Published:Updated:

சாதகம் கேட்டு சங்கீதத்தில் லயிப்பு!

சாதகம் கேட்டு சங்கீதத்தில் லயிப்பு!

சாதகம் கேட்டு சங்கீதத்தில் லயிப்பு!

தி.மு.க-வின் முன்னணித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், தன்னுடைய ஊர் ஆன காங்குப்பம் பற்றிய பழைய நினைவுகளைத் தனக்கே உரிய நகைச்சுவையோடும் நெகிழ்ச்சியோடும் இங்கே பகிர்ந்துக்கொள்கிறார்.

சாதகம் கேட்டு சங்கீதத்தில் லயிப்பு!
##~##

''எங்க ஊர் பெரிய பேரும் புகழும் பெற்ற ஊரும் அல்ல. பாடல் பெற்ற ஸ்தலமும் அல்ல. இது ஒரு சாதாரண குக்கிராமம். காங்குப்பம் என்ற பெயர் மருவி, இப்போ 'மகாதேவ மலை’னு அழைக்கிறாங்க. கே.வி.குப்பம், கம்மங்குப்பம், காங்குப்பம், மாங்குப்பம், தேவரிஷி குப்பம்னு எங்க பகுதியில் குப்பங்கள் அதிகம். குப்பம்னு சொல்றது ஜனங்க கூடிவாழ்ந்த ஓர் ஊர்.

எங்க ஊர்ல இருந்த நாவிதர்களில் நல்ல சங்கீத வித்வான்கள் இருந்திருக்காங்க. சுற்றுவட்டாரத்தில் இருந்து பல பேர் சங்கீதம் கத்துக்கப் பிள்ளைகளைக் கொண்டுவந்து எங்க ஊர்ல விட்ருவாங்க. கன்னி

யப்பப் பண்டிதர், முத்துப் பண்டிதர் போன்ற பெரிய வித்துவான்கள் எங்க ஊரில் இருந்தாங்க. நாகஸ்வரம், கிளாரினெட் வாசிக்கிறதில் மகா கெட்டிக்காரங்க. எங்க தெருவுக்குப் பக்கத்தில்தான் அந்த நாவிதர்கள் தெரு இருந்தது. அங்கு சங்கீதம் பயிலும் பிள்ளைகள், அதிகாலை 3 மணிக்கு எழுந்து சாதகம் பண்ணுவாங்க. அந்தச் சாதகங்களைக் கேட்டுக் கேட்டு எனக்கும் கர்னாடக சங்கீதத்துல ஒரு லயிப்பு ஏற்பட்டுப் போச்சு.

சாதகம் கேட்டு சங்கீதத்தில் லயிப்பு!

நான் படித்த காலத்தில் எங்க ஊர் காலனியில் ஒரே ஒரு லேபர் எலிமென்ட்ரி ஸ்கூல்தான். ஒண்ணாவதுல இருந்து நாலாவது வரைக்கும் அந்த லேபர் ஸ்கூல்லதான் படிச்சேன். அப்புறம் மேல்மாயில்ல உள்ள எங்க மாமா வீட்ல தங்கி அங்கு உள்ள ஸ்கூல்ல படிச்சேன். ஏன்னா, கே.வி.குப்பத்தில் ஹைஸ்கூல் கிடையாது. காட்பாடிக்குத்தான் போகணும். மொத்தம் ஆறு ஏழு பேர்தான் படிச்சோம். ஆனா, ஒவ்வொருத்தரா தர்மராஜா மோட்சத்துக்குப் போற மாதிரி பாதியிலேயே நின்னுட்டாங்க. நாங்க ரெண்டு மூணு பேர் மட்டும்தான் ஹைஸ்கூல் படிப்பைப் படிச்சு முடிச்சோம்.

சாதகம் கேட்டு சங்கீதத்தில் லயிப்பு!

எங்க ஊருக்கு உள்ள பெரிய சிறப்பு மகாதேவ மலைதான். இது ஒரு புராதனமான மலை. மலையில் ஒரு ஈஸ்வரன் கோயில் உண்டு. பெரிய லிங்கமும் உண்டு. அந்த மலையில ஆடிக் கிருத்திகை, தைக் கிருத்திகை, கார்த்திகைக் கிருத்திகைனு மூணு கிருத்திகையும் ரொம்ப விசேஷமா இருக்கும். அடுத்து எங்க ஊர்ல மிகப்பெரிய விழா என்றால் அது கங்கைஅம்மன் திருவிழாதான். சின்ன வயசுல மலைமேல ஒரு நாளைக்கு நாலு அஞ்சு தடவை ஏறி இறங்குவோம். இப்ப முடியாது. பொங்கல், தீபாவளிக்கு அடுத்து கங்கையம்மன் திருவிழாவுக்குத்தான் எங்க ஊர்ல எல்லாரும் புதுத் துணி எடுத்து உடுத்திக்குவாங்க.

என்னுடைய ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சியிலும் எங்க ஊர் எனக்குப் பேருதவியா இருந்ததோடு என் வளர்ச்சி கண்டு சந்தோஷப்படுவதும் எங்கள் ஊர்தான். என்னைப் பொறுத்தவரை என்னுடைய நெஞ்சில் ஆழமான ஒரு பிடிப்பு எங்கள் கிராமத்தின்மீது எப்போதும் எனக்கு உண்டு. நல்லது கெட்டதுனு எதுவா இருந்தாலும் எங்க ஊர் நிகழ்வுகள்ல தவறாமக் கலந்துக்குவேன். நெனச்ச நேரத்துல ஊருக்குக் கிளம்பிடுவேன். எங்கள் ஊரை நினைக்காத நாளே கிடையாது. எது எப்படி இருந்தாலும் எந்த வேலையில் இருந்தாலும் ஒரு நாளில் ஒருமுறையேனும் என் ஊர் பற்றிய நினைவு என் நெஞ்சில் நிழலாடிப் போகும்!'

சாதகம் கேட்டு சங்கீதத்தில் லயிப்பு!
சாதகம் கேட்டு சங்கீதத்தில் லயிப்பு!

- ரியாஸ்,
படங்கள்: ச.வெங்கடேசன்

அடுத்த கட்டுரைக்கு