Published:Updated:

தாயின் கர்ப்பப்பையில் 23 வார சிசுவுக்குத் தண்டுவட அறுவைசிகிச்சை

தண்டுவட பாதிப்புடன் வளர்ந்த சிசு... ஆரோக்கியமாகப் பிறந்த மருத்துவ அதிசயம்!

தாயின் கர்ப்பப்பையில் 23 வார சிசுவுக்குத் தண்டுவட அறுவைசிகிச்சை
தாயின் கர்ப்பப்பையில் 23 வார சிசுவுக்குத் தண்டுவட அறுவைசிகிச்சை

ருவில் இருக்கும்போதே குழந்தைக்கு முதுகுத்தண்டுவட பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, கருவில் இருக்கும்போதே அந்தக் குழந்தைக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

தாயின் கர்ப்பப்பையில் 23 வார சிசுவுக்குத் தண்டுவட அறுவைசிகிச்சை

வடஅமெரிக்காவைச் சேர்ந்த 18 வார கர்ப்பிணி ஒருவர், கிளீவ்லேண்ட் கிளினிக்கின் கரு மையத்துக்குப் பரிசோதனைக்காக வந்தபோது, கருவில் உள்ள குழந்தைக்கு  'ஸ்பைனா பிஃபிடா' (Spina Bifida) என்ற பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கருவில் இருக்கும் சிசுவின் முதுகுத் தண்டுவடம் முறையாக வளர்ச்சியடையாமல் இருப்பதே ஸ்பைனா பிஃபிடா என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நடக்கும் திறனை இழப்பார்கள், சிறுநீர் கழிப்பதிலும் சிரமம் ஏற்படும். மேலும், முகுதுத்தண்டுவடத்துக்கும் மூளைக்கும் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்படுவதால், மூளை வளர்ச்சி குறைவு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படலாம்.

அமெரிக்காவில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் 1,645 குழந்தைகள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Centers for Disease Control and Prevention) தெரிவித்துள்ளது. 

தாயின் கர்ப்பப்பையில் 23 வார சிசுவுக்குத் தண்டுவட அறுவைசிகிச்சை

இதையடுத்து, 23 வாரத்தில் கருவிலேயே அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். அதன்படி, தாயின் கர்ப்பப்பையில் 4.5 செ.மீ துளையிடப்பட்டு, கருவிகள் செலுத்தப்பட்டு குழந்தையின் முதுக்குத்தண்டுவடத்தில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.

தாயின் கர்ப்பப்பையில் 23 வார சிசுவுக்குத் தண்டுவட அறுவைசிகிச்சை

பொதுவாகக் குழந்தை பிறந்த பிறகு, செய்யப்படும் இந்த சிகிச்சை, தாயின் கருவில் இருக்கும்போதே வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. நரம்பியல், சிறுநீரகம், எலும்பியல், குழந்தை வளர்ச்சி மருத்துவம் மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை ஆகிய பல துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்த அறுவைசிகிச்சைக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். 

சிகிச்சைக்குப் பின்னர் ஜூன் 3-ம் தேதியன்று சிசேரியன் மூலம் ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார் அந்தப் பெண்மணி. தாயும் சேயும் நலமுடன் இருக்கின்றனர். 

உலகளவில் அரிதாகவே இந்தச் சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதுபோன்ற அறுவைசிகிச்சைகள் பிறவிக் குறைபாடுகளற்ற ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பதற்கு வழிவகுக்கும்.

Vikatan