Published:Updated:

`அதிகமான வரி போடுவதைத் தடுத்துள்ளோம்!'- ஜிஎஸ்டி 2-ம் ஆண்டு குறித்து அருண்ஜெட்லி

`அதிகமான வரி போடுவதைத் தடுத்துள்ளோம்!'- ஜிஎஸ்டி 2-ம் ஆண்டு குறித்து அருண்ஜெட்லி
`அதிகமான வரி போடுவதைத் தடுத்துள்ளோம்!'- ஜிஎஸ்டி 2-ம் ஆண்டு குறித்து அருண்ஜெட்லி

`அதிகமான வரி போடுவதைத் தடுத்துள்ளோம்!'- ஜிஎஸ்டி 2-ம் ஆண்டு குறித்து அருண்ஜெட்லி

`அதிகமான வரி போடுவதைத் தடுத்துள்ளோம்!'- ஜிஎஸ்டி 2-ம் ஆண்டு குறித்து அருண்ஜெட்லி

ஜிஎஸ்டி அறிமுகமாகி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதையொட்டி, ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபோது, மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். 

"நுகர்வோருக்கும் வரி செலுத்துவோருக்கும் நட்புறவாக ஜிஎஸ்டி இருக்கிறது. அதை அமல்படுத்துவது அரசியல்ரீதியாக பாதுகாப்பானது அல்ல, ஜிஎஸ்டி-யால் பல்வேறு நாடுகளில் அரசுகள் தோற்றுப்போய்விட்டன என்றெல்லாம் எங்களைப் பலர் எச்சரித்தனர். ஆனால்,  ஜிஎஸ்டி சுமுகமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 2017-ம் ஆண்டு ஜூலையில் இருந்து 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 8 மாதங்களில், மாதாந்தர சராசரி வருவாய் ரூ.89,700 கோடியாக இருந்தது. 2018-2019 நிதியாண்டில், இந்த வருவாய் 10% உயர்ந்து, ரூ.97,100 கோடியாக உயர்ந்தது. ஏற்கெனவே 20 மாநிலங்கள், தங்களின் வருவாயில் 14%  உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. 

தற்போது, ஜிஎஸ்டி  5% , 12% , 18% , 28% என 4 அடுக்குகள் கொண்டதாக உள்ளது. 28% என்பது, ஆடம்பர பொருள்கள், புகையிலைப் பொருள்கள் போன்றவற்றுக்கு மட்டுமே விதிக்கப்படுகின்றன. சாதாரண மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பொருள்கள், 5% வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால், கடந்த 2 ஆண்டுகளில் ரூ.90,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதிகம்பேர் வரி செலுத்துவதால், வரி வருவாய் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, 12%  மற்றும் 18% என்கிற 2 அடுக்குகளையும் ஒருங்கிணைத்து ஒன்றாக்கிவிட வாய்ப்புள்ளது. அதன்பிறகு, அந்த ஒன்றுபட்ட வரி விகிதம், ஏற்கெனவே உள்ள 5 சதவிகிதம் என 2 அடுக்குகள் மட்டுமே கொண்டதாக ஜிஎஸ்டி மாற்றப்படக்கூடும்.

இந்த வரி விதிப்புக்கு முன்பாக, பணக்காரர்களும் ஏழைகளும் அனைத்து பொருள்களுக்கும் ஒரே வரியைச் செலுத்தினர். ஆனால், ஜிஎஸ்டி வரி, சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கு அதிகமான வரி போடுவதைத் தடுத்துள்ளது. ஏழைகளே இல்லாத வளர்ந்த நாடுகளில்தான், ஒற்றை அடுக்கு கொண்ட ஜிஎஸ்டி சாத்தியம் ஆகும். செருப்புக்கும் காருக்கும் ஒரே விதமான வரியை விதிக்க முடியாது என்பதால், வறுமைக் கோட்டுக்கு கீழ் ஏராளமான மக்கள் வாழும் நாடுகளில், ஒற்றை அடுக்கு வரி சாத்தியமல்ல" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு