Election bannerElection banner
Published:Updated:

புதிய கல்விக்கொள்கை: மத்திய அரசிடம் தமிழகப் பிரதிநிதிகள் சொல்ல வேண்டிவை

புதிய கல்விக்கொள்கை: மத்திய அரசிடம் தமிழகப் பிரதிநிதிகள் சொல்ல வேண்டிவை
புதிய கல்விக்கொள்கை: மத்திய அரசிடம் தமிழகப் பிரதிநிதிகள் சொல்ல வேண்டிவை

புதிய கல்விக்கொள்கை: மத்திய அரசிடம் தமிழகப் பிரதிநிதிகள் சொல்ல வேண்டிவை

புதிய கல்விக்கொள்கை: மத்திய அரசிடம் தமிழகப் பிரதிநிதிகள் சொல்ல வேண்டிவை

தேசியக் கல்விக் கொள்கைத் திட்டத்தின் வரைவை, மத்திய அரசு முன் வைத்திருக்கிறது. 400 பக்கங்களுக்கு அதிகமாகவுள்ள, இந்த வரைவு குறித்து பொதுமக்களின் கருத்துகளை இம்மாதம் (ஜூன்) 30 தேதிக்குள் தெரிவிக்குமாறு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு பகுதியினரால், இது வரவேற்பு பெற்றாலும், செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. விரைவில் டெல்லியில், அனைத்து மாநில பிரதிநிதிகளின் சந்திப்பில், இந்தத் தேசியக் கல்விக் கொள்கை வரைவு பற்றிய கருத்துகள் கேட்கப்பட இருக்கின்றன. அதில், தமிழகத்தின் சார்பில் என்னென்ன விஷயங்களை முன்வைக்க பரிந்துரைப்பீர்கள் என இரண்டு ஆசிரியர்களிடம் கேட்டோம். 

என்.மாதவன், ஆசிரியர்: அனைவருக்கும் கல்வி என்பதை 1907-ம் ஆண்டில்தான் பம்பாய் சட்டமன்றத்தில் கோபால கிருஷ்ண கோகலே தீர்மானம் கொண்டுவந்தார். அதிலிருந்து கணக்கிட்டாலே 110 ஆண்டுகளாகத்தான், இந்தியாவில் கல்வி குறித்த உரையாடல் நடந்துவருகின்றன. கல்விப் பரவலும் மெதுவாகத்தான் நடக்கின்றன. தொடக்கப்பள்ளி அருகில் நடுநிலைப் பள்ளி, அதன் வளர்ச்சியில் உயர், மேல்நிலைப் பள்ளிகள் எனக் கல்விக்கூடங்கள் மக்களின் அருகில் சென்றுகொண்டிருக்கின்றன. இதன் நீட்சி என்னவாக வேண்டுமெனில், மேல்நிலைக் கல்வி இருக்கும் பகுதிகளில் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். ஆனால், புதிய கல்விக் கொள்கை வரைவின்படி பார்த்தால் கல்லூரியின் எந்தப் பிரிவு படிப்புக்கு என்றாலும் அதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது அவசியமாகிறது. இதனால், கல்லூரிக் கல்வி எல்லோருக்கும் கிடைப்பதில் பெரிய தேக்கம் வரும். இது பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன். 

பள்ளியளவில் பார்த்தால், குழந்தைகள் வெவ்வேறு தளங்களிலிருந்து வருகிறார்கள். செய்தித்தாளே பார்க்காத குடும்பங்களிலிருந்து வரும் முதல் தலைமுறையாகக் கல்வி பெறும் குழந்தைகளும் இருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு தேர்வு வைக்கும்போது ஒரே மாதிரியான வெளிப்பாட்டை எதிர்பார்க்க முடியாது. எல்லோரும் கற்றல் திறனடைய வேண்டும் என்பதற்கு நாங்கள் யாருக்கும் எதிர்ப்பு இல்லை. ஆனால், அதைச் சோதிப்பதற்கு எழுத்துத் தேர்வு மட்டும்தான் என்று வரையறுத்துத் தேக்குவதுதான் தவறு. 

