Published:Updated:

``முக்கா காலுக்கு ஒரு டிரஸ்ஸை நீட்டுனாங்க... வெக்கமா போச்சு!'' - மாடலிங் பியூட்டி ரெங்கம்மா பாட்டி

``முக்கா காலுக்கு ஒரு டிரஸ்ஸை நீட்டுனாங்க... வெக்கமா போச்சு!'' - மாடலிங் பியூட்டி ரெங்கம்மா பாட்டி

மேக்கப்,ஹேர்ஸ்டல்னு என்னென்னமோ பேசிக்கிட்டாங்க. ஒரு மூணு மணிநேரம் கண்களை மூடி அமைதியா சேரில் படுத்துக்கிட்டேன்.

சுருங்கிய தோல், பொக்கை வாய் சிரிப்பு, தமிழர்களுக்கே உரிய முகக்களை எனக் கொள்ளை அழகில் இருக்கும் 80 வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டி, வெஸ்டர்ன் டைப் உடைகள் அணிந்து கெத்தாக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த ஸ்டில்கள் சமூக வலைதளத்தில் பரவ, யார் என்று தேடினோம். பல்வேறு கட்ட தேடல்களுக்குப் பிறகு கோயம்புத்தூரில் கண்டுபிடித்தோம் பாட்டியை... பெயர் ரெங்கம்மா.

``முக்கா காலுக்கு  ஒரு டிரஸ்ஸை நீட்டுனாங்க... வெக்கமா போச்சு!'' - மாடலிங் பியூட்டி ரெங்கம்மா பாட்டி

பாட்டி ச்சும்மா ஃபாரின்ல இருந்து இறங்கி வந்த மாதிரி செம அழகா, ஸ்டைலா இருக்கீங்களே... எப்படி பாட்டி என்றுதான் பேச்சை ஆரம்பித்தேன். வெட்கப்பட்டுக்கொண்டே... ``இந்த வயசுல இப்படிப் பண்ணிடுச்சுங்கம்மா அந்தப் பொண்ணுங்க. எனக்கு வயசு 85 ஆகுது.  என்ட்ர ஊரு கோயம்புத்தூரு. எனக்கு 11 புள்ளைங்களாக்கும். அவங்களை பெத்து வளர்த்து கல்யாணம் முடிச்சுக்கொடுத்து அக்கடானு உட்கார்ந்திருக்க நினைச்சேன். உழைச்ச உடம்பில்லையா... சும்மா இருக்க முடியல. அதான் ஒரு வீட்ல வேலை பார்த்துட்டு இருக்கேன். அங்க கொடுக்கிற காசுல எனக்கான தேவைகளை நானே பார்த்துக்குவேன். ஆனாலும், என் புள்ளைங்க என்னை தங்கமா தாங்குவாங்க. அவங்கதான் என்னை பார்த்துக்குறாங்கோ. ஒரு நாளு நான் வீட்டு வேலை பார்க்குற ஓனர் அம்மாவோட ஃப்ரெண்டு என்கிட்ட 'பாட்டி உங்களை அழகா போட்டோ எடுத்துகிடட்டுமானு கேட்டாங்கோ. 'வயசாகியிருச்சேமா'னு சொன்னேன். இதுதான் பாட்டி வேணும்னு சொன்னாங்கோ...சரின்னுட்டேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``முக்கா காலுக்கு  ஒரு டிரஸ்ஸை நீட்டுனாங்க... வெக்கமா போச்சு!'' - மாடலிங் பியூட்டி ரெங்கம்மா பாட்டி

அவங்க சொன்ன இடத்துக்கு என்கிட்ட இருந்த சீலையிலேயே ரொம்ப அழகான சீலையைக் கட்டிட்டு போயி நின்னேனுங்க. அந்தப் புள்ளைக, "பாட்டி இந்த டிரஸ் போட்டுக்கோங்கன்னு முக்கால் காலுக்கு ஒரு டிரஸ்ஸைக் கொண்டு வந்து நீட்டுனாங்க. கொஞ்சம் வெக்கமாதான் இருந்துச்சு. ஆனாலும் போட்டுக்கிட்டேன். மேக்கப், ஹேர்ஸ்டைல்னு என்னென்னமோ பேசிக்கிட்டாங்க. ஒரு மூணு மணிநேரம் கண்ண மூடி அமைதியா சேரில் படுத்துக்கிட்டேன்.

``முக்கா காலுக்கு  ஒரு டிரஸ்ஸை நீட்டுனாங்க... வெக்கமா போச்சு!'' - மாடலிங் பியூட்டி ரெங்கம்மா பாட்டி

கண்ணைத் திறந்து பார்த்தா ஃபாரின் பாட்டியா மாறியிருந்தேன். அட என்னாலயே என்ன நம்ப முடியல. என்னோட 85 வயசுலதான் நான் இவ்வளவு அழகுனு தெரிஞ்சுக்கிட்டேன். என் போட்டோவை பிரேம் பண்ணி கொடுத்துருக்காக. புகைப்படத்தைப் பார்க்க பார்க்க வெக்கமா வருது'' என்று சிரித்துக்கொண்டே வெட்கப்பட்டார் ரெங்கம்மா பாட்டி.

