Published:Updated:

மர்ம சுரங்கம்... உயிர் பறிக்கும் தங்கம்... தென்னாப்பிரிக்காவின் கே.ஜி.எஃப்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மர்ம சுரங்கம்... உயிர் பறிக்கும் தங்கம்... தென்னாப்பிரிக்காவின் கே.ஜி.எஃப்!
மர்ம சுரங்கம்... உயிர் பறிக்கும் தங்கம்... தென்னாப்பிரிக்காவின் கே.ஜி.எஃப்!

தங்கம், தங்கச் சுரங்கம், சுரங்கப்பாதை, வேலை எனக் கேட்பதற்கு இலகுவாக இருக்கலாம். தங்கச் சுரங்கங்களின்  கனமான துயரக் கதைகளெல்லாம் இங்கிருந்துதான் தொடங்குகின்றன. 12 வருடங்களுக்கு முன்பு மூடப்பட்ட தங்கச் சுரங்கங்கள் என்பதால் எல்லா தங்கச் சுரங்கங்களும் பராமரிப்பின்றி கிடக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

 பிழைத்தே ஆக வேண்டும் என்பதால் கைவிடப்பட்ட சுரங்களில் தங்கம் தேடி சாவின் விளிம்புவரை சென்று திரும்பும் சம சமாஸ் (ZAMA ZAMAS) மனிதர்களின் கதை இது.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரைச் சுற்றி சுமார் 6,000 கைவிடப்பட்ட தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றன. தங்கச் சுரங்கங்களின் கதவுகள் அனைத்துமே அரசால் 12 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டுவிட்டன. ஆனால், 15,000-க்கும் அதிகமான சுரங்கப்பாதைகள் திறந்தே கிடக்கின்றன. இவற்றைச் சட்டவிரோதமாகத் தங்கம் தயாரிக்கும் மனிதர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதற்காகப் பல சட்டவிரோத குழுக்கள் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் செயல்பட்டு வருகின்றன.

மர்ம சுரங்கம்... உயிர் பறிக்கும் தங்கம்... தென்னாப்பிரிக்காவின் கே.ஜி.எஃப்!

g

தென்னாப்பிரிக்காவின் அண்டை நாடுகளான ஜிம்பாப்வே, மொசாம்பிக், போஸ்ட்வானா போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பின்மை மற்றும் வறுமை நிலவுவதால் மக்கள் தென்னாப்பிரிக்காவுக்கு இடம் பெயர்கின்றனர். இடம்பெயரும் மக்களை அங்கே இருக்கிற சில கும்பல்கள் சட்ட விரோத தங்க உற்பத்திக்குப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இடம்பெயர்ந்த மக்களுக்கு வேறு வழியில்லை, பிழைத்தாக வேண்டும். சட்டவிரோதமாகச் சுரங்கங்களில் தங்கம் எடுக்கும் மனிதர்களுக்குப் பெயர் சம சமாஸ். தங்கம், தங்கச் சுரங்கம், சுரங்கப்பாதை, வேலை எனக் கேட்பதற்கு இலகுவாக இருக்கலாம். தங்கச் சுரங்கங்களின் கனமான துயரக் கதைகளெல்லாம் இங்கிருந்துதான் தொடங்குகின்றன. 12 வருடங்களுக்கு முன்பு மூடப்பட்ட தங்கச் சுரங்கங்கள் என்பதால் எல்லா தங்கச் சுரங்கங்களும் பராமரிப்பின்றி கிடக்கின்றன. ஒரு கிராம் தங்கம் எடுப்பதற்குப் பல கட்டச் சோதனைகள் போராட்டங்களையும் கடந்தாக வேண்டும். ஆசிட் வாட்டர், கார்பன் மோனாக்சைடு, சுரங்கப் பாம்புகள், உள்ளூர் கேங்ஸ்டர் எனப் பல பிரச்னைகள் கண்ணுக்கு முன்னால் இருக்கின்றன.

எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், போதிய பயிற்சியும் இல்லாமல் 8 பேர் கொண்ட குழுவாக 500 மீட்டர் ஆழத்துக்குச் சுரங்கப்பாதைகளில் பயணத்தைத் தொடங்குகிறார்கள். கயிற்றை மட்டுமே மூலதனமாகப் பயன்படுத்தி பயணிக்கிறார்கள். கைவிடப்பட்ட சுரங்கப்பாதைகள் இலக்கில்லாதவை. எங்கு முடிகிறதோ அங்கேயிருந்து தொடங்க வேண்டும். தோண்ட வேண்டும். சுமார் 2 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு சுரங்கப் பாதையின் எல்லைக்கு வந்தடைகிறார்கள். ரொட்டித் துண்டுகளும் தண்ணீர் மட்டுமே அவர்களுக்கு ஆதாரம். சுரங்கங்களில் இரவு பகல் எல்லாமே ஒன்றுதான். தலையில் டார்ச் விளக்குடன் தங்களது பணியைத் தொடங்குகிறார்கள். 40 டிகிரி வெப்பத்தில் பணியாற்ற வேண்டும். வெடி மருந்துகளைப் பயன்படுத்தி சில இடங்களைத் தகர்க்கிறார்கள். தவறாக எது நடந்தாலும் அதுவே அவர்களுக்குக் கடைசி. சுரங்கப்பாதைக்கு  வெளியே இவர்களைப் பணிக்கு அமர்த்தி இருக்கிற குழுக்கள் பாதுகாப்புக்கு இருக்கிறார்கள். ஏனெனில், சுரங்கங்களிலிருந்து கொண்டுவரப்படுகிறது தங்கங்களை அபகரிக்கக் கொள்வதற்காகத் தனித் தனி குழுக்களும் செயல்பட்டன. எல்லாக் குழுக்களும் துப்பாக்கிகள் வைத்திருக்கிறார்கள்.

மர்ம சுரங்கம்... உயிர் பறிக்கும் தங்கம்... தென்னாப்பிரிக்காவின் கே.ஜி.எஃப்!

g

ஒரு வாரம் இரண்டு வாரம் அதிகபட்சமாக மூன்று வாரங்கள் வரை சுரங்க பாதைக்குள் தங்கியிருக்கிறார்கள். வெப்பம், சூழ்நிலை, உணவு என உடலை ஓர் இயந்திரமாகப் பயன்படுத்துகிறார்கள். வெப்பம் தாங்காமல் இறந்து போனவர்கள் நிறைய பேர். இறந்து போன உடல்களை அப்படியே விட்டுவிட்டு வருகிற சம்பவங்களும் நிகழாமல் இல்லை. நேரம் காலம் தெரியாமல்  உடைக்கிற கற்களையும் கிடைக்கின்ற துகள்களையும் எடுத்துக்கொண்டு மீண்டும் பூமிக்குத் திரும்புகிறார்கள். கூலியாக இரண்டு வாரத்துக்கு 300 ராண்ட் கிடைக்கும். இந்திய மதிப்பில் 1,500 ரூபாய். மூன்று வாரங்களாக இருந்தால் இந்திய மதிப்பில் 5,000 ரூபாய். அதாவது தென்னாப்பிரிக்கா பண மதிப்பில் 1,000 ராண்ட். சுரங்கப் பாதையிலிருந்து கொண்டு வரப்பட்ட கற்களில் தங்கத்தைப் பிரித்தெடுக்கும் இடத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

தங்கத்தைப் பிரித்து எடுப்பதற்காகத் தனித் தனி இடங்கள் இருக்கின்றன. சுரங்கங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கற்களை  உடைக்கிறார்கள். வினிகர், உப்பு, டார்டாரிக் அமிலம் மூலம் தங்க துகள்களைத் தனியாகப் பிரித்தெடுக்கப்படுகின்றன. பிரித்தெடுக்கப்பட்ட தங்கத் துகள்கள் பாதரசம் மூலம் தங்கமாக மாற்றப்படுகின்றன. பிரித்தெடுக்கப்பட்ட தங்கம் ஒரு கிராம் 470 தென்னாப்பிரிக்கா விலையில் வாங்கப்படுகின்றன. விலை ஒவ்வொரு இடத்திற்கும் வேறுபடுகிறது. இதுவே ஜோகன்னஸ்பர்க், டர்பன் போன்ற நகரங்களில்  650 RAND வாங்குகிறார்கள். இங்கிருந்து பக்கத்து நாடுகளின் வழியாக மொத்த தங்கமும் துபாய் நாட்டுக்குச் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சட்ட விரோத தங்கச் சுரங்கங்கள் செயல்படும் எல்லா இடங்களிலும் கொலைகள், கற்பழிப்புகள் என ஒரு நாளைக்குப் பல வழக்குகள் காவல் நிலையங்களில் பதியப்படுகின்றன. நீயா நானா போட்டியில் பல சட்ட விரோத கும்பல்களின் செயல்படுவதால் பல குற்றங்களும் சர்வ சாதாரணமாக அந்த இடங்களில் நிகழ்கின்றன. காவல்துறை தீவிரமாகச் செயல்பட்டாலும் இன்றுவரை இதே குற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அரசு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் சட்டவிரோத தங்கம் ஏற்றுமதியை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. சட்டவிரோதமாகத் தங்கம் எடுக்கும் மக்கள் தங்கம் எடுக்க உரிமை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார்கள். தங்கம் எடுப்பது அனுமதித்தால் அரசுக்கு வருவாயும் வரும், அதிக தங்கத்தின் உற்பத்தி செய்யலாம் எனக் கோரிக்கை வைக்கிறார்கள்.

மர்ம சுரங்கம்... உயிர் பறிக்கும் தங்கம்... தென்னாப்பிரிக்காவின் கே.ஜி.எஃப்!

g

தென்னாப்பிரிக்கா உலகின் தங்க ஏற்றுமதியில் முதலில் இருந்த நாடு. ஆனால், எல்லாமே 2007-ம் ஆண்டு வரைதான். சட்ட விரோத தங்க உற்பத்தி நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் கை வைத்தது. விளைவு பல ஆண்டுகளாகத் தக்க வைத்திருந்த முதல் இடத்தைப் பறி கொடுத்தது. முதல் இடத்தைச் சீனா கைப்பற்றியது. கடந்த நான்கு வருடங்களில் மட்டும் 34 டன் தங்கம் சட்டவிரோதமாக துபாய் நாட்டுக்குக் கடத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் வருடத்துக்கு 14 பில்லியன் அளவுக்குத் தென் அமெரிக்கா ஏற்றுமதியில் தன் வர்த்தகத்தை இழந்திருக்கிறது. தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்க உற்பத்தியில் முதல் இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா சட்டவிரோத தங்கக் கடத்தல் மூலமாகத் தன்னுடைய இடத்தை இழந்து இருக்கிறது. தங்க ஏற்றுமதியில் இன்னொரு ஆப்பிரிக்க நாடான கானா 2018-ம் ஆண்டு 4.8 மில்லியன் தங்கத்தை ஏற்றுமதி செய்து இருக்கிறது. அதே ஆண்டில் தென்னாப்பிரிக்கா 4.2 மில்லியன் அளவுக்கு மட்டுமே  ஏற்றுமதி செய்து இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் தென்னாப்பிரிக்கா தன்னுடைய மொத்த வணிகத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டி வரும்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு