Published:Updated:

பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் - குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்!

பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் - குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்!

பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் - குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்!

பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் - குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்!

பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் - குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்!

Published:Updated:
பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் - குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்!
பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் - குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்!

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஏழு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, முன்னிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர்.சி.என்.மகேஸ்வரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக குடிநீர் விழிப்புணர்வு மற்றம் மழைநீர் சேமிப்பு பிரசார ஊர்தி தொடங்கி வைக்கப்பட்டது. அதையடுத்து நடந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைப் பொறியாளர் பன்னீர்செல்வம், திருச்சி மாவட்ட மேற்பார்வைப் பொறியாளர் மணிவண்ணன், தஞ்சாவூர் மேற்பார்வைப் பொறியாளர் ராமசந்திரன் மற்றும் ஏழு மாவட்ட நிர்வாகப் பொறியாளர்கள் திருச்சி மணிவண்ணன், புதுக்கோட்டை மணிவண்ணன், பெரம்பலூர் சுப்ரமணியன், அரியலூர் சிவபிரகாசம், தஞ்சாவூர் விஸ்வநாதன், திருவாரூர் கோபிநாத், நாகப்பட்டினம் கருணாகரன், மற்றும் உதவி நிர்வாகப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள், ஊராட்சிகளின் உதவி இயக்குநர், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் - குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்!

கூட்டத்துக்கு முன்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ``குடிநீர் விநியோகம் தொடர்பாக மண்டலம் வாரியாகப் பிரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் மண்டலத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதன்பின்னர் மதுரை மண்டலத்திலும், தற்போது திருச்சி மண்டலத்திலும் ஆய்வு செய்யப்பட்டது. திருச்சி மண்டலத்தில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஏழு மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் 114 ஆழ்துளைக் கிணறு, 18 திறந்தவெளி கிணறு, 16 கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், 74 ஆற்றுப்படுகை மேற்பரப்பு நீர், 280 நீர் உறிஞ்சுக் கிணறு, 25 நீர் சேகரிக்கும் கிணறு, 29 குடிநீர் எடுப்பு முனை என மொத்தம் 556 பல்வேறு நீர் ஆதாரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட குடிநீர் அளவு 2146  எம்.எல்.டி. ஆகும். இதில் 1800 எம்.எல்.டி. குடிநீர் வழங்கப்படுகிறது.

ஒரு எம்.எல்.டி என்பது 10 இலட்சம் லிட்டர் ஆகும். 4.23 கோடி மக்களுக்குக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. காவிரி, தாமிரபரணி, வைகை ஆகிய ஆற்றுப்படுகை மூலம் 84 சதவிகிதம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. நீர்மட்டம் 17.06மீட்டர் ஆழத்திற்குச் சென்றுள்ளது. 49,144 கிராமங்களுக்கு, 2146 எம்.எல்.டி. குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. காவிரியில் நிலத்தடி நீர்மட்டம் சராசரி அளவில் உள்ளது. கோடைக்கால குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் 2018-19ம் ஆண்டிற்கு ரூபாய் 27.24 கோடி மதிப்பீட்டில் 325 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் 177 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கும் வகையில் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 370 பணிகளுக்கு ரூபாய் 16 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 40 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கூடுதலாக மக்களுக்கு வழங்கமுடியும்.

பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் - குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்!

30 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை புனரமைப்பு செய்திட 99 கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணிகளுக்கு ரூபாய் 244.09 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 45 பணிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கோடைக்கால குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 556 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் செயல்களைப் பராமரிக்க 218 கண்காணிப்பு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கண்காணிப்பு பிரிவிற்கும் இளநிலைப் பொறியாளர், உதவிப் பொறியாளர், உதவி நிர்வாகப் பொறியாளர் நிலையில் தனி வாகனம் ஒதுக்கப்பட்டு தினசரி பராமரிப்புப் பணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 

பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். குடிநீர் தொடர்பாக குறைகளை நிவர்த்தி செய்ய தலைமை அலுவலக தொலைபேசி எண் 94458 02145 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு முழுவதும் 52 இடங்களில் குடிநீர்ப் பகுப்பாய்வு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியிலும் குடிநீர் பகுப்பாய்வு அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி, கரூர், திருவாரூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, உள்ளிட்ட 17 மாவட்டங்களில் சீரான குடிநீர் வழங்குவதற்குத் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆத்தூரிலிருந்து குடிநீர் விநியோகப்பட்டு வருகிறது. இதில் தற்போது நீர் ஆதாரம் குறைந்துள்ளதால் நத்தத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று ஜோலார் பேட்டையிலிருந்து குடிநீர் சென்னைக்கு வழங்குவதற்கு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. குடிநீர் ஆதாரத்தைப் பெருக்குவதற்கு பொதுமக்களும் மழைநீரை பூமிக்கடியில் செலுத்துவதற்கு வீடுகளில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்” என்றார்.

 அதனையடுத்து, ஏழு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள், ஊராட்சிகள் உதவி இயக்குநர்கள், பேரூராட்சிகள் உதவி இயக்குநர்கள் ஆகிய துறை அலுவலர்களுடன் கிராமங்களில் வழங்கப்படும் குடிநீர் தொடர்பாக ஆய்வு செய்தார். குடிநீர் ஆதாரத்தைப் பெருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், மழைநீரைச் சேமிக்க மக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும் என அரசு சொல்ல ஆரம்பித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் துரிதப் படுத்துவது எப்போது.?