Published:Updated:

நாள் ஒன்றுக்கு 20,000 லிட்டர் கடல் தண்ணீரைக் குடிநீராக்கும்!- ஜீப்பின் விலை ரூ.75 லட்சம்

நாள் ஒன்றுக்கு 20,000 லிட்டர் கடல் தண்ணீரைக் குடிநீராக்கும்!- ஜீப்பின் விலை ரூ.75 லட்சம்
நாள் ஒன்றுக்கு 20,000 லிட்டர் கடல் தண்ணீரைக் குடிநீராக்கும்!- ஜீப்பின் விலை ரூ.75 லட்சம்

டந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியா வந்தார். அப்போது, பிரதமர் மோடிக்கு ஒரு ஸ்பெஷல் கிஃப்ட்டையும் கொண்டு வந்திருந்தார். அது ஒரு ஜீப்.  பக்கி ஜீப் என்பது இதன் பெயர். ஆனால், சாதாரணமான ஜீப் அல்ல. இப்போது, சென்னையில் இந்த ஜீப்பைக் கொண்டு வந்து நிறுத்திவைத்தால், அடுத்த நிமிடம்  திருடிக்கொண்டு ஓடிவிடுவார்கள். அப்படி, என்ன அந்த ஜீப்பில் இருக்கிறது என்கிறீர்களா? ஆமாம்... நின்ற இடத்தில் நாள் ஒன்றுக்கு 20,000 லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கி விடும். அதுமட்டுமல்ல, மாசு கலந்த தண்ணீர் என்றால் நாள் ஒன்றுக்கு 80,000 லிட்டர் நீரை குடிநீராக்கும் திறன் உடையது.

நாள் ஒன்றுக்கு 20,000 லிட்டர் கடல் தண்ணீரைக் குடிநீராக்கும்!- ஜீப்பின் விலை ரூ.75 லட்சம்

முன்னதாக பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பக்கி ஜீப்பைக் கண்டு வியந்துபோனார். ஓலிவா கடற்கரையில் மோடி முன்னிலையில் பக்கி ஜீப் கடல்நீரை சுத்திகரித்தது. சுத்திகரித்த நீரை அதே இடத்தில் பிரதமர் மோடியும் குடித்துப் பார்த்து வியப்பு தெரிவித்தார். தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் இந்தியா வந்தபோது பக்கி ஜீப்பைக் கொண்டு வந்து மோடிக்குப் பரிசாக அளித்தார். குஜராத்தின் கட்ச் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இந்த ஜீப் வழங்கப்பட்டுள்ளது. கட்ச் பகுதி கடும் வறட்சி நிலவும் பகுதி. இங்குள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் சுய்கம் பகுதியில் உள்ள எல்லைப் பாதுகாப்பு படை முகாமுக்கு இந்த ஜீப்  வழங்கப்பட்டது. பக்கி ஜீப் வந்த பிறகு இங்குள்ள பாதுகாப்பு படையினர் வயிறார தண்ணீர் பருகுகிறார்கள். 

நாள் ஒன்றுக்கு 20,000 லிட்டர் கடல் தண்ணீரைக் குடிநீராக்கும்!- ஜீப்பின் விலை ரூ.75 லட்சம்

இந்த ஜீப்பைப் பேரிடர் காலங்களில், வெள்ள காலங்களில் தண்ணீரை சுத்திகரிக்க பயன்படுத்த முடியும். தமிழக அரசு எவ்வளவோ திட்டங்கள் போடுகிறது. குறைந்த பட்சம் அவசரத் தேவைகளுக்காக இந்த ஜீப்பை வாங்குவது குறித்து பரிசீலிக்கலாமே.  கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்குப் பல ஆயிரம் கோடி கணக்கில் செலவிட வேண்டுமென்று சொல்கிறார்கள். இது போன்ற ஜீப்புகள் குறைவான அளவில் கடல் நீரைக் குடிநீராக மாற்றினாலும் அவசரக் காலத்துக்கு உதவிகரமாக இருக்குமே!

Vikatan