``முக்கா காலுக்கு  ஒரு டிரஸ்ஸை நீட்டுனாங்க... வெக்கமா போச்சு!'' - மாடலிங் பியூட்டி ரெங்கம்மா பாட்டி

எப்படிப் பாட்டியை இவளோ அழகா ஸ்டைல் பண்ணீங்க என்றபடியே கோவையைச் சேர்ந்த டிசைனர் திவ்யா சண்முகத்திடம் கேட்டோம். ''எனக்கு சொந்த ஊர் கோயம்புத்தூர் .நான் மாஸ் மீடியா முடிச்சிட்டு, ஒரு பிரபல பத்திரிகையில் நிருபராக வேலைபார்த்துட்டு இருந்தேன். புதுப்புது டிசைனில் ஆடைகளை உருவாக்கி அதை அணிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு எப்போதும் உண்டு. என்னோட டிரஸ்சிங் சென்ஸ் பிடிச்சுப்போக என் ஃப்ரெண்ட்தான் காஸ்டியூம் டிசைனிங் ஐடியா கொடுத்தான். புது ஃபீல்ட் ஆனாலும் முயற்சி செய்வோம்னு களத்தில் இறங்கிட்டேன். டிசைனர்கள் தாங்கள் வடிவமைக்கும் ஆடைகளை மாடல்களுக்கு அணிவித்துப் போட்டோ ஷூட் செய்து, விளம்பரம் செய்வது இயல்பான ஒன்று. ஆனால், நான் புதுசா ஏதாவது முயற்சி செய்யலாம்னு நினைச்சேன். அப்போதான் வயசான ஒரு பாட்டியை மாடல் ஆக்குற ஐடியா ஸ்பார்க் ஆச்சு. என்னோட டிரஸ்களுக்கு மாடலிங் பண்ற பாட்டி எப்படி இருக்கணும்னு மனசுக்குள்ள ஒரு எதிர்பார்ப்பு இருந்துச்சு. நிறைய இடங்களில் தேடி அலைஞ்சேன். கடைசியா எனக்கு மாடலிங் செய்திருக்கும் ரெங்கம்மா பாட்டியை என் ஃப்ரெண்ட் வீட்டில் கண்டுபிடிச்சேன்." எனப் பாட்டியை வைத்து போட்டோ ஷூட் செய்தது பற்றி விவரிக்கிறார் திவ்யா.

''ரெங்கம்மா பாட்டி என் ஃப்ரெண்ட் வீட்டில் வீட்டுவேலை செஞ்சிட்டு இருந்தாங்க. சுருங்கிய தோலுடன் ரொம்ப இயல்பா அழகா இருந்தாங்க பாட்டி. நான் தேடிட்டு இருந்த சூப்பர் மாடல் இவங்கதான் என மனசுல ஃபிக்ஸ் பண்ணிட்டு பாட்டிகிட்ட கேட்டேன். ஆரம்பத்தில் ரொம்ப தயங்குனாங்க. வயசான காலத்துல எதுக்கு போட்டோனு கேட்டாங்க. ஒரு வழியா அவங்க மனசை மாத்தி ஒத்துக்க வெச்சுட்டோம். வயசான பாட்டி என்பதால் ரொம்ப இறுக்கமாக இல்லாமல், அவங்களோட உடல் அமைப்பு வெளியே தெரியாத வெல்வெட் கவுன் ஒன்றும் ஓவர் ஜாக்கெட் ஒன்றும் ரெடி பண்ணேன். பாட்டி இதெல்லாம் போடுவாங்களானு பயமா இருந்துச்சு. எதுவுமே சொல்லாம போட்டு வந்து நின்னாங்க. கண்ணாடி, அக்சசரிஸ் என முழு தோற்றத்தையும் மாற்றி கண்ணாடி முன்னாடி நிற்க வைத்தோம். பாட்டி அசந்து போயிட்டாங்க. ஜாலி மோடில் இருந்த பாட்டிகிட்ட சில போஸ்களை செய்து காட்டி இதே மாதிரி செய்ய முடியுமானு கேட்டோம்.

``முக்கா காலுக்கு  ஒரு டிரஸ்ஸை நீட்டுனாங்க... வெக்கமா போச்சு!'' - மாடலிங் பியூட்டி ரெங்கம்மா பாட்டி

பிறப்பிலேயே நான் ஒரு மாடல்ங்கிற அளவுக்கு பாட்டியோட போஸ்கள் வேற வெலவலில் இருந்துச்சு. அவங்க முகம் முழுக்க புன்னகையோடவே இருந்துச்சு. அதுபோதும் எனக்கு'' எனச் சிரிக்கிறார் திவ்யா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism