Published:Updated:

'தொலைந்துபோன மொபைலை இனிமேல் ட்ராக் செய்வது எளிது'... புதிய திட்டத்தைக் கொண்டுவரும் மத்திய அரசு

தொலைந்துபோன மொபைல்களை விரைவாகக் கண்டுபிடிக்க புதிய திட்டம் ஒன்றைத் தொலைத்தொடர்பு அமைச்சகம் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி IMEI தரவுகள் அடங்கிய ஒரு தளம் ஒன்று பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். Central Equipment Identity Register (CEIR) எனப் பெயரிடப்பட்டிருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு இந்தத் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர், மகாராஷ்டிராவில் பரிசோதனை முயற்சியாகச் செயல்பட்டு வந்தது. அதைத் தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தத் தொலைத்தொடர்பு அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது. உலகம் முழுக்க விற்பனை செய்யப்படும் அங்கீகாரம் பெற்ற மொபைல்கள் ஒவ்வொன்றுக்கும் IMEI எனப்படும் தனிப்பட்ட எண் ஒன்று ஒதுக்கப்படுகிறது.

'தொலைந்துபோன மொபைலை இனிமேல் ட்ராக் செய்வது எளிது'... புதிய திட்டத்தைக் கொண்டுவரும் மத்திய அரசு

அதை வைத்து ஒரு மொபைலை பற்றிய பல்வேறு தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். இது பயன்பாட்டுக்கு வந்த பின்னர் ஒரு தொலைந்துபோன ஒரு போனின் IMEI எண் பற்றிய தகவலைக் காவல்துறையிடம் புகார் அளித்த பின்னர், தொலைத்தொடர்புத் துறையிடம் தெரிவிக்க வேண்டும். அதன் மூலமாகக் குறிப்பிட்ட IMEI எண் கொண்ட மொபைல் ட்ராக் செய்யப்பட்டு மொபைல் நெட்வொர்க் சேவை கிடைப்பது முழுவதுமாகத் தடுக்கப்படும். இப்போது தொலைந்துபோன அல்லது திருடுபோன போன்களைக் கண்டுபிடிக்க காவல்துறையில் தகவல் தெரிவிப்பதே ஒரே வழியாக இருந்து வருகிறது. இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. அதை இந்தத் திட்டம் மூலமாகக் குறைக்க முடியும். 

Vikatan