Published:Updated:

`அரசை நம்பி புண்ணியமில்லை; வீட்டுக்கு ஒருவர் வரணும்!'- ஏரியைத் தூர் வார களமிறங்கிய கிராமம்

எம்.திலீபன்
`அரசை நம்பி புண்ணியமில்லை;  வீட்டுக்கு ஒருவர் வரணும்!'- ஏரியைத் தூர் வார களமிறங்கிய கிராமம்
`அரசை நம்பி புண்ணியமில்லை; வீட்டுக்கு ஒருவர் வரணும்!'- ஏரியைத் தூர் வார களமிறங்கிய கிராமம்

"ஒவ்வொரு வீட்டிலும் வசூல் செய்ய வேண்டும். வீட்டுக்கு ஒரு பெண்ணோ அல்லது ஆணோ ஏரியைத் தூர் வார தினந்தோறும் வரவேண்டும். இந்த அதிகாரிகளை நம்பி எந்தப் புண்ணியமும் இல்லைங்க" என்று கிராம மக்களே ஏரியைத் தூர் வார களம் இறங்கியுள்ள சம்பவம், பெரம்பலூரில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`அரசை நம்பி புண்ணியமில்லை;  வீட்டுக்கு ஒருவர் வரணும்!'- ஏரியைத் தூர் வார களமிறங்கிய கிராமம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அமைந்துள்ளது, பரவாய் கிராமம். இக்கிராமத்தின் தெற்கே 15 ஏக்கர் பரப்பளவில் மாங்காய் ஏரி உள்ளது. இந்த ஏரியால் 500 ஏக்கருக்கும் மேல் பாசன வசதி பெற்றது. 1970-க்குப் பிறகு இந்த ஏரி தூர் வாரப்படாததால், கட்டாந்தரையாக மாறியுள்ளது. இந்த ஏரியைத் தூர் வார வேண்டும் என வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் ஏரியைத் தூர் வாராமல், அதிகாரிகள் மெத்தனமாக இருந்துள்ளனர். அடுத்தாக, பெரம்பலூர் ஆட்சியரிடமும் பலமுறை மனு அளித்துள்ளனர். எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் ஒன்றுசேர்ந்து, வீட்டுக்கு வீடு பணம் வசூல் செய்து, தூர் வார முடிவெடுத்துள்ளனர்.

`அரசை நம்பி புண்ணியமில்லை;  வீட்டுக்கு ஒருவர் வரணும்!'- ஏரியைத் தூர் வார களமிறங்கிய கிராமம்

அதோடு, கிராமத்தில் உள்ள முக்கியத் தலைவர்கள் கூட்டம் போட்டு, வீட்டுக்கு ஒருவர்  பெண்கள் அல்லது ஆண்கள் ஏரியைத் தூர் வாருவதற்காக அனுப்புவது என முடிவுசெய்யப்பட்டு, கடந்த 15 நாள்களாக ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

`அரசை நம்பி புண்ணியமில்லை;  வீட்டுக்கு ஒருவர் வரணும்!'- ஏரியைத் தூர் வார களமிறங்கிய கிராமம்

இதுகுறித்து, அப்பகுதி மக்களிடம் பேசினோம். ”இந்த ஏரியால் பரவாய் கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டதில்லை. இன்று வரை விவசாயத்திற்கும் குடிக்கவும் இந்த ஏரியைத்தான் மக்கள் நம்பி இருந்தார்கள். தற்போது பருவமழை பொய்த்துப்போனதால், ஏரி முறையாகத் தூர் வாரப்படாததால், முறையாக பராமரிக்காததால் முட்புதர்கள் மண்டி, தண்ணீர் தேங்கி நிற்க வழியில்லாமல் கட்டாந்தரையாக மாறியுள்ளது.

`அரசை நம்பி புண்ணியமில்லை;  வீட்டுக்கு ஒருவர் வரணும்!'- ஏரியைத் தூர் வார களமிறங்கிய கிராமம்

அதோடு, 'இப்பகுதியில் குடிக்கவே தண்ணீர் இல்லாமல் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனைப் போக்க, அதிகாரிகளை நம்பி எந்தப் புண்ணியமும் இல்லை' என்று கிராம மக்களே ஏரியைத் தூர் வாரும் பணியைத் தொடங்கியுள்ளனர். இது, எங்களுக்குக் கிடைத்த முதல்வெற்றி" என்று மெய்சிலிர்ப்போடு முடித்தார்கள்.

Vikatan