Published:Updated:

`நானும் ஒரு விவசாயி!'- நடவுப் பணியைத் தொடங்கினார் உங்கள் எம்.பி

`நானும் ஒரு விவசாயி!'- நடவுப் பணியைத் தொடங்கினார் உங்கள் எம்.பி
`நானும் ஒரு விவசாயி!'- நடவுப் பணியைத் தொடங்கினார் உங்கள் எம்.பி

`நானும் ஒரு விவசாயி!'- நடவுப் பணியைத் தொடங்கினார் உங்கள் எம்.பி

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் முக்கியமான நாடாளுமன்றத் தொகுதி ஆலத்தூர்.  இந்தத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை. கடந்த 36 வருடங்களாக இந்தத் தொகுதியில் பிற கட்சியினர் வெற்றி பெற்றதில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் காங்கிரஸ் கட்சி இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைத்தவர் ஓர் இளம் பெண். 32 வயதான ரம்யா ஹரிதாஸ் என்பவர்தான் அவர். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிஜூவை ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் ரம்யா.  

`நானும் ஒரு விவசாயி!'- நடவுப் பணியைத் தொடங்கினார் உங்கள் எம்.பி

கேரளா மட்டுமல்ல, இந்தியாவே ரம்யாவை வியந்து பார்த்தது. ரம்யாவின் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றமும் எளிமையான அணுகுமுறையும் ஆலத்துர் தொகுதி மக்களைக் கவர. இதனால், ஓட்டுகளை ஒட்டுமொத்தமாகக் குத்திவிட அபாரமாக வெற்றி பெற்றார். கோழிக்கோட்டைச் சேர்ந்த ரம்யா பட்டியலினத்தைச் சேர்ந்தவர். விவசாயம்தான் அவரின் உயிர் மூச்சு. தன் அரசியல் பணிகளுக்கிடையே விவசாயத்தை ரம்யா மறந்துவிடவில்லை. தற்போது, கேரளாவில் மழை பெய்துவருவதால் பரவலாக நடவுப் பணிகள் நடந்துவருகின்றன. ரம்யாவும் தான் ஒரு எம்.பி என்பதை மறந்துவிட்டு விவசாயியாக மாறியுள்ளார். தன் நிலத்தில் நாற்று நடும் பணிகளைத் தொடங்கினார். டிராக்டர் கொண்டு தன் நிலத்தைத் தானே உழுதார். பின்னர், சக தொழிலாளர்களுடன் சேர்ந்து ரம்யாவும் நாற்று நட்டு நடவுப் பணிகளை மேற்கொண்டார். 

`நானும் ஒரு விவசாயி!'- நடவுப் பணியைத் தொடங்கினார் உங்கள் எம்.பி

ரம்யாவின் தந்தை சாதாரண கூலித் தொழிலாளி, தாயார் டெய்லர். இந்திரா அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அரசு அளித்த இலவச வீட்டில் வசித்து வருகிறார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் வெற்றி பெற்ற ஒரே பெண் எம்.பி இவர்தான். கேரள வரலாற்றில் நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட இரண்டாவது பட்டியலினப் பெண் என்கிற பெருமையும் ரம்யாவுக்கு உண்டு. 

அடுத்த கட்டுரைக்கு