Published:Updated:

பாழடைந்த கிணற்றைத் தூர்வாரி கிராம மக்களுக்கு நீர் கொடுத்த இளைஞர்கள்! #MyVikatan

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள நைனாம்பட்டியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்தப் பகுதியில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுவருகிறது. இந்த நிலையில், இதே ஊரைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு புது டெக்னிக்கை உருவாக்கினர். அதாவது, இங்கு மாரியம்மன் கோயில் அருகே உள்ள பாழடைந்த கிணற்றைத் தூர்வாரி  அதில் மழை நீரைச் சேகரிக்க ஏற்பாடு செய்தால் கணிசமான அளவில் நிலத்தடி நீரைச் சேமிக்க முடியும். இதனால், கவர்ன்மென்ட் போட்ட ஆழ்துளைக்கிணற்றில் நீர் ஊறும் இதனால், தண்ணீர் பற்றாக்குறை தீரும் என்பதே. கிராமமே பாராட்டும் அந்த இளம் புயல் குழுவைச் சந்தித்துப் பேசினோம்,

பாழடைந்த கிணற்றைத் தூர்வாரி கிராம மக்களுக்கு நீர் கொடுத்த இளைஞர்கள்! #MyVikatan

``எங்கள் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் விவசாயக் கிணறு வறண்டு, விவசாயம் செய்ய முடியவில்லை.ஆயிரக்கணக்கான விவசாயக் கூலி ஆட்கள் வேலை இழந்து தவித்துவந்தனர். அன்றாட தேவைக்குக் கூட தண்ணீர் இல்லாமல், விலை கொடுத்து வாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். 

பாழடைந்த கிணற்றைத் தூர்வாரி கிராம மக்களுக்கு நீர் கொடுத்த இளைஞர்கள்! #MyVikatan

எங்கள் ஊரில், சில நாட்களுக்கு முன்னர் மழை பெய்ததில்  மாரியம்மன் கோயில் அருகே உள்ள மைதானம் நிரம்பி வழிந்தது. அப்போதுதான், ஏன் இந்த மழை நீரை சேகரிக்கக் கூடாது எனத் தோன்றியது. மேலும், ஒரு குழாய் வழியாக மாரியம்மன் கோயில் அருகே உள்ள கிணற்றுக்குள் விட்டு சேகரிக்கலாம் எனத் தோன்றியது. 

பாழடைந்த கிணற்றைத் தூர்வாரி கிராம மக்களுக்கு நீர் கொடுத்த இளைஞர்கள்! #MyVikatan

இதற்காக, 30 பேர் சேர்ந்தோம். நேராக ஊர் பெரியவர்களிடம் எங்கள் திட்டம் குறித்துச் சொன்னோம். ஆனால் அவர்கள், இது வேண்டாத வேலை என்றனர். இருப்பினும், தொடர் வற்புறுத்தல் காரணமாக ஒத்துக்கொண்டனர். 

பாழடைந்த கிணற்றைத் தூர்வாரி கிராம மக்களுக்கு நீர் கொடுத்த இளைஞர்கள்! #MyVikatan

எங்கள் குழுவின் பெயர் இளம்புயல்.   புயல் வேகத்தில் பாழடைந்த கிணற்றைத் தூர் வார ஆரம்பித்தோம். (கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்வதால் விடுமுறை நாள்களில் இந்த வேலையில் ஈடுபவோம்) பின்னர், பைப் கொண்டு மைதானத்திற்கும் கிணற்றுக்கும் இணைப்பு கொடுத்தோம். நாங்கள் நினைத்தது போலவே மழை பெய்தது. இந்த மழை நீர் நேராக கிணற்றுக்குள் அருவி போல கொட்டியது. அன்று பெய்த மழைக்கு மட்டும் சுமார் 5 அடி நிரம்பியது. முன்னர் இது வேண்டாத வேலை என்று சொன்னவர்கள்கூட தற்போது பாராட்டுகின்றனர். இப்போது பெய்வது போல இனி பெய்தால், எங்கள் கிணறு நிரம்பிவிடும். அப்படி நிரம்பினால், தண்ணீர் பற்றாக்குறைக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு