Published:Updated:

வரவு எட்டணா செலவு பத்தணா! - கட்டபொம்மன் கோட்டையின் கதை! 

வரவு எட்டணா செலவு பத்தணா! - கட்டபொம்மன் கோட்டையின் கதை! 

நாட்டின் விடுதலைக்குக் குரல்கொடுத்த கட்டபொம்மனின் வீரவரலாறு அனைத்துத் தரப்பினருக்கும் சென்றடைய வேண்டியது அவசியம். அதனால் இந்த நினைவுக்கோட்டை அமைந்திருக்கும் பகுதியில் கூடுதல் போக்குவரத்து வசதிகளையும் அடிப்படைத் தேவைகளையும் செய்துகொடுக்க வேண்டியது அரசின் கடமை. 

வரவு எட்டணா செலவு பத்தணா! - கட்டபொம்மன் கோட்டையின் கதை! 

நாட்டின் விடுதலைக்குக் குரல்கொடுத்த கட்டபொம்மனின் வீரவரலாறு அனைத்துத் தரப்பினருக்கும் சென்றடைய வேண்டியது அவசியம். அதனால் இந்த நினைவுக்கோட்டை அமைந்திருக்கும் பகுதியில் கூடுதல் போக்குவரத்து வசதிகளையும் அடிப்படைத் தேவைகளையும் செய்துகொடுக்க வேண்டியது அரசின் கடமை. 

Published:Updated:
வரவு எட்டணா செலவு பத்தணா! - கட்டபொம்மன் கோட்டையின் கதை! 

வீரத்தின் விளைநிலமாகவும் ஆங்கிலேயர்களுக்குச் சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்தவர் தமிழ்நாட்டு வீரபாண்டிய கட்டபொம்மன். அவருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் நினைவிடம் இருப்பது, அனைவருக்கும் தெரியும்; அதன் தற்போதைய நிலவரம் என்ன தெரியுமா? 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்தக் கட்டபொம்மன் நினைவிடம், தமிழகச் சுற்றுலாத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. இதில், சமீப ஆண்டுகளில் செலவு அதிகமாகவும் வரவு குறைவாகவும் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த எட்டு ஆண்டுக்காலக் கணக்குவழக்கில், கட்டபொம்மன் நினைவுக் கோட்டையை நிர்வகிப்பதில் வந்த வரவைவிட, செலவானது பல மடங்கு அதிகமாக உள்ளது. 
 

வரவு எட்டணா செலவு பத்தணா! - கட்டபொம்மன் கோட்டையின் கதை! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரையைச் சேர்ந்த சி.ஆனந்தராஜ் என்பவர், தகவல் உரிமைச் சட்டத்தின்படி விவரங்களைக் கேட்டிருந்தார். சுற்றுலாத்துறை இணை இயக்குநர் புஷ்பராஜ் இதற்குப் பதில் அளித்துள்ளார். அதன்படி, வரவைவிட பத்து மடங்குவரை கூடுதலாகச் செலவு ஆகியுள்ளது. சமீப ஆண்டுகளாகத்தான் இது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய நேரில் சென்றோம். 

வரவு எட்டணா செலவு பத்தணா! - கட்டபொம்மன் கோட்டையின் கதை! 

இந்தியாவை, பல்வேறு பாளையங்களாகப் பிரித்து வரிவசூல் செய்ததுடன் நாட்டின் வளங்களை எல்லாம் சுரண்டிய ஆங்கிலேய அரசுக்கு எதிராக முதன்முதலாகக் கலகக்குரல் ஒலித்த பாஞ்சாலங்குறிச்சி, நெல்லையிலிருந்து 48 கி.மீ தூரத்தில் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் இருக்கும் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள கட்டபொம்மன் நினைவுக்கோட்டை சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. பள்ளிக்குழந்தைகள், வரலாற்று ஆய்வாளர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்தக் கோட்டைக்கு வருகை தருகிறார்கள்.

சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தக் கோட்டையைத் தமிழகச் சுற்றுலாத்துறை பராமரிக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு ஒரு ரூபாய் கட்டணமும் பொதுமக்களுக்கு இரண்டு ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறை உள்ளிட்ட காலங்களில் இங்கு கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் சுற்றுலாவாக அழைத்துவருகிறார்கள். பிற காலங்களில் ஆள் அரவம் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது. 

பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்த பாளையக்காரரான கட்டபொம்மன் குறித்து வாய்மொழிக் கதைகள் ஏராளமாக இருக்கின்றன. ஆந்திராவில் இருந்து ஆடுகளை மேய்க்கும் தொழிலுக்காக வந்த கட்டபொம்மனின் முன்னோர், பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட  மன்னனுக்கு உதவியதால், அவருக்குப் பின்னர் மன்னராக்கப்பட்டுள்ளனர். 
 