டெல்லிக்குச் செல்லும் நம் பிரதிகளிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், முதலில் இந்த வரைவைத் தமிழில் கொடுக்க வேண்டும். அந்தந்த மாநிலங்களின் மொழிகளிலும்தான். சிலரின் முயற்சியால் தமிழில் மொழியாக்கம் செய்யப்படுகிறது. ஆனாலும், அரசு என்ன சொல்கிறது என்பதை அதன் மொழியில் சொல்வதுதானே சரியாக இருக்கும். 

இரண்டாவது, இன்னும் 30 ஆண்டுகளுக்கு இருக்கும் கல்விக் கொள்கை பற்றி 30 நாள்களில் கருத்துச் சொல்ல வேண்டும் என்பது போதுமான அவகாசம் இல்லை. எனவே, ஆறு மாதங்கள் கருத்துச் சொல்லும் காலத்தை நீட்டிக்க வேண்டும். நிறைய கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தி, அவற்றை உள்வாங்கி, கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இதைச் செய்யும்போதே பலவற்றிற்கு தீர்வுகளைக் காண முடியும். 

புதிய கல்விக்கொள்கை: மத்திய அரசிடம் தமிழகப் பிரதிநிதிகள் சொல்ல வேண்டிவை

உமாமகேஸ்வரி, ஆசிரியர்:

முதலில், மும்மொழிக் கொள்கையைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இருமொழிக் கொள்கையே போதுமானது. இன்னும் சொல்வதென்றால், ஆங்கில வழியில் படித்த ஆசிரியர் ஒருவர், ஆங்கில வழியில் அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களைக் கற்றுக்கொடுப்பதற்கும், தமிழ் வழியில் படித்த ஆசிரியர் கற்றுக்கொடுப்பதற்குமே பெரிய வித்தியாசம் இருக்கிறது. இதில் மூன்றாவது மொழி எனும்போது மாணவர்களுக்குக் கூடுதல் சுமையே!  மொழி அறிவு என்பது வேறு, மொழியால் கிடைக்கும் அறிவு என்பது வேறு. இதில் மொழியால் கிடைக்கும் அறிவே பிரதானமானது. 

8-ம் வகுப்புக்குப் பிறகு செமஸ்டர் முறையும் சிக்கலானதே! ஏனெனில், அந்த வயதில் மாணவர்களுக்கு இந்த முறை எந்தளவுக்குப் புரியும் என்பதே கேள்விக்குறி. அதனால், நிறைய அரியர் வைத்து, பள்ளியிலிருந்து இடைநிற்றலுக்கே வாய்ப்புகள் அதிகம். இப்போதே நீட் தேர்வு மூலம் ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. 

ஆசிரியர் நியமனம் பற்றி இக்கொள்கை வரைவில் தனியாகக் குறிப்பிடப்பட வில்லை. ஓரிடத்தில் தன்னார்வலர்களை ஈடுபடுத்தச் சொல்கிறது. அனைவருக்கும் இலவசக் கல்வி என்பதில், ஆசிரியர் நியமிப்பதும் முக்கியமானது அல்லவா? பள்ளியின் கட்டமைப்பைத் தகர்க்கும் விஷயமாகவே பார்க்கமுடிகிறது.

பல நாடுகளில் உள்ளவாறு, கல்விக் கொள்கையை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே முடிவெடுத்துக்கொள்வதுபோல இந்தியாவிலும் செய்வதே சரியானதாக இருக்க முடியும். ஏனெனில், இந்த வரைவில், மலைப் பகுதி போன்ற விளிம்புநிலை மக்களின் கல்வி குறித்துப் பேசப் படவில்லை. இந்த நிலை மாற வேண்டுமெனில், மாநிலப் பட்டியலுக்குக் கல்வி வருவதே சரியானதாக இருக்கும். 

தேசிய அளவில் என்.சி.ஆர்.டி பாடங்களைத் தயாரிப்பது, மாநிலக் கல்வித்துறை அவற்றில் சில மாற்றங்கள் செய்யலாம் எனச் சொல்லியிருக்கிறது. ஆனால், தேர்வுக்கான கேள்விகள் தயாரிக்க 'மாடல்' உருவாக்குவோம் என்கிறார்கள். அதாவது, பாடங்களிலிருந்து இல்லாமல், அப்பொருளை மையமாக வைத்து, கேள்விகளை உருவாக்குவது என்பது தனியார் பயிற்சி மையங்களுக்கே உதவும். பள்ளிப் பாடத்திட்டம் குறித்த மதிப்பும் வெகுவாகக் குறைந்துவிடும். 
 

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு