கத் துறையில் எல்லாப் பணிகளிலும் உள்ளனர். ஆண், பெண் என்றில்லாமல் திறமைக்குத்தான் வேலை."

``வேளாண்மை படித்தால் மாநில மற்றும் மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது எளிதா?"

``ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் UPSC தேர்வுகளில் வேளாண்மை படித்த மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெறுவர். எங்கள் கல்லூரியிலும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கிவருகிறோம்."

Vikatan
அடுத்த கட்டுரைக்கு