Published:Updated:

45 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச கன மழை! - முடங்கிய மும்பை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
45 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச கன மழை! - முடங்கிய மும்பை
45 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச கன மழை! - முடங்கிய மும்பை

45 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச கன மழை! - முடங்கிய மும்பை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த 45 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச கன மழையால் மும்மை மாநகரமே ஸ்தம்பித்துள்ளது. மும்பையில் கடந்த மூன்று நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மும்பை மாநகரின் பெரும்பாலான பகுதிகள் மழைவெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ரயில் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளன. கனமழைக்குத் தாங்காமல் சுவர் இடிந்து விழுந்ததில் இதுவரை 21 பேர் வரை பலியாகியுள்ளனர்.

45 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச கன மழை! - முடங்கிய மும்பை

மும்பை விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம், ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளானதால் அந்த ஓடுபாதை மூடப்பட்டு அடுத்த ஓடுபாதையில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன்காரணமாக 52 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 55 விமானங்கள் வழக்கத்தைவிடத் தாமதமாக இயக்கப்படுகின்றன.

மும்பையில் நேற்றிரவு (திங்கள்) முதல் இன்று காலை வரை ஒரே நாளில் மும்பை சாந்தாகுரூஸ் வானிலை மையப்பகுதியில் 375.2 மி.மீ மழை பெய்துள்ளது. 1974 ஜூலை மாதத்திலும் ஒரே நாளில் இதே அளவான 375.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 2005 ஜூலை 26-ம் தேதி, மும்பையில் ஒரே நாளில் 944 மி.மீ மழை பெய்ததுதான் கடந்த 45 ஆண்டுகளில் அதிகபட்ச மழையளவாகும். அதற்கடுத்தபடியாக நேற்றைய தினம் கனமழை பெய்துள்ளது. 

45 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச கன மழை! - முடங்கிய மும்பை

இதுகுறித்து மகாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியபோது, "கடந்த 45 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச கன மழை மும்பையில் பெய்துள்ளது. ஜுன் மாதம் முழுவதும் பெய்யக்கூடிய சராசரி மழை, கடந்த மூன்றே நாள்களுக்குள் பெய்துள்ளது" என்றார். நாளை (ஜூலை 3) முதல் ஜூலை 5 வரை சராசரியாக நாளொன்றுக்கு 200 மி.மீ அல்லது அதைவிட அதிகமாகக் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு