Published:Updated:

செயற்கை மழையால் சென்னைக்கு நன்மையா... இல்லையா? #VikatanInfographics

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
செயற்கை மழையால் சென்னைக்கு நன்மையா... இல்லையா? #VikatanInfographics
செயற்கை மழையால் சென்னைக்கு நன்மையா... இல்லையா? #VikatanInfographics

இயற்கை இதுவரை வைத்திருந்த அத்தனை நீர்நிலைகளையும் தற்போது நாம் நாசப்படுத்திவிட்ட நிலையில், தற்போது அதைத்தாண்டி செயற்கையான தீர்வுகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். அதில் மிக முக்கியமானது செயற்கைமழை. மக்கள் வறட்சியைப் பற்றிப் பேசும்போதெல்லாம் எப்படி நதிநீர் இணைப்பைச் சொல்லி திசைதிருப்பப்படுகிறார்களோ, அதேபோல தண்ணீர் சேமிப்பைப் பற்றி அரசிடம் கேட்கும்போதெல்லாம் இப்படிச் செயற்கை மழையைச் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார்கள். இது நடைமுறையில் சாத்தியமா? சென்னைக்குக் கைகொடுக்குமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ன்றைக்கு பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த செயற்கை மழை அறிவியலுக்குப் புதிதல்ல. 1830-களிலேயே இதுகுறித்த ஆராய்ச்சிகளை அமெரிக்கா மேற்கொண்டதாகக் குறிப்பிடுகிறார் ஜேம்ஸ்.ஆர்.பிளமிங். இதேபோலப் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஆராய்ச்சிகள் நடைபெற்றாலும் அவை எதுவும் பெரிதாக வெற்றிபெறவில்லை. பின்னர் 1915-ல்தான் முதல்முறையாக மேகவிதைப்பு முறைக்கு விதை போட்டார் அமெரிக்க வேதியியல் நிபுணர் வின்சென்ட் ஜோசப் ஸ்ஷேபர். இவரின் தொடர் முயற்சிக்கு 1946-ல் வெற்றிகிடைத்தது. அதன்பின் சுமார் 10 ஆண்டுகள் கழித்து முதல் செயற்கை மழை உருவாக்கப்பட்டது. பின்னர் 1960-களிலும் குறிப்பிட்ட அளவு செயற்கை மழை பெய்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இந்த ஆராய்ச்சிகளில் அதிதீவிரமாகச் செயல்பட்டனர். அதில் ஸ்ஷேபர் மற்றும் அவருடன் பணியாற்றிய வளிமண்டல விஞ்ஞானி பெர்னார்டு வென்னிகாட் செயற்கை மழை உருவாக்கத்திற்கான அடிப்படை காரணிகளை உருவாக்கியதோடு, அப்போதிருந்த முறைகளைத் தவிர்த்து, மற்ற முறைகளில் மழையை உருவாக்க முடியுமென்பதையும் நிரூபித்தனர். இன்னொருபுறம் சீன ஆராய்ச்சியாளர் சாங் சியாங் மற்றும் அவரின் குழுவினர் நவீன முறையில் மேகவிதைப்பு செய்து மழையைப் பொழியவைத்தனர். உலகில் இன்றளவும் செயற்கை முறையில் மழையை உருவாக்குவதில் சீனா முன்னணி வகிக்கிறது. 

அமெரிக்காவைச் சேர்ந்த வெதர் மாடிஃபிகேஷன் நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 2003-2004-ம் ஆண்டு இந்த மழைக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 2008-ம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தில் 12 மாவட்டங்களில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், இதுவரைக்கும் இந்த முயற்சிகளில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வெற்றி கிடைத்ததாக தகவல்கள் இல்லை. சரி, இந்த மழை எப்படி உருவாக்கப்படுகிறது? மொத்தம் மூன்று படிநிலைகளில் உருவாகிறது. அவை,

1. காற்றழுத்தத்தை உருவாக்குதல்
2. மழை மேகங்களைத் திரட்டுதல்
3. மழை மேகங்களைக் குளிரச் செய்தல் 

செயற்கை மழையால் சென்னைக்கு நன்மையா... இல்லையா? #VikatanInfographics

மேகங்களின் வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரியாக இருந்தால், அவை வெப்ப மேகங்கள் என்றும், பூஜ்ஜியம் டிகிரிக்குக் குறைவாக இருந்தால் அவை குளிர்ந்த மேகங்கள் என்றும் அழைக்கப்படும். வெப்ப மேகங்களைக் குளிர்விக்கும்போது நீர்த்திவலைகளின் அடர்த்தி அதிகரித்து மேகங்களின் அடியிலிருந்து மழைப்பொழிவு ஏற்படுகிறது. அதுபோல், குளிர்மேகங்களைக் குளிர்விக்கும்போது பனிக்கட்டியின் அடர்த்தி அதிகரித்து அவை உடையும்போது வானிலையில் ஏற்படும் வெப்ப மாற்றத்தினால் பனிக்கட்டியானது நீராகி மழையாகப் பொழிகிறது.

இந்த மழையில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளைப் பின்வரும் படத்தில் காணலாம்.

செயற்கை மழையால் சென்னைக்கு நன்மையா... இல்லையா? #VikatanInfographics

யாரின் நன்மைக்காக ஒரு செயலை நாம் செய்யப்போகிறோமோ, அவர்களுக்கே அது தீங்காக முடியும் வாய்ப்புள்ளது என்றால். அந்தச் செயலைச் செய்வதற்கு முன் ஒன்றுக்குப் பலமுறை யோசிப்பதே ஒரே வழி. செயற்கை மழைக்குக் காத்திருப்பதற்குப் பதில், இயற்கை மழைக்கு என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்து அதற்கான முயற்சியில் முழுமூச்சுடன் இறங்குங்கள். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சி நிச்சயம் நாளை உங்கள் தலைமுறையினருக்கு உதவும் என்பதே சூழலியாளர்களின் பொதுவான கருத்து.

ஏனெனில், இந்தளவுக்குச் செலவு செய்து, ஆராய்ச்சிகள் செய்து, முயற்சி செய்து இதுபோல செயற்கை மழையை வரவைப்பதை விடவும், நமக்கு நன்கு பரீட்சயமான, நன்கு தெரிந்த இன்னொருமுறை இருக்கிறது. அது, காடுகளை வளர்ப்பது; காடுகளைக் காப்பது. நம் நீர்நிலைகளை மீட்டெடுப்பது; அதுதான் நம்மை என்றென்றுக்கும் காப்பாற்றும். 

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு