Published:Updated:

40,000 பேர்; 200 தண்ணீர்த் தொட்டிகள்;8 மருத்துவக் குழு! - பிரதமர் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி

இந்தியாவில் தோன்றிய யோகா கலை இன்று உலகம் முழுவதும் பரவி அனைவருக்கும் பயனளித்துவருகிறது. 2015-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஒரு மனதாக அங்கீகரிக்கப்பட்டதுதான், சர்வதேச யோகா தினம். அதன்படி, ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

40,000 பேர்; 200 தண்ணீர்த் தொட்டிகள்;8 மருத்துவக் குழு!  - பிரதமர் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி

நான்காம் ஆண்டு யோகா தினத்தையொட்டி, இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள மக்கள் யோகா செய்து, அந்த வீடியோவையும், புகைப்படத்தையும் விழிப்புணர்வுக்காக சமூக வலைதளங்களில் நிரப்பிவருகின்றனர். உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் அளிக்கும் யோகாவை அனைவரும் செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து மத்திய அரசு வலியுறுத்திவருகிறது.  பிரசாரங்களும் செய்துவருகிறது.

40,000 பேர்; 200 தண்ணீர்த் தொட்டிகள்;8 மருத்துவக் குழு!  - பிரதமர் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி

 யோகா தினத்தை முன்னிட்டு, இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று ஜார்கண்டில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிக்காக, நேற்று இரவே பிரதமர் மோடி அந்த மாநிலத்துக்குச் சென்றுள்ளார். அங்கு உள்ள ராஜ்பவனில் இரவு தங்கியுள்ளார். இன்று, பிரபாத் தாரா (Prabhat Tara ) மைதானத்தில், சுமார் 40,000 பேர் கலந்துகொண்ட பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்களுக்காக 400 கழிவறைகள், 200 குடிநீர்த் தொட்டிகள், 8 மருத்துவ குழுக்கள், 21 ஆம்புலன்ஸ்கள், பேரிடர் குழுவைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் 100 சிசிடிவி கேமராக்கள்  பொருத்தப்பட்டிருந்தன.

40,000 பேர்; 200 தண்ணீர்த் தொட்டிகள்;8 மருத்துவக் குழு!  - பிரதமர் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி

இதில் மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, “ யோகா தினத்தை முன்னிட்டு, இந்தியா உட்பட உலக மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்று, லட்சக்கணக்கான மக்கள் உலகின் பல இடங்களில் யோகா செய்துவருகின்றனர். அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.  

40,000 பேர்; 200 தண்ணீர்த் தொட்டிகள்;8 மருத்துவக் குழு!  - பிரதமர் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி

நம் அனைவருக்கும் யோகாவைப் பற்றி நன்றாகத் தெரியும். அது நம் கலாசாரத்தின் முக்கிய அடையாளமாகவும் உள்ளது. எனவே, நாம் தற்போது யோகாவை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். நகரங்களில் மட்டும் நடைமுறையில் உள்ள மார்டன் யோகாவை கிராமங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.  யோகா, மனதையும் உடலையும் நோயிலிருந்து பாதுகாக்கும். கிராமங்களில் உள்ளவர்கள் தான் அதிகமாக நோய் வாய்ப்படுகிறார்கள். எனவே, அதைக் கிராம மக்கள் மற்றும் பழங்குடிகளின்  ஓர் அங்கமாக மாற்ற வேண்டும்” என யோகா பற்றிய பல விசயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

40,000 பேர்; 200 தண்ணீர்த் தொட்டிகள்;8 மருத்துவக் குழு!  - பிரதமர் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி

டெல்லியில் மட்டும் இன்று பா.ஜ.க தலைவர்கள் தலைமையில் சுமார் 300 இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதேபோல் நாடு முழுவதும் பல இடங்களில் பா.ஜ.க-வினர் யோகா நிகழ்ச்சிகள் நடத்திவருகின்றனர். யோகா தினம் அறிவிக்கப்பட்டது முதல் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு முழக்கத்தை முன்னிறுத்தி யோகா செய்யப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முழக்கம்,  ‘இதயத்துக்கான யோகா’. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் யோகா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளனர். 
 
Vikatan
அடுத்த கட்டுரைக்கு