Published:Updated:

ஆஸ்திரேலிய வேலை டு இயற்கை விவசாயம்... ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அசத்தும் இளைஞர்!

ஆஸ்திரேலிய வேலை டு இயற்கை விவசாயம்... ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அசத்தும் இளைஞர்!

"இன்று பல கல்லூரிகளிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் பண்ணையை வந்து பார்வையிடுகிறார்கள். வெற்றிகரமாக இயற்கை விவசாயத்தை எவ்வாறு மேற்கொள்வது என்று கற்றுச் செல்கிறார்கள். என்னைப்போல் ஒருங்கிணைந்த பண்ணையாக இல்லாமல் இருந்தாலும், ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தினாலே நிச்சயமாக இயற்கை விவசாயத்தில் வெற்றி பெறலாம்."

ஆஸ்திரேலிய வேலை டு இயற்கை விவசாயம்... ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அசத்தும் இளைஞர்!

"இன்று பல கல்லூரிகளிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் பண்ணையை வந்து பார்வையிடுகிறார்கள். வெற்றிகரமாக இயற்கை விவசாயத்தை எவ்வாறு மேற்கொள்வது என்று கற்றுச் செல்கிறார்கள். என்னைப்போல் ஒருங்கிணைந்த பண்ணையாக இல்லாமல் இருந்தாலும், ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தினாலே நிச்சயமாக இயற்கை விவசாயத்தில் வெற்றி பெறலாம்."

Published:Updated:
ஆஸ்திரேலிய வேலை டு இயற்கை விவசாயம்... ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அசத்தும் இளைஞர்!

``சாக்லேட் பொருள்களின் அடையாளமான சுவிட்சர்லாந்து, இறைச்சி உற்பத்தியில் முதன்மையான ஆஸ்திரேலியா, பெட்ரோல் உற்பத்தியில் மையமான அரபு நாடுகள் என்று ஒவ்வொரு நாடும் அவர்கள் சார்ந்த வளங்களை உருவாக்குவதிலும் சந்தைப்படுத்துவதிலும் சிறந்து விளங்குகின்றன. ஆனால், இந்தியாவின் முதுகெலும்பு என்று கூறப்படும் விவசாயம் நாளுக்கு நாள் அழிந்துகொண்டுதான் வருகிறது. விவசாயிகள் தினந்தினம் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். இதிலிருந்து மீள அரசும் விவசாயிகளும் பொறுப்புணர்வுடன் புதிய வழிமுறைகளைக் கையாள வேண்டியுள்ளது. அதற்கான சிறிய முன்னெடுப்புகளையே மேற்கொண்டு வருகிறேன்" என்கிறார் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியைச் சேர்ந்த அலிஸ் பாக்.

செங்கிப்பட்டியில் கிட்டத்தட்ட 50 ஏக்கர் பரப்புள்ள நிலத்தில் பழங்கள், காய்கறிகள், மரங்கள், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு, இயற்கை உர  உற்பத்தி என்று ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் பயிற்சி மையத்தை நடத்திவருகிறார், அலிஸ் பாக். கால்நடைக்குக் கொடுக்கும் தீவனங்கள் முதல் பயிர்களுக்கான உரம் வரை அனைத்தும் இங்கே விளைவித்து, இயற்கை முறையில் உருவாக்கப்படுகிறது. துளிகூட செயற்கை இல்லாமல் முழுக்க இயற்கையால் அமைக்கப்பெற்ற இப்பண்ணைக்கு ஒருநாள் காலை வேளையில் சென்றோம். வரவேற்ற அலிஸ் பாக் ஒவ்வோர் இடத்தையும் சுற்றிக் காட்டியபடியே பேசினார்.

ஆஸ்திரேலிய வேலை டு இயற்கை விவசாயம்... ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அசத்தும் இளைஞர்!

``ஆஸ்திரேலியாவின் சிட்னியில் விவசாயம் மற்றும் எம்.பி.ஏ படித்துள்ளேன். நல்ல வேலை, கைநிறைய சம்பளம். ஆனால், எனக்கு நம் நாட்டில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தால் அனைத்தையும் விட்டுவிட்டு இங்கு வந்துவிட்டேன். அதிக நுகர்வோர் இருக்கும் நம் நாட்டில்தான் விவசாயிகள் தோல்வியடைந்துகொண்டிருக்கிறார்கள். அதைப் போக்க, நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கவலை அனைத்து விவசாயிகளுக்கும் உள்ளது. விவசாயத்தில் பல உள்ளார்ந்த முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நிச்சயம் தீர்வைப் பெறலாம். இதற்கு நமக்கு வழிகாட்டியாய் இருந்தவர்தான் நம்மாழ்வார். நம்மாழ்வாரால் கவரப்பட்ட நான் ஊருக்கு வந்தபிறகு 4 வருடம் தொடர்ந்து அவருடன் பயணித்தேன். அனைத்துக் கூட்டங்கள், வழிகாட்டல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற நான், விவசாயிகள் தீர்வுக்கும் ஆரோக்கியமான உணவு முறைக்கும் இயற்கை விவசாயம்தான் தீர்வு என்று உறுதியாக நம்பினேன். 

