Published:Updated:

தண்ணீர்த் தட்டுப்பாட்டால் உளவியல் சிக்கலில் மக்கள்... தீர்வு என்ன?

சிறிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு, பாதி வீட்டைத் தண்ணீர் வாளியும் பாத்திரங்களும் அடைத்துக்கொள்ளும். இந்தப் பொருள்கள் எல்லாம் வீட்டை அடைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது ஒருவித மன நெருக்கடி உண்டாகும்.

தண்ணீர்த் தட்டுப்பாட்டால் உளவியல் சிக்கலில் மக்கள்... தீர்வு என்ன?
தண்ணீர்த் தட்டுப்பாட்டால் உளவியல் சிக்கலில் மக்கள்... தீர்வு என்ன?

தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்... கடந்த சில மாதங்களாக, சென்னை மக்களின் வாழ்க்கை தண்ணீரை மையப்படுத்தியே நகர்கிறது. அனைவரிடமும் தண்ணீர் பற்றிய சிந்தனையே ஓடிக்கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. எல்லோர் விழிகளிலும் தண்ணீருக்கான ஏக்கம் வழிந்துகொண்டிருக்கிறது. பலர் தூக்கத்தைத் தொலைத்து பல நாள்களாகின்றன. சிலர் நேரம் காலம் பார்க்காமல் திடீரென எழுந்து தண்ணீர் லாரி வந்துவிட்டதா என்று தெருவில் வந்து பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு மக்களின் மனநிலையையே மாற்றிவிட்டது தண்ணீர்.

தண்ணீர்த் தட்டுப்பாட்டால் உளவியல் சிக்கலில் மக்கள்... தீர்வு என்ன?

சென்னையில் மட்டுமல்ல, தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள எல்லா இடங்களிலும் இதே நிலைதான். எல்லாவற்றையும் தாண்டி மக்கள்

தண்ணீர்த் தட்டுப்பாட்டால் உளவியல் சிக்கலில் மக்கள்... தீர்வு என்ன?

மத்தியில் பெரும் உளவியல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது தண்ணீர். 

``சென்னை மக்களை வாட்டி வதைக்கும் தண்ணீர் பிரச்னை, அவர்களை இயல்பான வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு நெருக்கடியான சூழலுக்குத் தள்ளிவிட்டது. புயல், வெள்ளம் மட்டுமல்ல வறட்சியும் ஒருவகையில் பேரழிவுதான். விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப்பட்ட வேலைகளைச் செய்து பழக்கப்பட்டவர்கள், தண்ணீர் வரும் நேரத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது.  

'சரியாக இந்தந்த நேரத்தில்தான் தண்ணீர் வரும்' என்று இருந்தால் அதற்கேற்ப தங்களது வேலைகளை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், பல பகுதிகளில் எப்போது தண்ணீர் வரும் என்பதே தெரியவில்லை. அங்கு வசிக்கும் மக்கள் அதிக மனச்சுமைக்கு ஆளாவார்கள். அத்துடன் அதிக தூரம் சென்று தண்ணீர் எடுத்துவர வேண்டிய சூழலில் வாழும் மக்கள் இன்னும் நெருக்கடிக்கு ஆளாவார்கள். 

தண்ணீர்த் தட்டுப்பாட்டால் உளவியல் சிக்கலில் மக்கள்... தீர்வு என்ன?

இதுநாள்வரை நான்கு பக்கெட் தண்ணீர் அல்லது பைப்பைத் திறந்துவிட்டு தங்கள் இஷ்டத்துக்குக் குளித்தார்கள். அவர்களைத் திடீரென ஒரு பக்கெட் தண்ணீரில் குளிக்க வேண்டும், அரை வாளி நீரைத்தான் குளியலறைக்குப் பயன்படுத்த வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தால் அது இயல்பாகவே மன அழுத்தத்தை உண்டாக்கும். ஒருநாள் விட்டு ஒருநாள்தான் தண்ணீ ர் கிடைக்கும் என்ற சூழலில் வாழ்பவர்கள், அடுத்த நாளுக்கான தண்ணீரைச் சேமிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். வீட்டில் இருக்கும் பாத்திரங்களில் எல்லாம் தண்ணீரைப் பிடித்து பத்திரப்படுத்த வேண்டும். இதுபோன்ற வேலைகள் கண்டிப்பாக ஸ்ட்ரெஸ்ஸாக மாறும். 

சிறிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு, பாதி வீட்டைத் தண்ணீர் வாளியும் பாத்திரங்களும் அடைத்துக்கொள்ளும். இந்தப் பொருள்கள் எல்லாம் வீட்டை அடைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது ஒருவித மன நெருக்கடி உண்டாகும். வீட்டில் உள்ள குழந்தைகள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தாமல் வீணாக்கினால் பெரியவர்களுக்குக் கோபமும் ஆத்திரமும் ஏற்படும். இந்தத் திடீர் மாற்றம் குழந்தைகளுக்குப் புரியாது. பெரியவர்கள் சூழலுக்கு ஏற்ப உடனடியாக மாறிக்கொள்வதைப்போல, குழந்தைகளால் மாறமுடியாது. அதுவே பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். 

தண்ணீர்த் தட்டுப்பாட்டால் உளவியல் சிக்கலில் மக்கள்... தீர்வு என்ன?

`தண்ணீர் பிரச்னை நிரந்தரமானதல்ல, தற்காலிகமானதுதான்' என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். வெயில் காலம் முடிந்துவிட்டால், தொடர்ச்சியாக மழை பெய்தால் கண்டிப்பாக இந்தப் பிரச்னை மாறும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுவரை இருந்ததுபோல் அல்லாமல் வேலைகளைச் சுருக்கிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, மூன்று வேளையும் சூடாகச் சமைத்து சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர்கள், இரண்டு வேளை மட்டும் அப்படிச் சாப்பிடலாம். ஒருவேளையைத் தியாகம் செய்வதில் தப்பில்லை.

தண்ணீருக்காகத் தூக்கம் கெடுவது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அப்போது நாம் சில யுக்திகளைக் கையாள வேண்டும். தண்ணீருக்காகக் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்தால், அப்போதே மற்ற வேலைகளையும் முடித்துவிட வேண்டும். மதியம் தூங்கி ஓய்வெடுக்கலாம். ஒரு மணி நேரத் தூக்கம் அவர்களுக்கு மிகவும் ரிலாக்ஸாக இருக்கும். அலுவலகங்களில் வேலை செய்பவர்கள், இரவில் தங்கள் இஷ்டத்துக்கு தூங்கச் செல்வதைத் தவிர்த்து, சீக்கிரமாகத் தூங்கிவிடுவது நல்லது.

தண்ணீர்த் தட்டுப்பாட்டால் உளவியல் சிக்கலில் மக்கள்... தீர்வு என்ன?

இந்தப் பாரத்தை ஒருவர் மட்டும் சுமக்காமல், வீட்டிலுள்ள அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும். சூழலைப் புரியவைக்க வேண்டும். அனைவரும் வேலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்களும் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தச் சொன்னால் சிலர் என்னால் முடியாது என்பார்கள். ஏன், சிலர் மனஅழுத்தத்துக்கு உள்ளாவார்கள். அப்படியொரு நிலை ஏற்பட்டால், தண்ணீரே இல்லாதசூழலில் என்ன செய்வோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நேர மேலாண்மையும் இது தற்காலிக பிரச்னைதான் என்கிற பொறுமையும் நிதானமும் இருந்தாலே தண்ணீர்ப் பற்றாக்குறையால் ஏற்படும் மன அழுத்தத்தைத் தவிர்த்துவிட முடியும்'' என்கிறார் உளவியல் ஆலோசகர் ஜெயமேரி. 

Vikatan