வரவு எட்டணா செலவு பத்தணா! - கட்டபொம்மன் கோட்டையின் கதை! 

கட்டபொம்மனின் முன்னோர், பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை கட்டுவதற்குக் காரணம், அந்த இடத்துக்கு வேட்டை நாயுடன் வந்தபோது அங்கிருந்த முயல், வேட்டை நாயை எதிர்த்து விரட்டியிருக்கிறது. அப்படிப்பட்ட வீரம் மிகுந்த மண்ணிலேயே கோட்டை அமைய வேண்டும் என விரும்பி அந்த இடத்தைத் தேர்வு செய்ததாக வாய்மொழிக் கதைகள் இருக்கின்றன.  

ஆனாலும் கட்டபொம்மனின் முன்னோர்கள் பற்றியும் அந்த வம்சாவழியின் 37-வது மன்னராக வீரபாண்டிய கட்டபொம்மன் பொறுப்பேற்றது தொடர்பாகவும் விரிவாக ஆய்வுசெய்து வரலாறாகப் பதிவுசெய்திருக்கிறார் பேராசிரியர் மாணிக்கம். 

வரவு எட்டணா செலவு பத்தணா! - கட்டபொம்மன் கோட்டையின் கதை! 

`ஆந்திராவிலிருந்து வந்த கட்டபொம்மனின் முன்னோர், ஆற்றுப்பாசனம் இல்லாத கரிசல் காடுகளைத் தேர்வுசெய்து வசித்துள்ளனர். காரணம், அங்குதான் மக்கள் கூட்டம் குறைவாக இருந்திருக்கிறது. அத்துடன், கால்நடைகளை மேய்ப்பதற்கான வசதியான இடமாகவும் இருந்துள்ளது. எட்டயபுரத்துக்கு அருகில் இருக்கும் இந்தப் பகுதியை ஜெகவீர பாண்டியன் என்ற பாளையக்காரர் ஆண்டுவந்துள்ளார். படையெடுப்புகள் மூலம் அவருக்குச் சில துன்பங்கள் வந்தபோது கட்டபொம்மனின் முன்னோர், அவருக்குத் துணையாக இருந்திருக்கிறார்கள். அதனால் அவர்களைத் திசைக்காவலர்களாக நியமித்திருக்கிறார்கள். ஆதி கட்டபொம்மு பற்றி அப்போதைய கலெக்டர் ஜாக்சன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஜெகவீர பாண்டியருக்கு வம்சாவளி இல்லாததால் கட்டபொம்மனுடைய முன்னோர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளனர்’’ என்கிறார் பேரா.மாணிக்கம். 

கிழக்கிந்திய கம்பெனியினர் கட்டபொம்மனின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் இருந்த பாளையக்காரர்களை எல்லாம் ’பாளையக்காரர்கள்’ என அறிவித்த ஆங்கிலேயர், அவர்கள் வரிவசூல் செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்கள். அதற்குக் கட்டபொம்மன்  மறுப்பு தெரிவித்ததால், அவருக்குப் பல்வேறு இடையூறுகளைக் கொடுத்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில், கட்டபொம்மனின் கோட்டை தகர்க்கப்பட்டிருக்கிறது.
 

வரவு எட்டணா செலவு பத்தணா! - கட்டபொம்மன் கோட்டையின் கதை! 

கட்டபொம்மனின் கோட்டையானது கடுக்காய், கருப்பட்டி போன்றவற்றைப் பதனீரில் குழைத்து மிகுந்த உறுதியுடன் கட்டப்பட்டிருக்கிறது. இரண்டு சுவர்களைக் கொண்ட கோட்டையின் சுவருக்கு இடையே காய்ந்த பருத்திச் செடிகளைப் போட்டிருக்கிறார்கள். அதனால் கோட்டையில் பீரங்கியால் சுட்டபோதிலும் கீறல் விழுமே தவிர உடையாது. அந்தக் கீறல்களையும் தயாராக வைத்திருக்கும் கடுக்காய், கருப்பட்டி, பதனீர் கலந்த சுண்ணாம்பால் உடனடியாகப் பூசி புதிதாக்கிவிடுவார்கள்.  

வரவு எட்டணா செலவு பத்தணா! - கட்டபொம்மன் கோட்டையின் கதை! 

இப்படிப்பட்ட கோட்டை பலத்த சிரமத்துக்கு இடையே தகர்க்கப்பட்டிருக்கிறது. மீண்டும் அந்த இடத்தில் கோட்டை கட்டிவிடக் கூடாது என்பதற்காக அங்கு ஏர்பூட்டி உழவு செய்து எருக்கலைச் செடி மற்றும் முட்செடிகளின் விதைகளைத் தூவியிருக்கிறார்கள். அந்த இடம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் தற்போது இருக்கிறது. 