தற்போது செங்கிப்பட்டியில் ஓர் ஒருங்கிணைந்த பண்ணையை உருவாக்கி உள்ளேன். இதில் திராட்சை, மாம்பழம், கொய்யா உட்பட டிராகன் ஃப்ரூட், கிவி, முள் சீதா போன்ற வெளிநாட்டுப் பழங்களும் மரநெல்லி, தென்னை போன்ற மரங்களும் வளர்க்கிறோம். நாட்டுக் கோழிகள், கறவை மாடுகள், கிர் போன்ற நாட்டு மாடுகளையும் இங்கு வளர்க்கிறோம். உரங்களைப் பொறுத்தவரை பஞ்சகவ்யா, மண்புழு உரம் போன்றவையே பயன்படுத்தி வருகிறேன். மண்புழு உரத்தைப் பொறுத்தவரை, விழுகின்ற தேங்காய் மட்டைகளுடன் மாட்டுச் சாணம் மற்றும் கோமியம் சேர்த்து அரைத்து, அவற்றை மிதமான நிழல் கொண்ட பகுதியில் படுக்கை போன்று அமைத்து மண்புழுவுடன் கலந்து வைத்தால், அவை கலவையாகப் பெருகி உரமாகும். மண்புழு வெளியே வாங்கிக்கொள்கிறோம். இதை அனைத்துச் செடிகளுக்கும் கோழிகளுக்கும் பயன்படுத்தலாம். கால்நடைகளுக்கு ஏழு விதமான தீவனப்பயிர்கள் நாங்களே விளைவித்து வழங்குகிறோம். இதுதவிர இறால் மீனையும் வளர்த்து வருகிறோம். போர்வெல் பாசனம்தான் மேற்கொண்டு வருகிறேன். 

ஆஸ்திரேலிய வேலை டு இயற்கை விவசாயம்... ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அசத்தும் இளைஞர்!

இதுதவிர இயற்கை விவசாயத்தில் பல புதிய பரிசோதனைகளையும் மேற்கொள்கிறோம். உதாரணமாக, அத்திப்பழம், பப்பாளி, பூசணி போன்றவற்றின் விதைகளுடன் மாட்டுச்சாணம் மற்றும் கோமியத்தைக் கலந்து, 1:10 என்ற வீதத்தில் நீர் கலந்து ஒரு டிரம்மில் வைத்தால், அவை நொதித்தல் மூலம் உரமாகிறது. அதை, தாவரத்தின் வேரில் விடுவதன் மூலம் பழங்கள் நல்ல சுவையாகவும் மண் நல்ல வளமாகவும் உருவாகிறது. இதுபோல், புதிய முயற்சிகள் அதிகம் தேவைப்படுகிறது. சந்தைப்படுத்துதலைப் பொறுத்தவரை இப்பொழுதுதான் ஆரம்ப நிலையில் இருக்கிறேன். தற்பொழுது, டெக்னாலஜி பல விஷயங்களைச் சுலபமாக்கியுள்ளது. அருகே இருக்கும் ஊர்களில் சந்தைப்படுத்துவதோடு, இணையம் மூலம், அட்லீஸ்ட் ஒரு வாட்ஸ் அப் க்ரூப்பினால் நமக்கான சந்தையை நேரடியாகப் பெற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இயற்கை உணவுகள் மீதான மக்களின் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. இதன்மூலம், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிக்கலாம். விவசாயிக்கு லாபமும் கிடைக்கும். 

ஆஸ்திரேலிய வேலை டு இயற்கை விவசாயம்... ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அசத்தும் இளைஞர்!

இன்று பல கல்லூரிகளிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் பண்ணையை வந்து பார்வையிடுகிறார்கள். வெற்றிகரமாக இயற்கை விவசாயத்தை எவ்வாறு மேற்கொள்வது என்று கற்றுச் செல்கிறார்கள். என்னைப்போல் ஒருங்கிணைந்த பண்ணையாக இல்லாமல் இருந்தாலும், ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தினாலே நிச்சயமாக இயற்கை விவசாயத்தில் வெற்றி பெறலாம். அதை நோக்கி, இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பலரை இதில் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கிறேன். ஏனெனில், வறண்ட செம்மண் பகுதியான செங்கிப்பட்டியில், இதன் முன்னேற்றத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டுள்ளேன். இது அனைவருக்கும் சாத்தியம்தான்" என்றவர் நிறைவாக 'என்னைப் பொறுத்தவரை இயற்கை விவசாயத்தைச் செய்பவர்கள் யாரும் தோல்வியடையவில்லை' என்றுதான் சொல்வேன்" என்றார்.