Published:Updated:

குர்ஜித் கவுரின் மிரட்டல் அடி! - ஹாக்கி சீரிஸ் தொடரில் இந்தியா அபாரம்

மலையரசு
குர்ஜித் கவுரின் மிரட்டல் அடி! - ஹாக்கி சீரிஸ் தொடரில் இந்தியா அபாரம்
குர்ஜித் கவுரின் மிரட்டல் அடி! - ஹாக்கி சீரிஸ் தொடரில் இந்தியா அபாரம்

பெண்களுக்கான ஹாக்கி சீரிஸ் தொடரில் இந்தியா அசத்தியுள்ளது.

குர்ஜித் கவுரின் மிரட்டல் அடி! - ஹாக்கி சீரிஸ் தொடரில் இந்தியா அபாரம்

பெண்களுக்கான ஹாக்கி சீரிஸ் தொடர், ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடைபெற்றுவருகிறது.  இதில் இந்தியா - சிலி அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி சனிக்கிழமை நடந்தது. போட்டி ஆரம்பித்த முதல் 18-வது நிமிடத்தில், சிலி வீராங்கனை கரோலினா கோல் அடித்து அணியை முன்னிலைபெறச் செய்தார். ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில், குர்ஜித் கவுர் பதில் கோல் அடித்தார். இதையடுத்து, முதல் பாதியானது 1-1  என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இரண்டாவது பாதியில், இந்திய அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. ஆட்டத்தின் முடிவில் 4 -2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின்மூலம் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை இந்திய மகளிர் ஹாக்கி அணி உறுதிசெய்தது. 

குர்ஜித் கவுரின் மிரட்டல் அடி! - ஹாக்கி சீரிஸ் தொடரில் இந்தியா அபாரம்

தொடர்ந்து இன்று நடந்த இறுதிப்போட்டியில், இந்தியா - ஜப்பான் மோதின. தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே இந்திய அணியின் ராணி கோல் அடித்து கெத்து காட்டினார். ஆனால், 11வது நிமிடத்திலேயே ஜப்பான் கோல் அடித்து சமன் செய்ய ஆட்டம் பரபரப்பானது. தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்கக் கடுமையாக முயற்சி மேற்கொண்டும் 45வது நிமிடத்தில்தான் கைகூடியது. 45வது நிமிடம் 60வது நிமிடம் என இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் இரண்டு கோல் அடித்து மிரட்ட வெற்றி இந்தியா வசமானது. இறுதியில் 3 - 1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி பட்டத்தை வென்றது இந்திய அணி. இந்திய அணிக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

Vikatan