அங்கு நடந்த அகழ்வாய்வின்போது, கட்டபொம்மனின் கோட்டையின் எச்சங்கள் கிடைத்துள்ளன. கோட்டை இருந்த இடத்தின் அடியில் தர்பார் மண்டபம், கல்யாண மண்டபம், அடுக்களை, அந்தப்புரம், சுரங்கப்பாதை போன்றவை இருந்ததன் அடையாளங்கள் காணப்படுகின்றன. கட்டபொம்மனின் அரியணை இருந்த இடத்தில் உயர்ந்த பீடம் காணப்படுகிறது. கோட்டையின் வெளிப்பகுதியில் குதிரை கட்டும் இடங்களும் யானை கட்டும் இடங்களும் காணப்படுகின்றன. 
 

வரவு எட்டணா செலவு பத்தணா! - கட்டபொம்மன் கோட்டையின் கதை! 

அந்த இடத்தின் அருகில், தமிழக அரசால் நினைவுக்கோட்டை அமைக்கப்பட்டு 1974-ல் திறக்கப்பட்டது. நினைவுக்கோட்டையின் மையப்பகுதியில் கட்டபொம்மன் தர்பார் மண்டபத்தில் கையில் வாளுடன் கம்பீரமாக அமர்ந்திருப்பது போன்ற சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச் சுவர்களில் கட்டபொம்மனின் வரலாறு அழகு ஓவியங்களாக வரையப்பட்டு வரலாற்றுக் குறிப்புகளுடன் காணப்படுகின்றன. கட்டபொம்மனின் நான்காவது வாரிசான வீமராஜா இப்போதும் பாஞ்சாலங்குறிச்சியில் வசித்து வருகிறார்.

1799-ம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைத் தகர்க்கும் போரில் ஆங்கிலேயர்கள் தரப்பில் ஐந்து தளபதிகள் மற்றும் 40 சிப்பாய்கள் உயிரிழந்துள்ளனர். கிழக்கிந்திய கம்பெனிப் படையின் லெப்டினண்டுகளான டக்ளஸ், டார்மியஸ், காலின்ஸ், பிலேக், கன்னர் ஆகியோரின் கல்லறைகள் கோட்டைக்கு அருகிலேயே உள்ளன. சிப்பாய்களின் கல்லறைகள் அருகில் உள்ள கிராமத்தில் இருக்கின்றன.  
நினைவுக்கோட்டை அமைந்துள்ள வளாகத்திலேயே கட்டபொம்மன் வழிபட்ட வீரசக்கதேவி கோயில் இருக்கிறது. கட்டபொம்மன் விழாவின்போது, இந்தக் கோயில் விழாவும் நடத்தப்படுகிறது. பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் இதில் கலந்துகொள்கிறார்கள். கட்டபொம்மன் விழாவில் பங்கேற்றால் பதவி பறிபோகும் என அரசியல்வாதிகள் நம்புவதால் அவர்கள் மட்டும் வருவதில்லை. 

வரவு எட்டணா செலவு பத்தணா! - கட்டபொம்மன் கோட்டையின் கதை! 

அதிகாரிகள் தலைமையில் ஆண்டுதோறும் விழா நடத்தப்படுகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள் கட்டபொம்மன் நினைவு ஜோதியைத் தாங்கியபடி, தொடர் ஓட்டமாக வந்து விழாவில் பங்கேற்கிறார்கள். வீரசக்கதேவி கோயிலை அறங்காவலர் குழுவினர் பராமரித்து பூஜைகளை நடத்திவருகிறார்கள். 

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக்கோட்டையில் நான்கு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அத்துடன், ஆண்டுதோறும் பராமரிப்புப் பணிகள் நடக்கின்றன. தற்போது 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பராமரிப்புப் பணிகள் நடக்கின்றன. 

``இத்தகைய பணிகளின் காரணமாகவே ஆண்டுதோறும் வரவைவிடவும் செலவு அதிகம் இருக்கிறது” என்கிறார், மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி சீனிவாசன். 

நாட்டின் விடுதலைக்குக் குரல்கொடுத்த கட்டபொம்மனின் வீரவரலாறு அனைத்துத் தரப்பினருக்கும் சென்றடைய வேண்டியது அவசியம். அதனால் இந்த நினைவுக்கோட்டை அமைந்திருக்கும் பகுதியில் கூடுதல் போக்குவரத்து வசதிகளையும் அடிப்படைத் தேவைகளையும் செய்துகொடுக்க வேண்டியது அரசின் கடமை. 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism